டயட் இருப்பது ஆபத்து !

diet.jpg
உணவுக் கட்டுப்பாடு செய்து உடல் எடையைக் குறைப்பதில் எந்த பயனும் இல்லை ஏனெனில் இழந்த எடையை விட அதிக எடையை விரைவிலேயே அவர்கள் அடைவார்கள் என்று நிரூபித்திருக்கிறது அமெரிக்க ஆராய்ச்சி ஒன்று.

மிக விரிவாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் முதல் ஆறு மாதங்களில் எடை இழந்து விட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் இழந்ததை விட அதிகமான எடையையே பெரும்பாலானோர் பெற்றிருப்பதாக தெரிய வந்துள்ளது.

அடிக்கடி எடை குறைந்து குறைந்து அதிகரிப்பதால் இதய நோய், வலிப்பு நோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இப்படி உணவுக் கட்டுப்பாட்டினால் எடை குறைப்பதை விட எடை குறைக்காமல் இருப்பதே ஒரு வகையில் நல்லது என்று அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

உடல் எடையைக் குறைக்க டயட் இருப்பது நல்லதல்ல என்பதை அறிந்து தானோ ‘ஓடி விளையாடு பாப்பா’ என்றான் நம் பாரதி.

1 மறுமொழி

  1. cheena (சீனா) சொன்னது,

    ஜனவரி 1, 2008 இல் 10:04 பிற்பகல்

    ஒவ்வொரு பதிவிற்கும் இடப்படும் படங்கள் அருமையாக இருக்கிறது. டயட் இருப்பது நல்லதல்ல – நம்பமுடியவில்லை


மறுமொழியொன்றை வழங்குக