கடந்த சனிக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ரா.ரா அணிக்குமிடையே நடந்த போட்டியை சென்னையில் கண்டுகளிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
வாழ்நாளிலேயே மைதானத்துக்குச் சென்று இதுவரை ஒரு விளையாட்டையும் பார்த்ததில்லை என்பது ஒரு காரணம் என்றால், சுமார் அறுபது நண்பர்கள் ஒன்றாகச் சென்றது தான் சுவாரஸ்யமாய் செல்ல வைத்த முதன்மைக் காரணம்.
கிரிக்கெட் விளையாட்டின் மீது அதீத வெறி ஏதும் இல்லை என்பதால் வெற்றியோ தோல்வியோ எதுவும் என்னைப் பாதிக்கவில்லை.
ஆனால் மைதானத்தில் அமர்ந்திருந்த அந்த மூன்று – நான்கு மணி நேரமும் ஒரு நடன அரங்கத்துக்குள் இருந்தது போல அற்புதமான அனுபவமாய் இருந்தது.
கிரிக்கெட் போட்டிகளைக் காலங் காலமாய் பார்த்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் கூட இது போல ஒரு அனுபவத்தை இதுவரை கண்டதில்லை எனுமளவுக்கு ஐ.பி.எல் இருந்தது.
ரசிக்க வைத்தது பாடல்களும், இசையும் தான்.
ஷேன் வார்னேயும், மார்கெல்லும், நிட்டினியும் ஓடிக்கொண்டிருந்த அரங்கத்தில் “பொதுவாக எம் மனசு தங்கம், எங்கிட்ட மோதாதே, மை நேம் ஈஸ் பில்லா” என்றெல்லாம் தமிழ் பாடல்கள் பட்டையைக் கிளப்பியது பரம சந்தோஷம்.
பார்த்திவ் பட்டேல் பவுண்டரி விரட்டியபோது “பார்க்கத் தான் சின்னப் பையன் நானப்பா..” என்பது போன்ற டைமிங் பாடல்கள் வேறு.
நடனமும், இசையும், கூச்சலும், நண்பர்களின் கலாட்டாவும் நிறைந்த ஒரு மாலைப் பொழுதை வெகுநாட்களுக்குப் பின் சந்தித்த திருப்தி திரும்பி வரும்போது நிறைந்திருந்தது.
கிரிக்கெட் நல்லதோ, கெட்டதோ. ஐ.பி.எல் தேவையோ, தேவையில்லையோ. அவ்வப்போது நண்பர் புடைசூழ கவலைகளை வெளியே கொட்டி விட்டு கொட்டமடிப்பது தேவையாய் படுகிறது மனதுக்கு.











vijaygopalswami சொன்னது,
மே 26, 2008 இல் 7:21 பிற்பகல்
கவலைய கொட்டுனா பரவாயில்ல, பணத்தையும் இல்ல கொட்ட வேண்டியிருக்கு. டிக்கெட்டு எம்புட்டு?
vijaygopalswami சொன்னது,
மே 26, 2008 இல் 8:32 பிற்பகல்
எனக்கு மட்டும் ஏன் இப்படி, கதறுகிறார் விஜய்கோபால்சாமி. படித்துவிட்டீர்களா?
இப்போதே படியுங்கள்:
http://vijaygopalswami.wordpress.com/2008/05/26/why_this_happens_to_me_1/
(This is just an invite to read my post. Please delete this comment while moderation.)
kalyanakamala சொன்னது,
மே 27, 2008 இல் 5:17 பிற்பகல்
தாங்கள் சொல்லியிருப்பது ரொம்ப நிஜமான விஷயம்!
கமலா
kalyanakamala சொன்னது,
மே 27, 2008 இல் 5:18 பிற்பகல்
சேவியெர் சொன்னதைச் சொன்னென்.
சேவியர் சொன்னது,
மே 28, 2008 இல் 11:36 மு.பகல்
//கவலைய கொட்டுனா பரவாயில்ல, பணத்தையும் இல்ல கொட்ட வேண்டியிருக்கு. டிக்கெட்டு எம்புட்டு?//
ஹி…ஹி.. ஆமா !!! டிக்கெட்டு ஒண்ணு தான்
சேவியர் சொன்னது,
மே 28, 2008 இல் 11:36 மு.பகல்
//கவலைய கொட்டுனா பரவாயில்ல, பணத்தையும் இல்ல கொட்ட வேண்டியிருக்கு. டிக்கெட்டு எம்புட்டு?//
நன்றி
kunthavai சொன்னது,
மே 28, 2008 இல் 2:00 பிற்பகல்
//அவ்வப்போது நண்பர் புடைசூழ கவலைகளை வெளியே கொட்டி விட்டு கொட்டமடிப்பது தேவையாய் படுகிறது மனதுக்கு.
//
நல்ல விஷயமுங்க.இது தான் வேண்டும்.
//கவலைய கொட்டுனா பரவாயில்ல, பணத்தையும் இல்ல கொட்ட வேண்டியிருக்கு. டிக்கெட்டு எம்புட்டு?//
எல்லாம் ஓசியிலே கிடைக்கணுமாக்கும். எல்லாவற்றிற்க்கும் ஒரு விலை இருக்கு தம்பி.
சேவியர் சொன்னது,
மே 28, 2008 இல் 5:22 பிற்பகல்
அப்படி தெளிவா சொல்லி புரிய வையுங்க பசங்களுக்கு !
vijaygopalswami சொன்னது,
மே 28, 2008 இல் 5:48 பிற்பகல்
நான் லதானந்துக்கு மாப்பிள்ளை, குந்தவைக்கு தம்பி, விக்னேஷ்வரனுக்கு சித்தப்பா, எனக்கு இத்தனை சொந்தங்களா!!! நினைக்கவே நெகிழ்ச்சியாக இருக்கிறது.
சேவியர் சொன்னது,
மே 28, 2008 இல் 6:56 பிற்பகல்
இணையச் சொந்தக்காரன் வாழ்க