
கலைஞர் தொலைக்காட்சியை ஒரேயடியாக ஜனரஞ்சகமாகவும் காட்டாமல் தமிழன் தொலைக்காட்சி போல எதிர் துருவத்துக்கும் செல்லாமல் ஒரு புது மாதிரியாகக் கொண்டு வரவேண்டும் என்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் கலைஞர் தொலைக்காட்சிக்காக நிகழ்ச்சிகள் தயாரித்து வழங்குகின்றன. தொடர்களும் அது ஒளிபரப்ப வேண்டிய நேரங்களும் முடிவு செய்யப்பட்டு விட்டது. உதாரணம் ‘கூடல் நகர்’ திரைப்படத்தை எடுத்த குழுவினரின் மகராசி தொடர் மதியம் பன்னிரண்டு முதல் பன்னிரண்டரை வரை ஒளிபரப்பாகிறது.
கலைஞர் தொலைக்காட்சியின் மிக முக்கியமான அம்சம் பொன்னியின் செல்வன் தொடர். நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் தயாராகிறது இந்தத் தொடர். திறமையானவர்கள் விஜய் தொலைக்காட்சியில் இருக்கிறார்கள் என்பது இன்றைக்கு எழுதப்படாத விதியாகிவிட்டது போல. இந்தத் தொடரை இயக்குவது காத்து கருப்பு இயக்குனர் !
இந்தத் தொடருக்கான பிரம்மாஆஆஆஆண்டமான அரங்கு திரைப்பட செட் களை மிஞ்சும் என்று அந்தத் தொடரில் பணிபுரியும் எனது நண்பன் ஒருவன் சொன்னான். அது எனது ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது.
பொன்னியின் செல்வனைப் பார்க்க வேண்டும் என்று உங்களைப்போல ஆர்வமாய் இருக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். ஆனால் ஒன்று கோலங்கள் அபியும் – ஆதியும் சண்டை போடும் நேரத்தில் ஒளிபரப்பானால் வீடுகளில் செல்வன்களுக்கும் செல்விகளுக்குமிடையே எதைப் பார்ப்பது என்று ஒரு சண்டை வர வாய்ப்பிருக்கிறது. சொல்லிபுட்டேன்.










Abigail சொன்னது,
ஆகஸ்ட் 21, 2007 இல் 7:32 பிற்பகல்
Good News!
Nadodi சொன்னது,
ஆகஸ்ட் 22, 2007 இல் 10:02 மு.பகல்
ahaaaa…
avalai thondum seithi!!!!!!
kadal Pura epoothunu kettu sollunga xavier…..
சீனா சொன்னது,
நவம்பர் 25, 2007 இல் 11:14 மு.பகல்
கலைஞர் தொலைக்காட்சி தனித்து நிற்க வேண்டி திட்டமிடுகிறது