பெண்களுக்கு வரும் மார்பகப் புற்று நோய்க்கும் மாமிச உணவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பிரிட்டன் ஆராய்ச்சி ஒன்று தெரிவிக்கிறது.
குறிப்பாக சிவப்பு நிற மாமிச உணவுகளான பன்றி, மாடு போன்ற மாமிச உணவுகளை தினமும் ஐம்பது கிராம் உண்பவர்களுக்கு அறுபத்து நான்கு விழுக்காடு புற்றுநோய் ஆபத்து இருப்பதாகவும் அந்த ஆராய்ச்சி அறிக்கை தெரிவிக்கிறது.
இத்தகைய மாமிச உணவுகளில் காணப்படும் அதிகப்படியான கொழுப்பே இதற்குக் காரணம் என்றும், இத்தகைய உணவுகளை தொடர்ந்து உண்பதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கை அறிவுறுத்துகிறது.
இளம் பெண்கள் அதிகப்படியான சிவப்பு மாமிச உணவுகளை உட்கொள்வது அவர்களுக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பை இரட்டிப்பாக்குவதாகவும் அந்த அறிக்கை அச்சுறுத்துகிறது.
பெண்கள் சரியான உணவுப் பழக்கமும், உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதும் ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும் என லண்டனின் புற்றுநோய் ஆராய்ச்சியாளர் ஹென்றி தெரிவிக்கிறார்










cheena (சீனா) சொன்னது,
ஜனவரி 1, 2008 இல் 10:01 பிற்பகல்
மாமிச உணவு – மார்பகப் புற்று நோய் – பிரிட்டனில் ஆராய்ச்சி முடிவுகள் – ஆதாரம், அடிப்படை, சூழ்நிலை, முடிவுக்கௌப் பலப்பல காரணங்கள் இருக்கலாம்