முட்டை உண்டால் மரணம் நெருங்கும்.

முட்டை மீது அலாதி விருப்பம் கொண்டிருக்கிறீர்களா ? தினமும் முட்டை சாப்பிடவேண்டும் போலிருக்கிறதா ? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தருவதற்காகவே வந்திருக்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று.

வாரம் ஏழு முட்டைகள் அல்லது அதற்கு மேல் உண்பவர்களுக்கு மரணம் விரைவிலேயே வரும் வாய்ப்பு 23 விழுக்காடு அதிகரிக்கும் என்பதே அந்த ஆய்வு!

அதிலும் குறிப்பாக நடுத்தர வயதுடையவர்கள் இந்த எல்லையைத் தாண்டி முட்டையை உட்கொண்டால் ஆபத்து அதிகமாம்.

நீரிழிவு நோயாளிகள் எனில் முட்டையின் பக்கம் பார்வையைக் கூட திருப்பக் கூடாதாம். அவர்கள் ஒரு முட்டை சாப்பிட்டாலும் அது அவர்களுக்கு இன்னலை உண்டாக்கி விடக் கூடும். விரைவில் மரணமடையும் வாய்ப்பு 50 விழுக்காடு அதிகரிக்கும். இப்படி அடுக்கடுக்காய் சொல்லி முட்டை பிரியர்களின் விருப்பத்துக்கு முட்டுக் கட்டை போட்டிருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதய நோய், வலிப்பு போன்ற பல நோய்களை இந்த “அதிக முட்டை உண்ணும் பழக்கம்” இழுத்துக் கொண்டு வந்து நமது உடலுக்குள் புகுத்தி விடுகிறது. முட்டையில் காணப்படும் அதிகப்படியான கொழுப்புச் சத்து இதன் காரணமாய் இருக்கலாம் எனத் தெரிகிறது.

இந்த ஆய்வை நிகழ்த்திய ஹார்வேர்ட் குழுவினர் சுமார் இருபத்து ஏழு ஆண்டுகளாக, இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களை ஆய்வு செய்து இந்த முடிவை எட்டியிருக்கின்றனர்.

இதய நோய்க்கும் முட்டைக்கும் இடையே நிரூபிக்கப்பட்ட தொடர்பு ஏதும் இல்லையென்றாலும் இருபது ஆண்டு இடைவெளியில் அதிக முட்டை சாப்பிட்டவர்களில் 23 விழுக்காட்டினர் மரணமடைந்திருக்கிறார்கள் என்பது முட்டை உணவின் பாதுகாப்பற்ற தன்மையை விளக்குகிறது..

எனினும் அதிகபட்சமாக ஆறு முட்டைகள் வரை உண்பது கெடுதலை ஏற்படுத்துவதில்லையாம். முட்டையும் எல்லா உணவு வகைகளையும் போன்றதே ! மிக நன்று எனவோ, மிகவும் கெடுதல் எனவோ தெளிவான நிர்ணயம் செய்ய முடியாது எனவும் அவர்கள் தங்கள் ஆய்வில் தெரிவித்திருக்கின்றனர்.

முட்டை மீதான இந்த ஆராய்ச்சி “அளவோடு உண்டு வளமோடு வாழ” நம்மை எச்சரிக்கிறது.

study published in the American Journal of Clinical Nutrition.

34 மறுமொழிகள்

  1. sankar சொன்னது,

    April 9, 2008 இல் 9:04 பிற்பகல்

    முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டால் நீங்கள் சொல்வது போல் நடக்க வாய்ப்பு இல்லை. மஞ்சள் கரு உண்டால் பல உபாதைகளுக்கு ஆளாக நேரிடும் என்பது திண்ணம் ஏனென்றால் அதில் அதிக அளவு கொழுப்புச் சத்து உள்ளது.
    அதிக முட்டை உண்பவர்கள் வேகவைத்த முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு மஞ்சள் கருவை தூக்கி எரிந்துவிடுவது நல்லது. ஆஃப் பாயில் எனப்படும் புல்ஸ் ஐ சாப்பிடுவதைத் தவிர்ப்பது சாலச்சிறந்தது. ஆம்லெட், பொரியல் சமைத்து சாப்பிடுபவர்கள் அதிக எண்ணிக்கையில் சாப்பிடுவது இல்லை.

  2. senshe சொன்னது,

    April 9, 2008 இல் 10:50 பிற்பகல்

    அய்யய்யோ.. முட்டைய சைவத்துல சேத்துட்டதா நம்ப வச்சு இன்னிக்கே எமனுக்கு சொல்லி அனுப்பறாங்களே :( (

  3. Pulliraajaa சொன்னது,

    April 9, 2008 இல் 11:23 பிற்பகல்

    நீங்க சொல்றது சரிதான் சார்!!!!!!!!!!!!

    தினமும் முட்டை வாங்குறாய் பிற்காலத்துக்கு நல்லதில்ல என டீச்சர் சொன்னா.
    இதைக் கண்டுபிடிக்க அமெரிக்கனுக்கு 27 வருசம் தேவைப்பட்டிருக்கா?
    புத்தியில்லாத பசங்க‌

    புள்ளிராஜா

  4. bashakavithaigal சொன்னது,

    April 10, 2008 இல் 8:21 மு.பகல்

    athanaalathaan muzu kozia naan saaptren

  5. முத்துக்குமார் சொன்னது,

    April 10, 2008 இல் 8:46 மு.பகல்

    அடப்பாவிகளா !!! தெனமும் ஜிம்-முக்கு போறதுக்கு முன்னாடி ஒடம்புக்கு சக்தி வேணுமே-ன்னு ரெண்டு முட்டைகள வேகவச்சு உள்ள தள்ளிட்டு போயிட்டுருந்தேன். அப்டீனாக்கா வாரத்துக்கு 10 முட்டை ? (சனி ஞாயிறு ஜிம்முக்கு லீவு உட்டுறது வழக்கம், ஹி..ஹி) அய்யோடா !!!

    இந்த வெள்ள கரு சமாசாரம் பத்தி 2 குறிப்புகள் :

    - இணையத்துல தேடினதுல வெள்ளை கருல புரோட்டீன்தான் அதிகமா இருக்கறதாவும், மஞ்சள் கருல சுலபத்துல கரையாத கொழுப்பு அதிகமா இருக்கறதாவும் தெரிஞ்சுது.
    - கமல் வேகவச்ச வெள்ளை கரு மட்டும்தான் சாப்புடுவாராம்
    - சமீபத்துல குமுதத்துல வைரமுத்து, ரெண்டு பேர உதாரணம் காட்டி சொன்னாரு. ஒருத்தர் எஸ்.எஸ்.ஆர், இன்னொருத்தர் பேரு சட்டுனு ஞாபகம் வரலை. (தங்கவேலு ?) முன்னவர் வெறும் வெள்ள கரு மட்டும் சாப்பிடறவர், ஆரோக்கியமா இருக்கார். பின்னவர் இருபது முட்டைகளை பால்ல ஊத்தி அடிப்பாராம், கெளம்பிட்டார் முன்னாடியே !

    இனி வெள்ளைக்கருவ மட்டும் உள்ள தள்ளிட்டு மஞ்சள வெளில தள்ளிடவேண்டீதான்.

    நன்றி நண்பரே !

    அன்புடன்
    முத்து

  6. சேவியர் சொன்னது,

    April 10, 2008 இல் 10:38 மு.பகல்

    //முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டால் நீங்கள் சொல்வது போல் நடக்க வாய்ப்பு இல்லை//

    உண்மை தான். ஆசை யாரை விட்டது !

  7. சேவியர் சொன்னது,

    April 10, 2008 இல் 10:39 மு.பகல்

    //அய்யய்யோ.. முட்டைய சைவத்துல சேத்துட்டதா நம்ப வச்சு இன்னிக்கே எமனுக்கு சொல்லி அனுப்பறாங்களே :( ( //

    முட்டையை சைவத்தில் சேர்த்தது எல்லோருக்கும் வீடு பேறு அளிக்கத் தான் போலிருக்கிறது :)

  8. சேவியர் சொன்னது,

    April 10, 2008 இல் 10:39 மு.பகல்

    //தினமும் முட்டை வாங்குறாய் பிற்காலத்துக்கு நல்லதில்ல என டீச்சர் சொன்னா.
    இதைக் கண்டுபிடிக்க அமெரிக்கனுக்கு 27 வருசம் தேவைப்பட்டிருக்கா?
    புத்தியில்லாத பசங்க‌

    புள்ளிராஜா

    //

    புள்ளி ராஜா.. நீ ஒரு கில்லி ராஜா !

  9. சேவியர் சொன்னது,

    April 10, 2008 இல் 10:40 மு.பகல்

    நன்றி முத்துக்குமார். நிறைய விஷயங்களைச் சொல்லி இருக்கீங்க :)

  10. சேவியர் சொன்னது,

    April 10, 2008 இல் 10:42 மு.பகல்

    //athanaalathaan muzu kozia naan saaptren//

    நடத்துங்க. நடத்துங்க.

  11. top10shares சொன்னது,

    April 10, 2008 இல் 2:26 பிற்பகல்

    நான் சைவம் அதனால எனக்கு பயம் இல்லை… எல்லாரும் சீக்கிரம் சைவத்துக்கு மாறுங்கப்பா…

    அப்படியே என்னுடைய வலைப்பூவுக்கு வாங்கப்பா…

    சாய்கணேஷ்

  12. top10shares சொன்னது,

    April 10, 2008 இல் 2:27 பிற்பகல்

    top10shares.wordpress.com

  13. சேவியர் சொன்னது,

    April 10, 2008 இல் 6:58 பிற்பகல்

    //நான் சைவம் அதனால எனக்கு பயம் இல்லை//

    முட்டை சைவமாமே… சென்ஷெ சொல்றாங்க :)

  14. thamilannan சொன்னது,

    April 10, 2008 இல் 7:52 பிற்பகல்

    நல்ல முட்டை தகவல்.
    என் வயது 50. நான் தினமும் முட்டை ஆம்லெட் சாப்பிடுவேன், அப்புறம் செக் பண்ணி பார்த்தால் கொழுப்பு 240. இப்ப சுத்தமாக் விட்டு விட்டேன். எதுக்கு ரிஸ்க்?

  15. சேவியர் சொன்னது,

    April 10, 2008 இல் 8:23 பிற்பகல்

    நானும் ஒரு ஆம்லெட் அடிமை :(

  16. jagadeesh சொன்னது,

    April 13, 2010 இல் 8:46 பிற்பகல்

    muutai aaraichla 27 year anadha sonninga ana evlo panam spend pannanga nu sollavea illaiye

  17. சேவியர் சொன்னது,

    April 29, 2010 இல் 12:11 மு.பகல்

    //muutai aaraichla 27 year anadha sonninga ana evlo panam spend pannanga nu sollavea illaiye/

    கேக்க மறந்துட்டேன் ;)

  18. vivek சொன்னது,

    ஜூலை 31, 2010 இல் 6:43 பிற்பகல்

    muttai vilai eatrathal ivar sollum comedy tips ku nandri

  19. sam சொன்னது,

    செப்டம்பர் 29, 2010 இல் 1:56 பிற்பகல்

    நல்லா மேட்டர் thx

  20. selva சொன்னது,

    அக்டோபர் 1, 2010 இல் 12:26 மு.பகல்

    muttai illamal en valvillapa` ithu verum poraliiiiiiiiii

  21. சேவியர் சொன்னது,

    அக்டோபர் 1, 2010 இல் 1:49 மு.பகல்

    புதிய தகவல்கள் தலைகீழாய் பல்டியடிக்கின்றன. பாவம் நம்மைப் போன்ற ஆட்கள் தான் குழம்பிப் போய் கிடக்கிறோம் :)

  22. கண்ணன் சொன்னது,

    ஜனவரி 28, 2011 இல் 12:37 மு.பகல்

    சும்மா தானே சொல்றீங்க ?

  23. santhosh.p.g சொன்னது,

    ஜனவரி 30, 2011 இல் 8:12 மு.பகல்

    hee hee hee eathuvum athigam ana aabathuthan brother

  24. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 22, 2011 இல் 3:31 மு.பகல்

    :)

  25. THIRUMALAI சொன்னது,

    மார்ச் 1, 2011 இல் 8:10 பிற்பகல்

    pl mail important new blogs to my email

  26. THIRUMALAI சொன்னது,

    மார்ச் 1, 2011 இல் 8:12 பிற்பகல்

    Send mail about new blogs to my email

  27. MUNIRAJ சொன்னது,

    மார்ச் 16, 2011 இல் 9:57 பிற்பகல்

    Pl Dont NON VEG
    Pl All Are Comes Pure VEG

    Reg,
    MUNIRAJ

  28. சேவியர் சொன்னது,

    மார்ச் 23, 2011 இல் 5:05 பிற்பகல்

    நன்றி முனிராஜ்

  29. prabu சொன்னது,

    மே 12, 2011 இல் 8:09 பிற்பகல்

    no

  30. kalaimani.bk சொன்னது,

    ஜூன் 7, 2011 இல் 1:47 மு.பகல்

    message ku nandri ga

  31. davit சொன்னது,

    ஜூலை 17, 2011 இல் 12:25 மு.பகல்

    http://www.alaikal.com/news/?p=7925

  32. maniraj சொன்னது,

    செப்டம்பர் 24, 2011 இல் 8:38 பிற்பகல்

    oru nalaikku 10 muttai sappitukiren athil ulla vellai karuvai mattumthan sappiduven manja karuvai thukki erindhu viduven.ithanal ethuvum apathu irukkuma irunthal sollunga please

  33. ezra rajamoni சொன்னது,

    ஜனவரி 13, 2012 இல் 2:53 மு.பகல்

    muddai vellai karu manjal karu appadinu illlai ellaaam alavoodu../ ok usa resalt avarkal kalasaara vunavooduthaan aarassi panni iruppaanka naama full meelaku vathal podi meelakai vuppu ippadinu kaara saaramaaa saapdivoom antha aarassiyai indiyan panninaaal reslt resove…
    Ezra rajamono uk

  34. பெயரிலி சொன்னது,

    பெப்ரவரி 19, 2012 இல் 3:01 மு.பகல்

    egg is best food .but lkmit is best.your suggession ok.thank u.kabadan.chennai 44


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 128 other followers