“அடிக்கடி டீ குடிக்கிறது தாங்க என்னோட வீக் பாயிண்ட்” என்கிறீர்களா ? அது தான் நீங்க பண்ற (ஒரே) நல்ல காரியம் என்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.
தினமும் மூன்று டம்ளருக்கு மேல் டீ குடித்தால் உங்களுக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு ரொம்பவே குறையுமாம். முன்னரும் இதே போல ஒரு ஆராய்ச்சி வந்திருந்தது, ஆனால் அது பால் கலக்காத டீ மட்டுமே குடிக்க வேண்டுமென வற்புறுத்தியது. ஆனால் இந்த புதிய ஆராய்ச்சியோ பால் கலக்கலாம் தப்பில்லை என்று சொல்லி வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது.
இது மட்டுமா, டீ குடிங்க.. உங்க எலும்பெல்லாம் நல்ல பலமாயிடும். நல்ல உற்சாகம் கிடைக்கும் என்றெல்லாம் உற்சாகமாய் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்கள் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள்.
வயதான பெண்களுக்கு வரும் எலும்பு சிதைவு நோய்க்குக் கூட தேனீர் கொஞ்சம் கட்டுப்பாடு விதிக்கிறதாம்.
எவ்ளோ தான் குடிக்கறது ஒரு நாள் என்ற கேள்விக்கு, மூன்று முதல் எட்டு டம்ளர்கள் என்கின்றனர்.
இனியென்ன, சுடச்சுட ஒரு டீ குடிச்சிட்டு வந்து படிங்க.











vijaygopalswami சொன்னது,
ஜூன் 17, 2008 இல் 2:04 மு.பகல்
சாருக்கு சூடா ஒரு டீ போடுங்கப்பா….
விக்னேஸ்வரன் அடைக்கலம் சொன்னது,
ஜூன் 17, 2008 இல் 11:20 மு.பகல்
டீயில் பாலுக்கு பதில் கொஞ்சமாய் பியர் கலந்துக்கலாமா???
jaisankarj சொன்னது,
ஜூன் 17, 2008 இல் 6:10 பிற்பகல்
//டீயில் பாலுக்கு பதில் கொஞ்சமாய் பியர் கலந்துக்கலாமா//
ஏன் விக்னேசு, ரம் கலந்துக்கவேண்டியதுதானே
அரவிந்தன் சொன்னது,
ஜூன் 17, 2008 இல் 7:44 பிற்பகல்
//இனியென்ன, சுடச்சுட ஒரு டீ குடிச்சிட்டு வந்து படிங்க.//
ஒரு பக்கதுக்கு ஒரு டீ குடிச்சா என்ன ஆகரது
சேவியர் சொன்னது,
ஜூன் 18, 2008 இல் 11:38 மு.பகல்
//சாருக்கு சூடா ஒரு டீ போடுங்கப்பா//
எந்த “சாரு”க்கு ?
அவரு டீ குடிப்பாரா என்ன ?
சேவியர் சொன்னது,
ஜூன் 18, 2008 இல் 11:38 மு.பகல்
/டீயில் பாலுக்கு பதில் கொஞ்சமாய் பியர் கலந்துக்கலாமா???
//
பிகரு கலக்காம இருந்தா சரி
சேவியர் சொன்னது,
ஜூன் 18, 2008 இல் 11:39 மு.பகல்
//ஏன் விக்னேசு, ரம் கலந்துக்கவேண்டியதுதானே//
அதானே… விளம்பரத்துல கூட சொல்றாங்களே
நி”Rum” மணம் குணம் மூன்றும் நிறைந்ததுண்ணு !
சேவியர் சொன்னது,
ஜூன் 18, 2008 இல் 11:41 மு.பகல்
////இனியென்ன, சுடச்சுட ஒரு டீ குடிச்சிட்டு வந்து படிங்க.//
ஒரு பக்கதுக்கு ஒரு டீ குடிச்சா என்ன ஆகரது//
vijaygopalswami சொன்னது,
ஜூன் 18, 2008 இல் 12:01 பிற்பகல்
///
அவரு டீ குடிப்பாரா என்ன ?
எந்த “சாரு”க்கு ?
///
சாரு டீ குடிப்பார். ஆதாரத்துக்கு கீழே உள்ள தொடுப்பைச் சொடுக்கிப் பார்க்கவும்.
http://charuonline.com/may2008/pani2.html
muthukumar சொன்னது,
ஜூன் 18, 2008 இல் 12:45 பிற்பகல்
nanri nan ipava kadiku poran
kunthavai சொன்னது,
ஜூன் 19, 2008 இல் 2:01 பிற்பகல்
ஐய்..ஐயோ இந்த பதிவை என்னோட வீட்டுகாரர் பார்க்காமல் இருக்ககடவது. சும்மாவே ஒருநாளைக்கு ஒன்பது டீ கேட்டு இம்சை படுத்துவார்.
இப்பதான் கஷ்டப்பட்டு கொஞ்ஞம் என்வழிக்கு கொண்டுவந்திருக்கேன். இப்படி சதி பண்ணுறீங்களே அண்ணாச்சி.
பதிவை விட பின்னூட்டங்கள் கலக்கலாயிருக்கு.
சேவியர் சொன்னது,
ஜூன் 19, 2008 இல் 8:14 பிற்பகல்
//nanri nan ipava kadiku poran
//
குடிங்க முத்து
சேவியர் சொன்னது,
ஜூன் 19, 2008 இல் 8:15 பிற்பகல்
//ஐய்..ஐயோ இந்த பதிவை என்னோட வீட்டுகாரர் பார்க்காமல் இருக்ககடவது. சும்மாவே ஒருநாளைக்கு ஒன்பது டீ கேட்டு இம்சை படுத்துவார்.//
டீ நீங்களா போட்டு குடிச்சா தான் நல்லது ன்னு மாத்திடவா தங்கச்சி ?
// இப்பதான் கஷ்டப்பட்டு கொஞ்ஞம் என்வழிக்கு கொண்டுவந்திருக்கேன். இப்படி சதி பண்ணுறீங்களே அண்ணாச்சி.
பதிவை விட பின்னூட்டங்கள் கலக்கலாயிருக்கு
//
பெரிய ப்ஃளாஸ்க் ல ஒரு பத்து டீ போட்டு வெச்சுடுங்க
பின்னூட்டங்கள் நல்லா இருக்கு என்று பின்னூட்டம் இட்ட உலகின் முதல் தோழிக்கு நன்றி
சேவியர் சொன்னது,
ஜூன் 19, 2008 இல் 8:16 பிற்பகல்
//சாரு டீ குடிப்பார். ஆதாரத்துக்கு கீழே உள்ள தொடுப்பைச் சொடுக்கிப் பார்க்கவும்.
http://charuonline.com/may2008/pani2.html
//
தம்பி கலக்கிட்டேடா…