ஆண்களை அச்சுறுத்தும் ஆராய்ச்சி !

( பெண் குறிப்பு :  பசங்களா நீங்க சாக்லேட் சாப்பிட்டு குண்டாயிடாதீங்க )

அதிக எடையுடன் இருப்பது பல்வேறு சிக்கல்களைத் தரும் என்பது பல ஆராய்ச்சிகளின் மூலமாக ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்போது அந்தப் பட்டியலில் சேர்ந்திருக்கிறது இன்னொன்று. அதிக எடையுள்ள ஆண்களின் விந்தணு பாதிப்புக்கு உள்ளாகும் என்பதே அது.

அதிக எடையுள்ள பெண்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு குறையும் என்று மருத்துவர்கள் முன்னமே தெரிவித்திருந்தனர். இப்போது ஆண்கள் அதிக எடையுடனும், கொழுப்புச் சத்துடனும் இருப்பது அவர்களுடைய உயிரணுக்களைப் பாதிக்கும் எனும் ஆராய்ச்சியும் வெளியிடப்பட்டுள்ளது.

உடலின் உயரத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான எடை இல்லாமல் இருப்பது இதயம் தொடர்பான நோய்கள், உயர் குருதி அழுத்தம், தூக்கமின்மை, சோர்வு உட்பட பல்வேறு சிக்கல்களைத் தருகிறது. இப்போது விந்தணுக்களும் இதனால் பாதிக்கப்படுகிறது எனும் ஆய்வு உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை இன்னும் அழுத்தமாய் சொல்கிறது.

எத்தனை அவசர வாழ்க்கையெனினும் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதை இந்த ஆராய்ச்சி மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியிருக்கிறது.

13 மறுமொழிகள்

  1. RAVI KUMAR (Kuwait) சொன்னது,

    ஜூலை 15, 2008 இல் 10:58 மு.பகல்

    /// Ayyo payamaha irukku enakku
    Antha padathai parthu ///

  2. சேவியர் சொன்னது,

    ஜூலை 15, 2008 இல் 2:20 பிற்பகல்

    இந்த நக்கல் தானே வேணாங்கறது ;)

  3. kunthavai சொன்னது,

    ஜூலை 16, 2008 இல் 9:52 மு.பகல்

    அண்ணாச்சி நாங்க எல்லாம் ரசித்து படிக்கிற மாதிரி எழுதுங்கன்னு சொன்னா கேட்கிறீங்களா. ரெம்ப மசாலா எல்லாம் எங்கள மாதிரி சின்ன பிள்ளைங்களுக்கு ஆகாது.

    இந்த பின்னூட்டம் இந்த பதிவிற்கு கிடையாது, அதிக மாசாலா சேர்த்து அடிக்கடி எழுதுவீங்களே அதுக்கு.

  4. சேவியர் சொன்னது,

    ஜூலை 16, 2008 இல் 6:27 பிற்பகல்

    //அண்ணாச்சி நாங்க எல்லாம் ரசித்து படிக்கிற மாதிரி எழுதுங்கன்னு சொன்னா கேட்கிறீங்களா. ரெம்ப மசாலா எல்லாம் எங்கள மாதிரி சின்ன பிள்ளைங்களுக்கு ஆகாது.

    //

    ரொம்ப மசாலா நான் எழுதறதே கிடையாதே… :)

  5. விக்னேஸ்வரன் சொன்னது,

    ஜூலை 16, 2008 இல் 8:27 பிற்பகல்

    நான் வந்து பின்னூட்டம் போட்டாதான் அடுத்த பதிவு ரெடியாகும் போல….

    அதான் நான் விச்கி, பிராண்டியோடு நிப்பாடிக்கிறது. சாக்லேட் எல்லாம் சாப்பிடுவது கிடையாது. உடல் நலத்துக்கு கேடு… நீங்களும் தான் அதிகமா சாக்லேட் சாப்பிடாதிங்க… சின்ன புள்ளைங்க சாக்லேட் சாப்பிட்ட பல் பூச்சி பிடிக்கும்னு சொல்வாங்க…

  6. bashakavithaigal சொன்னது,

    ஜூலை 17, 2008 இல் 9:16 மு.பகல்

    இந்த‌ மாதிரி ஒரு பொண்ணு
    இந்த‌ மாதிரி ஒரு சாக்லெட்ட‌
    இந்த‌ மாதிரி பாதி க‌டிச்சுட்டு
    இந்த‌ மாதிரி வேணுமானு கேட்டா
    எந்த‌ மாதிரி வேணாம்னு சொல்ற‌து!!!!!

  7. சேவியர் சொன்னது,

    ஜூலை 17, 2008 இல் 10:12 மு.பகல்

    //நான் வந்து பின்னூட்டம் போட்டாதான் அடுத்த பதிவு ரெடியாகும் போல…. //

    :)

    //அதான் நான் விச்கி, பிராண்டியோடு நிப்பாடிக்கிறது. சாக்லேட் எல்லாம் சாப்பிடுவது கிடையாது. உடல் நலத்துக்கு கேடு…//

    நல்ல கொள் – கை

  8. சேவியர் சொன்னது,

    ஜூலை 17, 2008 இல் 10:15 மு.பகல்

    //இந்த‌ மாதிரி ஒரு பொண்ணு
    இந்த‌ மாதிரி ஒரு சாக்லெட்ட‌
    இந்த‌ மாதிரி பாதி க‌டிச்சுட்டு
    இந்த‌ மாதிரி வேணுமானு கேட்டா
    எந்த‌ மாதிரி வேணாம்னு சொல்ற‌து!!!!!//

    சரி..சரி… உங்க உளறலில் அர்த்தம் புரியுது.. விடுங்க…

  9. vijaygopalswami சொன்னது,

    ஜூலை 18, 2008 இல் 2:49 மு.பகல்

    ஐதோடா, மாமா எப்பவுமே பசங்களுக்கு மட்டும் தான் பூச்சி காட்டுவாரு, பொண்ணுங்கள உட்ருவாரு….

    சோக்கா கீதுபா, பசங்களுக்கு ஒரு ஞாயம், பொன்னுங்களுக்கு ஒரு ஞாயம்….

  10. சேவியர் சொன்னது,

    ஜூலை 18, 2008 இல் 9:58 மு.பகல்

    ஏம்மா… இன்னாத்துக்கி நீ லேடீஸு ஜென்ஸ்ன்னு பிர்ச்சு பேசறே… நம்ம விவேக் கூட சொல்லியிருக்காருபா… ஆருமே இல்லாத டீ கடையிலே ஆருக்குடா டீ ஆத்தறேன்ன்னு…

  11. K.BALA சொன்னது,

    ஆகஸ்ட் 11, 2008 இல் 11:21 மு.பகல்

    ENNA KODUMAI SARAVANA

  12. சேவியர் சொன்னது,

    ஆகஸ்ட் 11, 2008 இல் 2:12 பிற்பகல்

    :)

  13. navanith சொன்னது,

    பெப்ரவரி 24, 2009 இல் 6:59 பிற்பகல்

    nanum vanthathilarunthu pakkirean kilukiluppa yethai uavathu solluveenganu pathha . tension aaguthu


மறுமொழியொன்றை வழங்குக