இது உள்ளாடையா ? வெளி ஆடையா ? பிரேசில் பெண்கள் குழப்பம் !!!

Tags: ,

கலாச்சாரம் அதிகரிக்க அதிகரிக்க ஜீன்ஸ் பேண்ட் கீழே இறங்கிக் கொண்டே இருக்க வேண்டுமாம், அதை ஈடுகட்டும் விதமாக பிரேசில் நாட்டில் உருவாகியிருக்கிறது ஜீன்ஸ் + உள்ளாடை.

ஸாண்ட்ரா டனிமூரா – இந்த ஆடையை வடிவமைத்தவர் இதன் அருமை பெருமைகளை அடுக்கினார்.

நன்றாக கீழிறங்கியபடி இருக்கும் ஜீன்ஸ்களையே பெண்கள் பெரிதும் விரும்பியதாகவும், ஆனால் அப்படிப்பட்ட ஆடைகள் தயாராக்கும் போது அவை உடனே கீழே இறங்கி தரையில் விழுந்து கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

இதற்கு ஒரு பரிகாரம் காண வேண்டும் என யோசனையில், ஜீன்ஸ்க்குக் கீழே அமர்ந்து தியானம் செய்த அவருக்கு, ஆப்பிள் விழுந்தபோது புவீஈர்ப்பு விசையைப் புரிந்து கொண்ட ஐசக் போல ஜீன்ஸ் விழுந்தபோது புதிய விதி புலப்பட்டதாம்.

அதாவது உள்ளாடையுடன் கூடிய ஜீன்ஸ் வடிவமைத்தால் ஜீன்ஸ் விழாது. (அப்படியே விழுந்தா இரண்டும் சேர்ந்து தானே விழும்) என கண்டுபிடித்து உற்சாகத்துடன் புதிய ஆடையை அறிமுகமும் செய்தி விட்டார்.

இந்த ஆடை ஜீன்ஸ் உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என அவர் புளகாங்கிதம் அடைய, இருக்கும் கொஞ்ச நஞ்ச கலாச்சார மிச்சமும் கழுவப்பட்டு விட்டதாக புலம்பிக் கொண்டிருக்கின்றனர் கலாச்சாரவாதிகள்.

எதைப்பற்றியும் கவலைப்படாமல் தயாராகிக்கொண்டிருக்கின்றன இந்த ஆடைகள்.

ஜீன்ஸ் என்பதா
ஜட்டி என்பதா
இரண்டின் மத்தியில் இன்னோர் ஆடையா ?

- என ஏதோ ஒரு கவிஞர் கவிதை எழுதிக் கொண்டிருப்பதாக கேள்வி :)

29 மறுமொழிகள்

  1. துளசி கோபால் சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 9:31 நான்

    என்னவோ போங்க.

  2. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 9:35 நான்

    எங்கே பிரேசிலுக்கா ???? :)

  3. TBCD சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 9:42 நான்

    “இரண்டிற்கு மத்தியின் இன்னோர் முயற்சியா..”

    இதிலாவது ஒரு முழுமை இருக்கட்டும்.

  4. உண்மைத்தமிழன் சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 10:24 நான்

    இங்கு நியூஸிலாந்து டீச்சரின் வருகையை நான் எதிர்பார்க்கவில்லை.

    எது போட்டா என்ன? போடாட்டா என்ன சேவியர்..?

    பசி வந்தால் பத்தும் பறந்துபோகும்.. பசிக்குப் பிறகுதான் அத்தனையும்..

    பசியையும் முந்துவதைப் போல் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.. நாம் இருவரும் சேர்ந்து முந்திக் கொள்வோம்.

  5. கோவி.கண்ணன் சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 10:28 நான்

    கவர்ச்சிப் படமா ? கவுச்சிப் படமா ? :)

  6. kalyanakamala சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 12:01 பிற்பகல்

    சரிதான்!
    கமலா

  7. விக்னேஷ்வரன் அடைக்கலம் சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 12:57 பிற்பகல்

    இதுக்கு ‘ஜீன்டி’னு பேரு வச்சா நல்லா இருக்கும்ல…

  8. mayooresan சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 6:00 பிற்பகல்

    உங்களுக்கு மட்டும் எப்படிங்க இப்படி பதிவுகள் கிடைக்குது??? ;)

  9. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 7:05 பிற்பகல்

    //“இரண்டிற்கு மத்தியின் இன்னோர் முயற்சியா..”

    இதிலாவது ஒரு முழுமை இருக்கட்டும்.
    //

    ஏதோ சொல்ல வறீங்கன்னு தெரியுது… ஆனா… என்ன சொல்ல வரீங்கன்னுதான் தெரியல.

  10. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 7:06 பிற்பகல்

    //பசியையும் முந்துவதைப் போல் ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.. நாம் இருவரும் சேர்ந்து முந்திக் கொள்வோம்.//

    தொட்டுட்டீங்க.

  11. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 7:07 பிற்பகல்

    //கவர்ச்சிப் படமா ? கவுச்சிப் படமா ?//

    இரண்டும் இல்லை… ஆடைப்புரட்சியின் வரைபடம் :)

  12. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 7:07 பிற்பகல்

    //சரிதான்!
    கமலா//

    உங்க “சரிதான்” சொல்லுது தப்புதான் என்று !

  13. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 7:08 பிற்பகல்

    //இதுக்கு ‘ஜீன்டி’னு பேரு வச்சா நல்லா இருக்கும்ல…//

    அடடே !

  14. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 7:08 பிற்பகல்

    //உங்களுக்கு மட்டும் எப்படிங்க இப்படி பதிவுகள் கிடைக்குது??? //

    கண்ணுல பட்டுது.. போட்டு வாங்கி கட்டிகிட்டேன் :)

  15. thamilannan சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 7:16 பிற்பகல்

    வணக்கம்
    அருமையான கருத்துள்ளபதிவு.
    அப்படியே ஆண்களுக்கும் (நமக்கும்) ஏ தாவது ட்ரஸ் பற்றி பதிவு போடவும்
    அன்புடன்
    ராம்ஸ்

  16. கீதா சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 7:48 பிற்பகல்

    இது புழக்கத்துக்கு வந்துட்டா சாலை விபத்துகளும், கா(ம)தல் விபத்துகளும் நிறையவே நடக்கும்… ஹ்ம்..

  17. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 8:11 பிற்பகல்

    //அருமையான கருத்துள்ளபதிவு.
    அப்படியே ஆண்களுக்கும் (நமக்கும்) ஏ தாவது ட்ரஸ் பற்றி பதிவு போடவும்
    //

    ஆண்களுக்கும் இப்படியெல்லாம் ஆசை வருமா என்ன ?

  18. சேவியர் சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 8:12 பிற்பகல்

    //இது புழக்கத்துக்கு வந்துட்டா சாலை விபத்துகளும், கா(ம)தல் விபத்துகளும் நிறையவே நடக்கும்… ஹ்ம்..//

    ஆபத்து நெருங்குகிறது என்பதற்கான எச்சரிக்கைக் கொடியாக இதைக் கருதிக் கொள்ள வேண்டியது தான் :)

  19. vijaygopalswami சொன்னது,

    ஏப்ரல் 29, 2008 இல் 11:02 பிற்பகல்

    நெனச்சது நடந்துருச்சா!!! இப்போ சந்தோஷமா!!!

    அவனா நீ ன்னு அவனப் பாத்து கேட்டிருக்க கூடாதுய்யா. உன்ன பாத்து கேட்டிருக்கனும். மிஸ்ஸாயிருச்சு. நீ பண்ண அழும்பு பத்தாதுன்னு ஒரு வில்லேஜ் விஞ்ஞானி இதுக்கு பேரு வைக்க வந்துருச்சு. ஜீண்டியாம்!!!

    பண்றதெல்லாம் பண்ணிட்டு வெளக்கெண்ண குடிச்ச மாதிரி மொகத்தை அப்பாவித்தனமா வச்சிருக்கிறத பாரு!!! பெரிய ஒளி ஓவியரு!!! 8)

  20. bashakavithaigal சொன்னது,

    ஏப்ரல் 30, 2008 இல் 6:19 நான்

    2 IN 1!!!!!!!!!!!!!!!!!!

  21. ரசிகன் சொன்னது,

    மே 3, 2008 இல் 3:48 நான்

    //
    அதாவது உள்ளாடையுடன் கூடிய ஜீன்ஸ் வடிவமைத்தால் ஜீன்ஸ் விழாது. (அப்படியே விழுந்தா இரண்டும் சேர்ந்து தானே விழும்) என கண்டுபிடித்து உற்சாகத்துடன் புதிய ஆடையை அறிமுகமும் செய்தி விட்டார்//

    ஹா..ஹா..:))))))

  22. சேதுக்கரசி சொன்னது,

    மே 6, 2008 இல் 7:25 பிற்பகல்

    //(அப்படியே விழுந்தா இரண்டும் சேர்ந்து தானே விழும்)//

    சும்மா சொல்லக்கூடாது.. உங்களுக்கு quick thinking தான் :-D

  23. சேவியர் சொன்னது,

    மே 12, 2008 இல் 11:12 நான்

    //பண்றதெல்லாம் பண்ணிட்டு வெளக்கெண்ண குடிச்ச மாதிரி மொகத்தை அப்பாவித்தனமா வச்சிருக்கிறத பாரு!!! பெரிய ஒளி ஓவியரு!!! //

    “ஒளி ஓவியர்” மேல உங்களுக்கென்ன கடுப்பு ஓய் ? :)

  24. சேவியர் சொன்னது,

    மே 12, 2008 இல் 11:13 நான்

    //சும்மா சொல்லக்கூடாது.. உங்களுக்கு quick thinking தான்

    // :)

  25. சேவியர் சொன்னது,

    மே 12, 2008 இல் 11:14 நான்

    //2 IN 1!!!!!!!!!!!!!!!!!!//

    இதுல டபுள் மீனிங் ஏதும் இல்லையே ;)

  26. Mangalore Siva சொன்னது,

    மே 12, 2008 இல் 7:13 பிற்பகல்

    :))))))))))

  27. சேவியர் சொன்னது,

    மே 12, 2008 இல் 8:03 பிற்பகல்

    வாங்கோ :)

  28. K Sampath சொன்னது,

    மே 14, 2008 இல் 5:16 பிற்பகல்

    This is not the most important thing to bring to public knowledge, any way as said by our perusus and modernised to today’s one - kalavum parthu mara. -

  29. சேவியர் சொன்னது,

    மே 15, 2008 இல் 10:39 நான்

    //This is not the most important thing to bring to public knowledge, any way as said by our perusus and modernised to today’s one - kalavum parthu mara//

    தெரிஞ்சு வெச்சுக்கிறது நல்லது தானே. இல்லேன்னா நாளைக்கு இதே மாதிரி ஒரு டிரஸைப் பார்த்தா ஓடிப் போய், “எக்ஸ்கியூஸ்மி… உங்க பேண்ட் அவுந்துடுச்சு” என்று சொல்லும் சங்கோஜ அபாயங்கள் சம்பவிக்கலாம் :D

மறுமொழியொன்றை வழங்குக