வயாகராவை மிஞ்சும் புதிய பாலியல் மருந்து !

 

வயாகரா மாத்திரை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உலகெங்கும் சுமார் மூன்று கோடிபேருக்கும் அதிகமாக அந்த மாத்திரையைப் பயன்படுத்தியுள்ளனர் என புள்ளி விவரங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வந்திருக்கிறது அடுத்த அசத்தல் கண்டுபிடிப்பு.

லிபிடோ இன்செக்ஷன் எனும் இந்த புதிய மருந்து வயாகராவைப் போல மேனியில் நேரடியாக மாற்றங்களை ஏற்படுத்தாமல் மூளையில் மாற்றத்தை ஏற்படுத்தி பாலியல் ஆர்வத்தையும், ஆரோக்கியத்தையும் தூண்டுகிறதாம்.

பாலியல் ஆர்வமின்மை இன்றைய அவசர யுகத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. மூன்றில் ஒரு பங்கு பெண்களும், ஆறில் ஒரு பங்கு ஆண்களும் இந்த ஆர்வமின்மை கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வரப்பிரசாதம் இது என்கின்றனர் இந்த புதிய அதிசய மருந்து தயாரிப்பாளர்கள்.

இந்த மருந்து Type 2 gonadotropinb ஐ வெளிவிடும் ஹார்மோன்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் பாலியல் ஆர்வத்தை தூண்டுகிறதாம்.

வயாகரா வெறுமனே உடலில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் நின்று விடுகிறது. மன அளவில் அது எந்த விதமான ஆர்வத்தையோ, விருப்பத்தையோ, மோகத்தையோ கிளறிவிடுவதில்லை. கூடவே அது முழுக்க முழுக்க ஆண்களுக்கானது. ஆர்வமற்ற பெண்களுக்கு வயாகராவினால் எந்த பயனும் இல்லை. ஆனால் இந்த புதிய ஆர்வம் தூண்டும் மாத்திரை பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொதுவானது என்பது குறிப்பிடத் தக்கது.

ஆர்வத்தைத் தூண்டுவதன் மூலமும், அதற்குரிய சுரப்பிகளை சுரக்கச் செய்வதன் மூலமும் ஆண்மைக் குறைபாடு உட்பட பல நோய்களையும் இந்த மருந்து சரி செய்து விடும் என்கின்றனர்.

முதலில் பெண்களுக்கென தயாரிக்கப்பட்ட இந்த மருந்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் பயன்படுத்தப்படும் வகையில் இப்போது உருவாகி வருகிறது.

மூளையில் நேரடியாக ஊசி மூலம் செலுத்த வேண்டும் என துவங்கிய ஆராய்ச்சி இப்போது இரத்தக் குழாய்களிலும் செலுத்தலாம் எனும் அளவில் வளர்ச்சியடைந்திருக்கிறது. இதை மாத்திரை வடிவத்துக்குள் அடைக்கும் முயற்சி இப்போது நடைபெற்று வருகிறது.

வயாகராவை முழுமையாக துடைத்து எறியும் நோக்குடன் இந்த மருந்து மன உடல் சார்ந்த பிரச்சனைகளின் தீர்வாக தயாராகிக் கொண்டிருக்கிறது என்பது சர்வதேச கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இதன் பக்க விளைவு ஒரு பக்கா விளைவாம். அதாவது உடல் எடை கணிசமாகக் குறையுமாம்.

அட !! ஒரு க(பி)ல்லிலே இரண்டு மாங்கா !

20 மறுமொழிகள்

  1. vijaygopalswami சொன்னது,

    மே 20, 2008 இல் 1:46 பிற்பகல்

    வி.கோ.சாமிக்கு ரெண்டு கார்ட்டன் பார்சல்!!!

  2. சேவியர் சொன்னது,

    மே 20, 2008 இல் 2:30 பிற்பகல்

    அட ! என்ன ஆச்சு உங்களுக்கு ?

  3. vijaygopalswami சொன்னது,

    மே 20, 2008 இல் 3:43 பிற்பகல்

    உடல் எடை கொஞ்சம் அதிகம். நீங்க தப்பா நெனச்சா அதுக்கு நான் பொறுப்பில்லை.

  4. சேவியர் சொன்னது,

    மே 20, 2008 இல் 5:19 பிற்பகல்

    அட !!! அசத்திட்டீங்க போங்க :)

  5. லதானந்த் சொன்னது,

    மே 21, 2008 இல் 1:39 பிற்பகல்

    இது மாரியெல்லாம் ஏனுங்க பாலுணர்வைச் சுத்தியே செய்திங்க போடுறீங்க?
    ஆன்மீகம், ஓஸோன் படலம், உழைக்குகம் பெண்கள் இது மாதிரியெல்லாம் ஓசனை பண்ணுங்கண்ணா!

    (ஆமா! இந்த மாரி பலான மேட்டரெல்லாம் எந்த வெப் சைட்லே இருக்குது? சும்மானாச்சிக்குத்தான் கேட்டேன். ஹிஹி!)

  6. சேவியர் சொன்னது,

    மே 21, 2008 இல் 3:02 பிற்பகல்

    அடப்பாவி மனுஷா… கடந்த பத்து பதிவுகளில பாலியல், அதுவும் பாலியல் தொடர்பான மருத்துவச் செய்தி இது ஒண்ணு தான். அதுக்கே இப்படி சொல்றீங்க. :(

    உங்களுக்கு வயசாகுது போல ;)

  7. bashakavithaigal சொன்னது,

    மே 25, 2008 இல் 9:03 பிற்பகல்

    எதுக்கு இவ்வ‌ளோ சிர‌ம‌ம். ஒரு த‌மிழ் ப‌ட‌ம் அதுவும் ந‌மீதா ப‌ட‌ம் பார்த்தா போதுமே‍:)

  8. சேவியர் சொன்னது,

    மே 26, 2008 இல் 10:54 மு.பகல்

    முதல்ல போய் எடையைக் கொறைக்க சொல்லுங்க உங்க நமீதா பா(பீ)ப்பா கிட்டே

  9. bashakavithaigal சொன்னது,

    மே 27, 2008 இல் 6:57 மு.பகல்

    >>முதல்ல போய் எடையைக் கொறைக்க சொல்லுங்க உங்க >>நமீதா பா(பீ)ப்பா கிட்டே

    எடை அதிக‌மா………..அப்படியா!!!!!!!!!!!!

  10. vijaygopalswami சொன்னது,

    மே 27, 2008 இல் 9:54 பிற்பகல்

    நமிதாவைப் பழித்த சேவியரை வன்மையாக கண்டிக்கிறேன்.

  11. சேவியர் சொன்னது,

    மே 28, 2008 இல் 11:38 மு.பகல்

    விழியெல்லாம் நமீதா ? !!!
    பழியெல்லாம் நம் மீதா ?

  12. vijaygopalswami சொன்னது,

    மே 28, 2008 இல் 5:52 பிற்பகல்

    சுகமான சுமைகள் சுமையாகா – நமியைக்
    கண்டும் இமைத்த இமை இமையாகா…

    ஆகா…. கவிதை கவிதை

  13. சேவியர் சொன்னது,

    மே 28, 2008 இல் 6:55 பிற்பகல்

    அட.. அட… அட… Go..pal.. Go !

  14. dossdr சொன்னது,

    செப்டம்பர் 14, 2008 இல் 10:26 பிற்பகல்

    naatukku thevaiyana nalla news solli irukaaru avara paaraattaama yempa kurai solreeenga? thanks

  15. சேவியர் சொன்னது,

    செப்டம்பர் 16, 2008 இல் 12:44 பிற்பகல்

    :D

  16. J.Hari Krishnan சொன்னது,

    செப்டம்பர் 27, 2008 இல் 11:19 மு.பகல்

    Iya nattai thooki niruthra saithiya solliwrukinga. Bigil adingkapa.

  17. rumais சொன்னது,

    நவம்பர் 17, 2008 இல் 1:10 மு.பகல்

    i want it fast.

  18. santhosh சொன்னது,

    ஜனவரி 10, 2009 இல் 8:46 பிற்பகல்

    super. indha mathiri nalla visayangalai, udal uravu parriya thakaval nalla payanaaga irukkum annaivarukkum.

  19. jaga சொன்னது,

    ஏப்ரல் 26, 2009 இல் 9:07 பிற்பகல்

    enna arputham ponga…

  20. Suresh S சொன்னது,

    ஜூன் 22, 2009 இல் 8:06 பிற்பகல்

    It’s Nice.


மறுமொழியொன்றை வழங்குக