19 வயதில் அலியாவும், நாமும் !
ஏப்ரல் 23, 2008 இல் 11:45 நான் (ALL POSTS, சுவையானவை)
பத்தொன்பது வயதில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று சட்டென்று யாரேனும் கேட்டால் தலையைச் சொறிந்து கொண்டோ, வானத்தைப் பார்த்துக் கொண்டோ, விரல்களால் காற்றில் வளையம் வரைந்து கொண்டோ யோசிக்கும் நிலமை தான் நம்மில் பெரும்பாலானோருக்கு.
காரணம் சொல்லிக் கொள்ளும்படியாக அந்த வயதில் ஏதும் செய்து கொண்டிருக்க வாய்ப்பு மிகவும் குறைவே. பள்ளிப்படிப்பை முடித்தேன் என்றோ, கல்லூரியில் நுழைந்தேன் என்றோ நாம் வருடங்களைக் கணக்கிட்டு சொல்லிக் கொள்வோம்.
நியூயார்க்கைச் சேர்ந்த அலியா சபூர் என்னும் சிறுமி சற்று வித்தியாசமானவள். அவள் 19வது வயதில் ஒரு கல்லூரியில் முழு நேர கல்லூரிப் பேராசிரியராகி கின்னஸ் சாதனையாளர் நூலில் இடம்பிடித்துள்ளார்.
சிறுவயதிலிருந்தே கல்வியிலும், இசையிலும், அதீத ஆர்வமும், அறிவும் கொண்டிருந்த அலியா தனது 11 வது வயதில் சிம்பொனி இசைக்குழுவில் இணைந்து இசைக்கருவி வாசித்திருக்கிறாள்.
கல்லூரிப் படிப்பை முடித்து பட்டம் வாங்கியபோது அலியாவின் வயது பதினான்கு !
தற்போது நியூ ஆர்லாண்ட்ஸ் பல்கலைக்கழகம் ஒன்றில் கணிதவியல், மற்று இயற்பியல் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் இவர் கொரியாவில் கோன்குக் பல்கலைக்கழகத்தில் முழுநேர பேராசிரியராக இணைந்திருக்கிறார்.
கணிதமொழியும், இசை மொழியும் என் பிரியத்துக்குரிய மொழிகள். ஆனால் கொரிய மொழி எனக்குத் தெரியாது. அது தான் தற்போதைய பிரச்சனை என்று சொல்லி விழிகளை விரிக்கிறார் இந்த குட்டிப் பேராசிரியர்.
மீன் குஞ்சுக்கு நீந்தக் கத்துத் தரணுமா என்ன ?








Suresh - penathal சொன்னது,
ஏப்ரல் 23, 2008 இல் 11:49 நான்
19 வயசில் நானும் ஒரு கல்லூரி ஆசிரியராகத்தான் இருந்தேன்
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 23, 2008 இல் 12:34 பிற்பகல்
பெனாத்தல் ங்கறது சரியா தான் இருக்கு
Suresh - penathal சொன்னது,
ஏப்ரல் 23, 2008 இல் 3:45 பிற்பகல்
அட நிஜமாதான் சார். 17 வயசுல பாலிடெக்னிக் முடிச்சுட்டு 19 வயசுல இன்னொரு பாலிடெக்னிக்ல ஆசிரியரா இருந்தேன். சர்ட்டிபிகேட்டு காட்டட்டுமா?
சேவியர் சொன்னது,
ஏப்ரல் 23, 2008 இல் 6:11 பிற்பகல்
வாவ்.. வாழ்த்துக்கள். கின்னசுக்கு சொல்லாம விட்டியளே !!!