Sexercise : உடல் நலம் பேணும் கலவி!!!

sex.jpg
காதலர் தினம் நெருங்கி வரும் வேளையில் கலவியின் பயன்கள் குறித்த கட்டுரை ஒன்றை The National Health Service (NHS) வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலவி உடலை உறுதியாக்கி, இதய நோய்கள் வரும் வாய்ப்பைக் குறைத்து உடலை இளமையாக வைத்திருக்கிறது என்று சிலிர்ப்பூட்டும் அறிக்கை வெளியிட்டு தம்பதியரை உற்சாகமூட்டியிருக்கிறது.

கலவியினால் உடலிலுள்ள அத்தனை நரம்புகளும், அணுக்களும் புத்துணர்ச்சி பெறுகின்றன என்றும், புற்று நோய் வரும் வாய்ப்பைக் கூட கலவி குறைக்கிறது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

கலவியின் உச்சத்தில் வெளியாகும் எண்டோர்பின் செரிமானத்துக்கும், உடலிலுள்ள சுருக்கங்களை விலக்கி தோல் இளமையடையவும் உதவுகிறது என்றும் அதிக கலோரிகளை கலவி கரைக்கிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சில மருத்துவர்கள் இதை மறுக்கின்றனர். அறிவியல் பூர்வமாக இவை நிரூபிக்கப்படவில்லை என்ற அவர்களுடைய மறுப்புகளையெல்லாம் NHS நிராகரித்துவிட்டது. இவை நீரூபிக்கப்பட்ட உண்மைகளே என தனது தரப்பு வாதத்தை அது முன்வைக்கிறது.

இது மட்டுமன்றி கலவியினால் உடலில் ஜலதோஷம், உடல்வலி போன்ற சிறு சிறு பலவீனங்கள் வரும் வாய்ப்பும் குறைகிறதாம். எலும்புகளுக்கும், தசைகளுக்கும் கூட கலவி வலுவூட்டுகிறதாம்.

நமது பழங்கால பஞ்சாங்கங்கள் சொல்வதற்கு நேர் மாறாக இந்த அறிக்கை இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

எப்படியோ, உற்சாகமான உடற்பயிற்சிகளும் உலகில் இருக்கின்றன என்பதை சொல்லும் இந்த அறிக்கையை கலவியர்கள் மன்னிக்கவும் காதலர்கள் வரவேற்பார்கள் என்பதில் ஐயமில்லை.

21 மறுமொழிகள்

  1. பெப்ரவரி 14, 2008 இல் 2:31 மு.பகல்

    அடா அடா அடா படிக்கிறப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கு. உடற்பயிற்சி இதுதான்னு இவ்ளோ நாள் தெரியாமப் போச்சே. :)

  2. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 14, 2008 இல் 10:13 மு.பகல்

    “உடற்பயிற்சி செய்றீங்களான்னு” யாராச்சும் கேட்டா இனிமே உஷாரா இருங்க :)

  3. ஒளிர்ஞர் சொன்னது,

    மார்ச் 14, 2008 இல் 10:58 மு.பகல்

    இந்தியப் பஞ்சாங்கங்கள் எல்லாம் குப்பைகள்தாம். அவை கலவிகளைப் பற்றி கூட அறிவியலுக்குப் புறம்பான பல கருத்துகளை உளறி வைத்துள்ளன. அவற்றை வைத்து பழனி லேகிய வைத்தியர்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

  4. சேவியர் சொன்னது,

    மார்ச் 14, 2008 இல் 4:50 பிற்பகல்

    சரியா சொன்னீங்க. சில தொலைக்காட்சிகளில் எப்போ பாத்தாலும் போஸ்டர் மாதிரி அவங்க முகத்தையே ஒட்டி வெச்சிருக்காங்க.

  5. ஜூன் 14, 2008 இல் 3:59 பிற்பகல்

    கிரிஜா மணாளன் சொல்றது…..

    என்னத்த சொல்றது? அந்தக் காலத்துல நம்ம வாத்ஸாயனர் எழுதி வெச்சுட்டுப்போன காம சாஸ்திரத்துல இல்லாத விஷயங்களா இப்போ மேனாட்டான் புதசா கண்டுபுடிச்சிட்டான்? போங்க சார்!

  6. சேவியர் சொன்னது,

    ஜூன் 16, 2008 இல் 11:05 மு.பகல்

    நம்ம ஆட்கள் எல்லாத்தையும் எழுதி வெச்சுட்டு, பூச்சாண்டி பிடிச்சுட்டு போகும் தொடாதீங்கன்னு சொன்னாங்க…

    வெளிநாட்டு காரன் ஊக்கப்படுத்தறான்.. அவ்வளவு தான் வித்யாசம்

  7. மூர்த்தி சொன்னது,

    ஜூலை 9, 2008 இல் 9:56 பிற்பகல்

    கலவியில் கொடிகட்டி பறந்த தமிழன் அதில் கோட்டை விட்டதால் தான் இன்று பல துறைகளிலும் தாழ்ந்து கிடக்கிறான். நாம் வெற்றி பெற வேண்டுமாயின் மீண்டும் நாம் நம் பழந்தமிழ் கலவியல் ஏடுகளை ந்னகு கற்று அதை கடைபிடிக்க வேண்டும்.

  8. சேவியர் சொன்னது,

    ஜூலை 10, 2008 இல் 10:17 மு.பகல்

    பின்னிட்டீங்க மூர்த்தி :)

  9. வீரபாகு சொன்னது,

    ஆகஸ்ட் 28, 2008 இல் 2:47 மு.பகல்

    கேளம்பீட்டோம்ள நாங்களும்….

  10. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 28, 2008 இல் 2:09 பிற்பகல்

    கொஞ்சம் லேட்டா கிளம்பிட்டீங்களோ ;)

  11. ramanuja சொன்னது,

    ஆகஸ்ட் 31, 2008 இல் 11:06 மு.பகல்

    midj;J kWnkhipAK rpwg;G

  12. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 1, 2008 இல் 10:37 மு.பகல்

    என்ன கோபம் ராமானுஜா…

  13. Tamilan சொன்னது,

    ஜனவரி 17, 2009 இல் 9:37 பிற்பகல்

    kalavinna eannamma,,,,,

  14. Tamilan சொன்னது,

    ஜனவரி 17, 2009 இல் 9:44 பிற்பகல்

    ayyo anna british karan eanna thaan kandupidichalum condom pottu pannina nalla irukkathunnu namma aalunga thaan solluran. companykaran vitta sabamo eannavo namma aalungalukku three monthlayea hiv vanthuduthu.

  15. M. Selva Kumar சொன்னது,

    ஜனவரி 25, 2009 இல் 4:14 பிற்பகல்

    மறுமொழியொன்றை வழங்கு

  16. சேவியர் சொன்னது,

    ஜனவரி 27, 2009 இல் 5:54 பிற்பகல்

    நீங்க சொல்றதும் சரிதான் தமிழன்

  17. சேவியர் சொன்னது,

    ஜனவரி 27, 2009 இல் 5:55 பிற்பகல்

    //kalavinna eannamma,,,,,//

    இந்த ‘மேட்டர்’ நிஜமாவே தெரியாதா ?

  18. subash சொன்னது,

    பெப்ரவரி 24, 2009 இல் 8:49 பிற்பகல்

    புரதங்கள் அமினோ அமிலங்களினால் ஆனவை. இவை உயிர்வாழ்வினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பல வேலைகளை செய்வதற்கு இன்றியமையாத பொருளாகும். பெரும்பாலும் உடலிலுள்ள புரத அளவில் பாதியளவு தசை வடிவில் அமைந்துள்ளன. புரதத்தின் தரமானது உணவில் அமைந்துள்ள அத்தியாவசியமான அமினோ அமிலங்களைப் பொறுத்து அமைகிறது.

    புரதத்தின் செயல்பாடுகள்
    புரதமானது உடலில் ஏற்படக்கூடிய முக்கிய வேதியியல் மாற்றச் செயல்களுக்கு என்ஸைம் மற்றும் ஹார்மோன் வடிவிலும் தேவைப்படுகிறது. குழந்தை மற்றும் விடலைப் பருவத்தில் உடல் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான ஆதாரப்பொருட்களை புரதங்கள் தருகின்றது. வளர்ந்தவர்களில் தேய்மானம் மற்றும் சேதாரத்தினால் ஏற்படும் இழப்புகளை பராமரிக்க புரதங்கள் உதவியாயிருக்கின்றன.
    கற்ப்பகாலம் மற்றும் தாய்ப்பால்கொடுக்கும் காலங்களில் தாய்சேய் இருவரின் உடற்திசு வளர்ச்சிக்கும் மற்றும் பால் சுரப்பதற்கும் கூடுதலான புரதம் தேவைப்படுகிறது

    உணவில் எடுத்துக்கொள்ள வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட புரதத்தின் அளவு
    இறைச்சியில் உள்ள புரதங்கள் மிகவும் உயர்ரக புரதங்களாகும். அவற்றிலிருந்து உடலுக்கு தேவையான அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் சரியான விகிதாசாரத்தில் கிடைக்கிறது. சைவ உணவு பழக்கமுள்ளவர்களுக்கும் தானியங்கள் மற்றும் முந்திரிப்பருப்பு, நிலக்கடலை போன்ற பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளும்போது போதுமான புரதங்கள் கிடைக்கின்றது. பால் மற்றும் முட்டையில் நல்ல தரமான புரதங்கள் உள்ளன. பயறு வகைகள், கடலை மற்றும் எண்ணெய் வித்துக்கள், பால் மற்றும் பாலிலிருந்து கிடைக்கும் பொருட்கள், இறைச்சி, மீன் மற்றும் கோழி இறைச்சி போன்றவை புரதம் அதிக அளவில் உள்ள சில பொருட்களாகும். தாவர உணவுகளில், சோயாபீன்ஸில் மிக அதிகளவு புரதம் கிடைக்கின்றது. இவை 40 சதம்வரை புரதங்களை கொண்டவை. 57 கிலோ உடல் எடை கொண்ட 16-18 வயதுடைய ஒரு ஆணுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் புரதத்தின் அளவு 78 கிராம் ஆகும். அப்படியிருக்க 50 கிலோ எடைகொண்ட அேத வயதை சேர்ந்த பெண்ணிற்கு ஒரு நாளைக்கு 63 கிராம் புரதம் தேவைப்படுகிறது. கற்பிணி பெண்களுக்கு 65 கிராம் புரதம் தேவைப்படுகிறது. பால் கொடுக்கும் காலங்களில் (குழந்தை பிறந்த 6 மாத காலம்வரை) பெண்களுக்கு ஒரு நாளைக்கு 75 கிராம் புரதம் தேவைப்படும்.

    உணவுப் பொருட்கள்

    சாப்பிடக்கூடிய பகுதியில் உள்ள புரதத்தின் அளவு (கிராம்/100 கிராம்/ )

    சோயாபீன்ஸ்

    43.2

    கொண்டக்கடலை, உளுந்து, பச்சை பயறு மற்றும் துவரை

    22

    நிலக்கடலை, முந்திரி மறறும் பாதாம் பருப்பு

    23

    மீன்

    20

    இறைச்சி

    22

    பால்(பசு)

    3.2

    முட்டை

    13.3 (ஒரு முட்டையில்)

  19. subash சொன்னது,

    பெப்ரவரி 24, 2009 இல் 8:51 பிற்பகல்

    inntha lista yeean anuppirukkean nu pakkurinkala? kalavikku ithu help pannum

  20. Joe சொன்னது,

    மார்ச் 31, 2009 இல் 6:43 மு.பகல்

    கலவி நல்ல உடற்பயிற்சி தான்! தினமும் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாக வாழுங்கள் நண்பர்களே! ;-)

  21. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 10, 2009 இல் 10:39 மு.பகல்

    //கலவி நல்ல உடற்பயிற்சி தான்! தினமும் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமாக வாழுங்கள் நண்பர்களே! //

    முறையான முறையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.. வேலி தாண்டாமல் ;)


மறுமொழியொன்றை வழங்குக