எண்ணிக்கைக் கணக்கில் இது எனது பதினோராவது புத்தகம் எனினும், இதுவே எனது முதல் கட்டுரைத் தொகுப்பு என்பதில் மனதில் சிறப்பிடம் பெறுகிறது.
வாய்ப்பு இருந்தால் வாசித்துப் பாருங்கள்.
வாசித்தால் விமர்சனம் தாருங்கள்
அன்புடன்
சேவியர்
அருவி வெளியீடு
9444302967
பக்கங்கள் 128
விலை : 70/-
சுந்தரபுத்தன் அவர்கள் இந்த நூலுக்காக அளித்த பின்னுரை
சேவியரின் வார்த்தைகளுக்குச் சிறகுகள் முளைத்து விடுகின்றன. சில நேரங்களில் அந்தச் சிறகுகள் நம்மை பறவைகளாக்கி விடுகின்றன.
ஏற்கனவே கவிஞராய் அறியப்பட்ட சேவியர், ஒரு தேர்ந்த கட்டுரையாளராய் வெற்றி கண்டிருக்கிறார். தற்கால தமிழ் உரைநடை எழுத்தில் நட்சத்திரமென மின்னுகிறார் அவர்.
போதை, குழந்தைகள், மீடியா, மன அழுத்தம், கணினி என ஒன்றுக்கொன்று தொடர்பற்ற விஷயங்களை அதன் ஆழம் கண்டு எழுதியிருக்கிறார்.
ஒற்றை முத்தெடுக்க முக்கடலிலும் மூழ்க சம்மதம் கொண்ட சேவியரின் இந்நூல் ஒரு கட்டுரைத் தொகுப்பு தான். ஆனால், அதனுள்ளே உண்மையின் சல்லி வேர்கள் ஊடாடிக் கிடக்கின்றன.
இவை கற்பனையின் விளைச்சல்கள் அல்ல. கருத்துருக்கள். எதுகுறித்தும் மெய்ப்பொருள் காண விழையும் இவர் ஒரு மென்பொருள் பொறியாளர். எளிமையான இவரது எழுத்து உங்கள் சிந்தனைத் தளத்தை ஒரு படி உயரே வைக்கும்.
அருவியின் பெருமை மிகு வெளியீடுகளில் இதுவும் ஒன்று. இங்கே அவர் உழவுக்கு வைத்திருந்த விதை நெல்லை உண்ணக் கொடுத்திருக்கிறார்.
இந்த நூலுக்கு நான் எழுதிய முன்னுரை
வேர்களைத் தேடி
ஃ
‘உன் தாத்தாவின் தாத்தா பெயர் தெரியுமா ? ‘ என்னும் வினாவோடு ஒருமுறை என்னை அணுகினார் நண்பர் ஒருவர். தாத்தாவின் தந்தை பெயரைத் தாண்டி எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதே அப்போது தான் எனக்கு உறைத்தது . நன்றாகத் தெரியும் என்று நாம் நினைக்கும் பல விஷயங்களில் போதிய அறிவு நமக்கு இருப்பதில்லை என்பதை உணர்த்துவதாக இருந்தது அது.
நாம் பணிசெய்யும் துறை சார்ந்த விஷயங்களோ, நாம் வசிக்கும் இடம் சார்ந்த விஷயங்களோ, நாம் பயன்படுத்தும் பொருள் சார்ந்த விஷயங்களோ அல்லது நாம் கலந்து கொள்ளும் விழா சார்ந்த விஷயங்களோ எதை எடுத்துக் கொண்டாலும் நமக்குத் தெரியாத வரலாற்று வேர்கள் அவற்றுக்குள் மறைந்து கிடக்கின்றன.
அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் தகவல்களின் சிலிர்ப்பு போல பல பொருட்களின் பூர்வீகம் சிலிர்க்க வைக்கிறது. எல்லைகள் வகுத்துக் கொள்ளாமல் ஒரு சர்வதேசக் கண்ணோட்டத்தில் அணுகுகையில் இந்த சிலிர்ப்பு இன்னும் விரிவடைகிறது.
அந்த சிலிர்ப்பின் அனுபவத்தைக் கொண்டு அறிவின் வெளிச்சத்தை விரிவுபடுத்தும் கட்டுரைகளை இந்த நூலில் நீங்கள் காண முடியும் என்னும் நம்பிக்கை எனக்கு உணடு.
தெரிந்த பொருட்கள் தெரியாத தகவல்கள் என்னும் கண்ணோட்டத்தில் அணுகி எழுதப்பட்ட கட்டுரைகளே இதில் பெரும்பாலானவை. தமிழ் ஓசை நாளிதழின் ஞாயிறு இணைப்பான களஞ்சியம் இதழில் தொடர்ந்து வெளியான கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பே இந்த நூல்.
கவிதை, கதை எனும் இலக்கிய வடிவங்களைத் தாண்டி கட்டுரைகள் எனும் வடிவத்தில் வெளியாகும் என்னுடைய முதல் நூல் இது என்பது நெஞ்சுக்கு சற்றே நெருக்கமாய் இடம் பிடித்துக் கொள்கிறது.
பாசாங்கில்லாத புன்னகையுடனும் தணியாத சமூக வேட்கையுடனும் பத்திரிகைத் துறையில் இயங்கி வரும் நண்பர் யாணன் அவர்கள் தமிழோசை களஞ்சியம் இதழுக்காக கணினி துறை சார்ந்த கட்டுரைகள் சில வேண்டும் என்று கேட்டார். அந்த கட்டுரைகளுக்குக் கிடைத்த வாசகர் கடிதங்களே தொடர்ந்து பல விஷயங்களைக் குறித்து வாரம் தோறும் எழுத வைத்தது. அதற்காக தமிழோசைக்கும், நண்பர் யாணன் அவர்களுக்கும் என்னுடைய முதல் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
உற்சாகமாய் சிறகடித்துப் பறக்கும் சிட்டுக் குருவியின் பரபரப்புடன் பதிப்பகத் துறையில் இயங்கி வரும் நண்பர் பூபதி அவர்களுக்கும், இந்த கட்டுரைகளை நூல் வடிவில் கொண்டு வர வேண்டும் எனும் அவருடைய வேட்கைக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய எழுத்துப் பயணத்தின் கூடவே நடந்து தொடர் உற்சாகம் வழங்கி வரும் நண்பர் என்.சொக்கன் அவர்களுக்கும், தோழர் சுந்தரபுத்தன், எழுத்தாளர் இந்திரன் அவர்களுக்கும் நன்றிகள் பல.
கட்டுரைகளின் நேர்த்திக்கான தகவல் சேமிப்புகளில் பெருமளவுக்கு உதவி செய்த எனது துணைவியார் ஸ்டெல்லா அவர்களுக்கும், நண்பர் பென்கிருபா , மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
.











aruna சொன்னது,
ஜூலை 31, 2008 இல் 8:45 பிற்பகல்
வாழ்த்துக்கள் சேவியர்!
அன்புடன் அருணா
நிமல் - NiMaL சொன்னது,
ஜூலை 31, 2008 இல் 9:38 பிற்பகல்
வாழ்த்துகள் சேவியர்!!!
top10shares சொன்னது,
ஜூலை 31, 2008 இல் 10:06 பிற்பகல்
///உன் தாத்தாவின் தாத்தா பெயர் தெரியுமா ? ‘ என்னும் வினாவோடு ஒருமுறை என்னை அணுகினார் நண்பர் ஒருவர். தாத்தாவின் தந்தை பெயரைத் தாண்டி எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதே அப்போது தான் எனக்கு உறைத்தது . நன்றாகத் தெரியும் என்று நாம் நினைக்கும் பல விஷயங்களில் போதிய அறிவு நமக்கு இருப்பதில்லை என்பதை உணர்த்துவதாக இருந்தது அது./// உன்மை தான்…. நானும் ஒருமுறை இந்த கேள்வியை எதிகொன்டேன்…. அந்த கேள்வி தோற்றுவித்த சிந்தனைகள் ஏராளம்…..
வாழ்த்துக்கள் ………….
(கூடிய விரைவில் உங்கள் புத்தம் புதிய புத்தகத்தை புரட்டிபார்த்து விட்டு விமர்சனம் எழுதுகிறேன்.)
சாய்கணேஷ்
http://top10shares.wordpress.com
சாய்கணேஷ்
விக்னேஸ்வரன் சொன்னது,
ஜூலை 31, 2008 இல் 11:48 பிற்பகல்
நான் கேட்கவில்லை…
விக்னேஸ்வரன் சொன்னது,
ஜூலை 31, 2008 இல் 11:49 பிற்பகல்
இந்த பதிவை படிக்கவில்லை…
விக்னேஸ்வரன் சொன்னது,
ஜூலை 31, 2008 இல் 11:49 பிற்பகல்
நீங்கள் யார் என எனக்கு தெரியாது…
விக்னேஸ்வரன் சொன்னது,
ஜூலை 31, 2008 இல் 11:49 பிற்பகல்
வேறு காரணங்கள் வேண்டுமா…
அரவிந்தன் சொன்னது,
ஆகஸ்ட் 1, 2008 இல் 8:20 மு.பகல்
வாழ்த்துக்கள்
அரவிந்தன் சொன்னது,
ஆகஸ்ட் 1, 2008 இல் 8:22 மு.பகல்
இந்த புத்தகத்தை-ஆவது வாங்கி படிக்க பாக்குரேன்
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 4, 2008 இல் 10:57 மு.பகல்
/வாழ்த்துக்கள் சேவியர்!
அன்புடன் அருணா//
நன்றி அருணா
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 4, 2008 இல் 10:58 மு.பகல்
/வாழ்த்துகள் சேவியர்!!!
//
நன்றி நிமல்
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 4, 2008 இல் 10:58 மு.பகல்
//உன்மை தான்…. நானும் ஒருமுறை இந்த கேள்வியை எதிகொன்டேன்…. அந்த கேள்வி தோற்றுவித்த சிந்தனைகள் ஏராளம்…..
வாழ்த்துக்கள் ………….
(கூடிய விரைவில் உங்கள் புத்தம் புதிய புத்தகத்தை புரட்டிபார்த்து விட்டு விமர்சனம் எழுதுகிறேன்.)
சாய்கணேஷ்
http://top10shares.wordpress.com
சாய்கணேஷ்
//
நன்றி சாய் கணேஷ்
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 4, 2008 இல் 11:01 மு.பகல்
விக்கி.. விக்கி…


எப்போ இந்தியா வரீங்க ?
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 4, 2008 இல் 11:06 மு.பகல்
//இந்த புத்தகத்தை-ஆவது வாங்கி படிக்க பாக்குரேன்
//
vikneshwaran adakkalam சொன்னது,
ஆகஸ்ட் 4, 2008 இல் 12:45 பிற்பகல்
இந்தியாவில் வியாபார வேலை ஏற்பட்டால் வருவேன். இப்போதைக்கு இல்லை… உங்கள் வீட்டு முகவரி கொடுங்கள்… வெள்ளை காபி பொடி அனுப்பி வைக்கிறேன். மூன்று பேருக்கு அனுப்ப வேண்டும். கையோடு உங்களுக்கும் அனுப்புகிறேன்.
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 4, 2008 இல் 2:33 பிற்பகல்
உன்னால வரமுடியாதுன்னா நான் வரேன்