தொப்புளில் வளையம் மாட்டலாமா ?

 

தொப்புளில் வளையம் மாட்டுவது, மார்பில் மாட்டுவது, அதையும் தாண்டி… எங்கெங்கோ வளையம் மாட்டுவதெல்லாம் இன்றைய இளசுகளின் ஃபாஷனாகி விட்டது. அத்தகைய ஃபாஷன் பிரியைகளின் தொப்புளில் மன்னிக்கவும் வயிற்றில் புளியைக் கரைப்பது போல வந்திருக்கிறது புதிய ஆய்வு முடிவு ஒன்று.

உடலில் மாட்டும் வளையங்களும், அதன் விளைவுகளும் குறித்து வெளியாகும் முதல் ஆய்வு இது என்பதால் இது சிறப்புக் கவனம் பெறுகிறது.

அதாவது இப்படிப்பட்ட மற்றும் அப்படிப்பட்ட இடங்களில் வளையம் மாட்டிக் கொண்டு வளைய வரும் இளசுகளில் மூன்றில் ஒருவருக்கு இதனால் உபாதைகள் ஏற்படுகின்றனவாம். மருத்துவ மனைக்குச் சென்று மருத்துவ உதவி பெறுமளவுக்கும், உயிருக்கே ஆபத்தாய் போகுமளவுக்கும் இந்த சிக்கல்களில் சில வலிமையானது என்கிறது இந்த ஆராய்ச்சி.

வீக்கம், இரத்தக் கசிவு, அலர்ஜி, புண் என பல வடிவங்களில் இந்த அசௌகரியங்கள் நேர்வதாக தெரிவித்துள்ளது இந்த ஆய்வை நிகழ்த்திய லண்டனிலுள்ள ஹெல்த் புரட்டக்ஷன் ஏஜென்சி எனும் அமைப்பு.

10053 பேரிடம் நடத்தப்பட்ட இந்த மருத்துவ ஆய்வில் பலர் அங்கீகரிக்கப்படாத இடங்களில் சென்று அங்கம் எங்கும் இந்த வளையங்களை மாட்டிக் கொள்வதாகவும், அப்படிப்பட்ட சூழலில் சிக்கல் அதிகரிப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வில் பங்கு பெற்றவர்களில் 33 விழுக்காடு பேர் தொப்புளிலும், 19 பேர் மூக்கிலும், 9 விழுக்காடு பேர் நாக்கிலும், 9 விழுக்காடு பேர் மார்பிலும், எட்டு விழுக்காடு பேர் புருவத்திலும், நான்கு விழுக்காடு பேர் உதட்டிலும், இரண்டு விழுக்காடு பேர் “அந்த” இடத்திலும், மூன்று விழுக்காடு பேர் இன்ன பிற இடங்களிலும் வளையங்களை மாட்டிக் கொண்டிருந்தார்கள் என்கிறது அறிக்கை.

நாக்கு, மார்பு மற்றும் அந்தரங்க இடங்களில் வளையம் மாட்டியிருந்தவர்களில் பெரும்பாலானோருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டிருக்கிறது.

இந்த உடலில் வளையங்கள், நகைகள் மாட்டும் போக்கு இன்றைய இளசுகளிடையே வலுவடைந்து வருகிறது. ஆர்வக் கோளாறினாலும், வயசுக் கோளாறினாலும் இப்படி புது ஃபாஷன் என்று நகை மாட்டுபவர்களை இந்த அறிக்கை சற்று யோசிக்க வைத்தால் நலம்.

18 மறுமொழிகள்

  1. ஜூன் 13, 2008 இல் 9:12 பிற்பகல்

    படத்துல உள்ள இடுப்பு சரியா இல்லை, இன்னும் கொஞ்சம் நல்ல படமா போட்டிருக்கலாம்…

  2. சேவியர் சொன்னது,

    ஜூன் 13, 2008 இல் 9:33 பிற்பகல்

    இடுப்பை ஏம்பா பாக்கறே… ??

  3. சாமி சொன்னது,

    ஜூன் 13, 2008 இல் 9:39 பிற்பகல்

    ரொம்ப முக்கியம்…

  4. ஜூன் 13, 2008 இல் 9:48 பிற்பகல்

    //இடுப்பை ஏம்பா பாக்கறே… ??//

    கண்ண மூடிக்கிட்டேன்…

  5. முகுந்தன் சொன்னது,

    ஜூன் 14, 2008 இல் 12:22 மு.பகல்

    சேவியர்,
    நல்ல விஷயம்… இத நான் ஸ்பானிஷ்ல மாற்றி இங்கே மாட்ரிடில் இருக்கறவங்களுக்கு எல்லாம் அனுப்பலாம்னு தோணுது (கருமம் எங்க தான் வளையம் போடறதுன்னு வெவஸ்தையே கெடையாது).ஆண் பெண் வித்தியாசமே கெடையாது….

    ஆனா எனக்கு ஸ்பானிஷ் தெரியாதுங்கறது வேற விஷயம் :-)

  6. RAVI KUMAR (Kuwait) சொன்னது,

    ஜூன் 14, 2008 இல் 5:10 பிற்பகல்

    Mr.Xavier
    Next time stomach picture put it
    nicely please

  7. vijaygopalswami சொன்னது,

    ஜூன் 15, 2008 இல் 10:33 மு.பகல்

    ஆஹா, சிங்கம் களம் இறங்கிருச்சுய்யா, களம் இறங்கிருச்சுய்யா…

  8. bashakavithaigal சொன்னது,

    ஜூன் 16, 2008 இல் 7:08 மு.பகல்

    maatravangaluke ivlo prachane iruke atha paakravangaluku?????

  9. சேவியர் சொன்னது,

    ஜூன் 16, 2008 இல் 10:52 மு.பகல்

    //ரொம்ப முக்கியம்…//

    சாமி சொன்னா சரிதான் :)

  10. சேவியர் சொன்னது,

    ஜூன் 16, 2008 இல் 10:52 மு.பகல்

    ////இடுப்பை ஏம்பா பாக்கறே… ??//

    கண்ண மூடிக்கிட்டேன்…

    //

    யார் கண்ணை ??

  11. சேவியர் சொன்னது,

    ஜூன் 16, 2008 இல் 10:54 மு.பகல்

    //சேவியர்,
    நல்ல விஷயம்… இத நான் ஸ்பானிஷ்ல மாற்றி இங்கே மாட்ரிடில் இருக்கறவங்களுக்கு எல்லாம் அனுப்பலாம்னு தோணுது (கருமம் எங்க தான் வளையம் போடறதுன்னு வெவஸ்தையே கெடையாது).ஆண் பெண் வித்தியாசமே கெடையாது….//

    சரி விடுங்க… என்ன பண்றது … ம்ம்.. இந்தியாவில இருக்கிற விக்கி மாதிரி நல்ல பசங்களுக்குத் தான் அதைப் பாக்க குடுத்து வைக்கல…

  12. சேவியர் சொன்னது,

    ஜூன் 16, 2008 இல் 10:54 மு.பகல்

    //Mr.Xavier
    Next time stomach picture put it
    nicely please//

    அடப்பாவிகளா… என்னை….

  13. சேவியர் சொன்னது,

    ஜூன் 16, 2008 இல் 10:55 மு.பகல்

    //ஆஹா, சிங்கம் களம் இறங்கிருச்சுய்யா, களம் இறங்கிருச்சுய்யா…//

    ஆ ! சிங்கமா ?
    அ சிங்கமா ?

  14. சேவியர் சொன்னது,

    ஜூன் 16, 2008 இல் 10:56 மு.பகல்

    //maatravangaluke ivlo prachane iruke atha paakravangaluku?????//

    மாட்டறதே… மத்தவங்களை மாட்ட வைக்கணுங்கறதுக்குத் தானே பாஷா..

  15. vikneshwaran சொன்னது,

    ஜூன் 16, 2008 இல் 4:02 பிற்பகல்

    //இந்தியாவில இருக்கிற விக்கி மாதிரி நல்ல பசங்களுக்குத் தான் அதைப் பாக்க குடுத்து வைக்கல…//

    தப்பு பன்னிட்டிங்களே… நான் ஒரு மலேசியன்… மலேசிய தமிழன்…
    இந்தியாவிற்கு வரனும்.. வந்தால் வளையந்தை பார்க்கலாமா?? முறைக்க வேண்டாம்… நான் காதில் மாட்டும் வளையத்தை பற்றி சொன்னேன்…

  16. Mukundan சொன்னது,

    ஜூன் 16, 2008 இல் 4:17 பிற்பகல்

    //இந்தியாவிற்கு வரனும்.. வந்தால் வளையந்தை பார்க்கலாமா?? முறைக்க வேண்டாம்… நான் காதில் மாட்டும் வளையத்தை பற்றி சொன்னேன்…
    //

    நான் நம்பிட்டேங்க …

  17. சேவியர் சொன்னது,

    ஜூன் 16, 2008 இல் 7:00 பிற்பகல்

    /தப்பு பன்னிட்டிங்களே… நான் ஒரு மலேசியன்… மலேசிய தமிழன்…
    இந்தியாவிற்கு வரனும்.. வந்தால் வளையந்தை பார்க்கலாமா?? முறைக்க வேண்டாம்… நான் காதில் மாட்டும் வளையத்தை பற்றி சொன்னேன்…

    //

    மலேஷியாவில இல்லாததா !!! ;)

  18. சேவியர் சொன்னது,

    ஜூன் 16, 2008 இல் 7:01 பிற்பகல்

    ////இந்தியாவிற்கு வரனும்.. வந்தால் வளையந்தை பார்க்கலாமா?? முறைக்க வேண்டாம்… நான் காதில் மாட்டும் வளையத்தை பற்றி சொன்னேன்…
    //

    நான் நம்பிட்டேங்க …

    //

    அவரு சொல்றதுக்கு முன்னாடியே நான் நம்பிட்டேன் :)


மறுமொழியொன்றை வழங்குக