கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் எனும் வார்த்தைக்கு இதுவரை பெரிய அளவிலான விளக்கம் கிடைக்கமால் இருந்தது. இன்று தான் தெரிய வந்தது.
ஓரமாய் அமர்ந்து ஷூ துடைக்கும் ஒரு சிறுவன், ஐயா ஒரு பழைய சோடி ஷூ தருவீங்களா என பெர்மிங்காம் சாக்கர் வீரர் ஓலிவர் காப்பாவிடம் கேட்க, “சாரி.. அதெல்லாம் தர முடியாது. இந்த காரை எடுத்துக்கோ” என புத்தம் புதிய மெர்சிடீஸ் ஸ்போர்ட்ஸ் காரை இனாமாய் கொடுத்திருக்கிறார்.
சார் நல்லா ஜோக் அடிக்கிறாரு என நினைத்த சிறுவன், “ஷூவுக்கு லேஸ் கட்ட தான் என்னால முடியும், காருக்கெல்லாம் இன்சூரன்ஸ் கட்ட என்னால முடியாது சார் “. என பதிலுக்கு ஜோக் அடிக்க, ஒரு வருடத்திற்கான இன்ஷூரன்ஸையும் தானே கட்டி சிறுவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார் அவர்.
இத்தனை விலையுயர்ந்த ஒரு காரை ஒரு ஏழை சிறுவனுக்கு இனாமாய் வழங்கிய அவருடைய விசால மனதை எண்ணி எண்ணி வியக்கின்றனர் விஷயம் கேள்விப்பட்டோர்.
கூரையைப் பிய்த்துக் கொடுப்பது பழைய கதை; காரையே பிடித்துக் கொடுப்பது தான் புதிய கதை
சே… நாம அவர் கிட்டே பழைய ஷூ கேட்காம போயிட்டோமே என வருத்தப்படுகின்றனர் அவருடைய ரசிகர்கள்













vijaygopalswami சொன்னது,
மே 16, 2008 இல் 7:44 மு.பகல்
சேவி அண்ணா,
அந்தாளோட அட்ரசை பின்னூட்டமா போட்டு உடுங்க. கொஞ்சம் செலவு ஆனாலும் லம்பா எதாவது வாங்கிட்டு வந்திடுறேன்.
சேவியர் சொன்னது,
மே 16, 2008 இல் 11:03 மு.பகல்
நீங்க போய் கார் கேட்டா ஷூ குடுத்துட போறாரு …