ஒரு பெண்ணை உற்றுப் பார்த்தால் என்ன கிடைக்கும் ? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது சற்றுக் கடினமாக இருக்கிறதா ? பத்து நாள் ஜெயில் தண்டனையும் 2500 ரூபாய் அபராதமும் கிடைக்கும் என தீர்ப்பு மூலம் சொல்லியிருக்கிறது இத்தாலிய நீதிமன்றம் ஒன்று.
ரயிலில் இரண்டே இரண்டு முறை சந்தித்துக் கொண்ட பயணிகள் அவர்கள் இருவரும். முதல் நாள் ரயில் பயணத்தில் அவளுடைய அருகே சென்று அமர்ந்திருக்கிறான் அவன். சற்று நெருக்கமாகவே.
இந்த நெருக்கம் தனக்குப் பிடிக்கவில்லை தள்ளி உட்கார் என்று சொல்லியிருக்கிறாள் அந்தப் பெண்.
அடுத்த நாள் அவளுக்கு அருகே அமராமல் அந்த 30 வயது இளைஞன் எதிரே அமர்ந்து பயண தூரம் முழுவதும் அவளை உற்று உற்று முறைத்துப் பார்த்துக் கொண்டே வந்திருக்கிறான். இருவரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
இவனுடைய பார்வையின் வீரியத்தால் அந்த பெண் எரிச்சலடைந்து நீதிமன்றத்தை அணுக, நீதி மன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
அப்படி எரிச்சலடைந்த பெண்ணுக்கு வயது 55 என்பது தகவலுக்கு கூடுதல் சுவை சேர்க்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.











பூச்சி சொன்னது,
ஏப்ரல் 21, 2008 இல் 3:08 பிற்பகல்
என்ன கொடுமை சார் இது.
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 21, 2008 இல் 5:42 பிற்பகல்
உத்து உத்துப் பாக்காதீங்க – ன்னு ஒரு சினிமா பாட்டு கூட உண்டு தெலியதா ?
vijaygopalswami சொன்னது,
ஏப்ரல் 21, 2008 இல் 5:50 பிற்பகல்
55 வயசுக்கு 2500 கொஞ்சம் அதிகம்தான். அட, நான் அபராதத்தைச் சொன்னேன் அய்யா…
johan paris சொன்னது,
ஏப்ரல் 21, 2008 இல் 8:26 பிற்பகல்
25 ஆக இருக்கலாம்; 55 ஆக இருக்கலாம். விருப்பமில்லாவிடில் ;இவர் செய்தது அடாவடித்தனம் . அத்துமீறல்.
தண்டனை போதாது…
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 22, 2008 இல் 5:23 பிற்பகல்
//25 ஆக இருக்கலாம்; 55 ஆக இருக்கலாம். விருப்பமில்லாவிடில் ;இவர் செய்தது அடாவடித்தனம் . அத்துமீறல்.
தண்டனை போதாது…
//
ஒத்துக் கொள்கிறேன் !
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 22, 2008 இல் 5:24 பிற்பகல்
//55 வயசுக்கு 2500 கொஞ்சம் அதிகம்தான். அட, நான் அபராதத்தைச் சொன்னேன் அய்யா…//
நக்கலுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை
SURESH சொன்னது,
ஏப்ரல் 29, 2009 இல் 9:18 பிற்பகல்
என்ன கொடுமை சார் இது, தண்டனை போதாது…