கீற்று vs புகழேந்தி : மறைக்கப்பட்ட உண்மைகள்

aao1

கவிஞர் புகழேந்தி குறித்து கீற்று  வலைத்தளத்தில் வெளியான கட்டுரையைப் படிக்க நேர்ந்தது ! கட்டுரை வியப்பளித்தது, காரணம் ஓவியர் புகழேந்தியுடன் பல ஆண்டுகால ஆரோக்கியமான நட்பில் இருப்பவன் நான்.

சில ஆண்டுகளுக்கு முன் உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை இயக்குனர் இராம்மோகன் அவர்களுடன் மலர்ந்த நட்பு, ஓவியர் புகழேந்தி குறித்த அறிமுகத்தையும் ஆரம்பித்து வைத்தது. அவருடைய மொழி, கலை, ஈழம் சார்ந்த சிந்தனைகளின் ஆழத்தையும், அவருடைய படைப்புகளில் ஈழம் ஏற்படுத்திய பாதிப்புகளையும் உண்மை ஆர்வலர்கள் உணர்வார்கள்.

எனது நூல் ஒன்றுக்கு (அன்னை) ஒரு ஓவியம் தரமுடியுமா என தயங்கித் தயங்கிக் கேட்டபோது, என்ன இப்படித் தயங்குகிறீர்கள் என உரிமையுடன் கேட்டு எந்த ஓவியம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என ஓவியக் கடலுக்குள் அமிழ்த்தியவர் அவர்.

அவருடைய ஈழம் சார்ந்த ஈடுபாட்டை உண்மையிலேயே அறிந்து கொள்ளவேண்டுமெனில் கவிஞர் காசி ஆனந்தனிடம் உரையாட நேர்ந்தால் கேளுங்கள். அதை விட மேலான ஒரு கருத்தை நீங்கள் வேறு யாரிடமும் பெறத் தேவையிருக்காது.

ஈழம் குறித்த உரையாடல்களில் கண்ணீர் மல்க கசிந்துருகும் கவிஞரின் மனமும், ஓவியரின் மனமும் நேரில் பழகுபவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய சமாச்சாரங்கள்.

ஓவியம் வரைய போராட்டக் குழுவினர் ஓவியரை அணுகியபோது நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது என தயங்கியிருக்கிறார். ஏகப்பட்ட அலுவல்களுக்கு இடையே முழிபிதுங்கிக் கொண்டிருந்தாலும் ஈழம் சார்ந்த பணி என்பதால் ஒத்துக் கொண்டிருக்கிறார். அப்போதே, என்னிடம் பணம் இல்லை, ஓவியம் வரையத் தேவையான பொருட்கள் வாங்குவதற்காக 13,500 ரூபாய் தேவைப்படும் என்று சொல்லியிருக்கிறார்.

வந்தவர்கள் 10,000 ரூபாயைக் கையளித்ததும், பின் 3,500 ரூபாய் ஓவியர் தனது கையிலிருந்து இந்தப் போராட்டத்தில் தன்னுடைய பங்காக இருக்கட்டும் என கூறியதும் சம்பந்தப் பட்டவர்கள் அறிவார்கள்.

ஒரு நபர் கூடவே இருந்து ஓவியர் படம் வரைவதைப் பார்த்திருக்கிறார், எழுதியவர்களைப் போலன்றி, நள்ளிரவு வரை இமைகளை இழுத்துப் பிடித்து ஓவியம் வரைந்த ஓவியரின் மனதில் ஈழம் இருந்தது கூடவே ஈரமும்.

ஓவியம் என்னிடம் இருக்கட்டும் நான் பத்திரமாய் வைத்துக் கொள்கிறேன், உங்களுக்கு எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் நீங்கள் எடுத்துச் சென்று பயன்படுத்துங்கள். கண்காட்சிகள் நடத்தும் போது நானும் பயன்படுத்திக் கொள்கிறேன் என்பது தான் ஓவியர் சொன்ன செய்தி.

புகழேந்தி புகழ் பாடுகிறார் என்பதெல்லாம் ஒரு குற்றச் சாட்டாய் வைத்தால், சங்ககாலம் முதல் டிரஸ்ட் புரம் வரை அலச வேண்டியிருக்கும். கலைஞனிடம் திறமை இருக்கும், கர்வமும் இருக்கும் என்பது கவிப்பேரரசுவின் அடிக்கோடிட்ட நம்பிக்கை. அதற்குச் சான்று எழுத்தாளர்கள்.

கவிப்பேரரசுக்கு நாகேஸ்வரராவ் பார்க்கில் அமர்ந்தால் கவிதை வருமெனில், புகழேந்திக்கு அவருடைய ஸ்டூடியோவில் அமர்ந்தால் ஓவியம் வரும். இதெல்லாம் கலைஞனின் தனிப்பட்ட விருப்பங்கள். கூட்டில் அடைத்து முட்டை போடு எனச் சொல்ல அவர்கள் ஒன்றும் கோழிகள் அல்ல. கட்டிப் போட்டுப் பால்கறப்பதெல்லாம் கலையில் சாத்தியமில்லை.

இதற்கெல்லாம் ஆழிப்பேரலைத் திருடர்களுடன் புகழேந்தியை ஒப்பிட்டுப் பேசியிருப்பதற்குப் பின்னணி வேறு இருக்கிறது.

பத்திரிகைத் துறையின் பின்னணியில் இயங்கும் அரசியல் நம்மில் பலருக்கும் தெரிந்ததே. அதைவிட பல மடங்கு அதிகமான அரசியல் வீச்சம் ஓவியத் துறையில் இருக்கிறது என்பதை, ஓவியங்கள் குறித்த தொடர் கட்டுரை ஒன்றை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் வாயிலிருந்து விரிவாகக் கேட்கும் வாய்ப்பு ஒருமுறை வாய்த்தது.

இயக்குனர் மகேந்திரன் அவர்கள் ஆத்மார்த்த நேசத்துடன் புகழேந்தியைப் பற்றி இயக்கிய குறும்படம், புகழேந்தியின் நூல்கள், அவருடைய பேச்சுகள், உலக அளவிலான அங்கீகாரம் இவையெல்லாம் சக ஓவியர்களிடையே புகைச்சலையும், எரிச்சலையும் ஏற்படுத்தியிருப்பதில் வியப்பில்லை.

இந்தக் கட்டுரையின் மூலமாக தன்னுடைய எரிச்சலை, அல்லது ஏதோ ஒரு தூரிகையின் எரிச்சலை தணித்துக் கொண்டிருக்கிறார் கட்டுரையாளர்.

ஆனால், ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்,

கீற்று கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களில் பல பிரசுரிக்கப்படவில்லை, நான் அனுப்பிய பின்னூட்டம் ஒன்று உட்பட ! காரணம் அவை நியாயத்தைப் பேசின.

சரி… இந்த நிகழ்வில் தொடர்புடையவர்கள் மூன்று பேர் ! அவர்கள் என்ன சொல்கிறார்கள் இந்த நிகழ்வைக் குறித்தும், கட்டுரை குறித்தும் …

இதோ…

 

ஓவியர் புகழேந்தி குறித்த கட்டுரையை மறுத்து சம்பந்தப்பட்டவர்களின் பதில்

ஐ.டி ஊழியர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஓவிய வெளியீட்டிற்காக ஓவியர் புகழேந்தியை தொடர்பு கொண்டவர்கள் செந்தில், ஸ்ரீராம், பாலமுருகன் மட்டுமே. இந்த மூவரும் சேர்ந்து உண்மையை சுருக்கமாக எழுதுகிறோம்.

ஒவியர் புகழேந்தியை 9 ம் தேதியில் சந்தித்து நாங்கள் நடத்தவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்தில், ஓவியம் கொண்டு நிகழ்ச்சி ஒன்று நடத்த
வேண்டும் என்று கேட்டோம். என்ன விதமாக எல்லாம் செய்யலாம் என்று ஓவியரிடம் பேசினோம்.

அ. அவர் மட்டும் வந்து உண்ணாவிரத இடத்திலே ஓவியம் வரைதல்
ஆ. 3 அல்லது 4 ஓவியர்கள் இணைந்து உண்ணாவிரத இடத்திலே ஓவியம் வரைதல்
இ. ஸ்டியோவில் வரைந்து ஓவிய வெளியீடு செய்தல்.
ஈ. ஓவிய கண்காட்சியாக பழைய ஓவியங்களை வைத்தல்.

உண்ணாவிரத தளம், இருக்கும் கால அவகாசம், பொருளாதார சக்தி இவற்றை கருத்தில் கொண்டு, “ஸ்டுடியோவில் ஓவியம் வரைந்து 14 அன்று ஓவியம்
வெளியிடலாம்” என்று நாங்கள் தான் முடிவு செய்தோம்.ஓவியம் வரைவதற்குதேவையான பொருட்களை வாங்குவதற்கு 10000 ரூ தந்தோம்.

ஓவியத்தை 14 ம் தேதி அன்று வெளியிட்டு கையெழுத்து பிரசாரத்திற்கு உபயோகப்படுத்துவோம் என்றும், ஓவியத்தின் மென் பிரதியை அடுத்து செய்யவிருக்கும் “மின்னஞ்சல் பிரச்சாரத்திற்கு” பயன்படுத்துவோம் என்றும் ஒப்புகொண்டோம்.

10 x 5 அளவிலான ஒவியம் ஒன்று வரைந்து, காயாத நிலையில் 14 ம் தேதி அன்று காலை எங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. ஒரு மென் பிரதியை ஓவியர் எங்களுக்கு வழங்கினார்.

மாலையில் ஓவியத்தை ஒவியர் எடுத்து சென்றார். இது குறித்து சுருக்கமாக சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறோம்.

1.      ஒவியம் வரையப்படுவதன் நோக்கமே, அது மொழியைத் தாண்டி, ஈழப் போராட்டத்தை உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் பேச வேண்டும் என்பதே ஆகும்.

2.      ஓவியம் வரைய தேவையான பொருட்களை தந்ததாலேயே அதை உரிமைக் கொண்டாடக் கூடாது. கலையை விலை பேசும் உரிமை நமக்கு இல்லை.

3.      மேலே கூறப்பட்ட இந்த நிகழ்வைக் கொண்டு ஓவியர் புகழேந்தி குறித்த இந்த குற்றச்சாட்டுகள் நியாயமற்றது. ஓவிய வெளியீட்டில் முழுக்க முழுக்க சம்பந்தப்பட்டவர்கள் என்ற முறையில் இந்த கட்டுரையை நாங்கள் முழுவதுமாக நிராகரிக்கிறோம். ஓவிய வெளியீட்டின் அத்தனை விசயங்களும் எங்கள் மூவரின் முழு சம்மதத்துடன் நடந்தவை.

4.      எல்லாவற்றுக்கும் மேலாக, ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு தமிழகத்தில் ஆதரவு பெருகி வரும் சூழலில் , தமிழ அரசும், இந்திய அரசும் நம்மை வஞ்சித்து வரும் நிலையில், நாம் கையாலாகாமல் வாய் மூடி இருக்கும் நிலையில் இது போன்ற நியாயமற்ற கட்டுரைகள் மொத்த சூழலையும் திசை திருப்புவதும், எதிரிகளின் சூழ்ச்சிக்கு பலியாவதும் ஆகும்.

ஓவியர் புகழேந்திக்கு வேண்டுகோள்:

இந்த நிகழ்வுக்கு எங்களை மன்னிக்கவும். ஈழ விடுதலை போராட்டத்தில் தங்கள் பணி தொடர வேண்டும்.

வாசகர்களுக்கு வேண்டுகோள்:
மேலே குறிப்பிட்ட 3 வது கருத்தை மனதில் கொண்டு இது குறித்து வலைதளத்தில் விவாதிக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.
தொடர்புக்கு:

ஸ்ரீராம்: 9940084921
செந்தில்: 9941931499
பாலா: 99404 95549

ஆசிரியருக்கு:
வலைதளத்தில் இருக்கும் கருத்து சுதந்திரம் ஆரோக்கியமாக இல்லை என்பது இக்கட்டுரை மூலம் உணர
முடிகிறது. விமர்சனக் கட்டுரைகள் நியாயமானதாகவும், நேர்மையானதாகவும், நாகரிகமானதாகவும்  இருக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில்
அனைவர்க்கும் தாழ்வு.

உண்மையுடன்,
செந்தில், ஸ்ரீராம்,
பாலமுருகன்

ஒன்று தான் சட்டென தோன்றியது…
கீற்று கூட ஒரே குட்டையில் ஊறிய மட்டை தானா ? நான் வேறுவிதமாக அல்லவா நினைத்தேன் !!!!

9 மறுமொழிகள்

  1. venkatramanan சொன்னது,

    ஜனவரி 8, 2009 இல் 8:16 பிற்பகல்

    ராம்கி சொல்வது குறித்து முன்பு ஐயமிருந்தது! இப்போது உண்மைதானோ என நினைக்கத் தோன்றுகிறது! (உண்மையை) மறுப்பைப் பதிவு செய்தமைக்கு நன்றி சேவியர்.

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

  2. சேவியர் சொன்னது,

    ஜனவரி 9, 2009 இல் 7:18 பிற்பகல்

    முழுப் பூசணிக்காய்…..

  3. சேவியர் சொன்னது,

    ஜனவரி 9, 2009 இல் 7:18 பிற்பகல்

    நன்றி வெங்கட்ராமன் :)

  4. இனியன் சொன்னது,

    ஜனவரி 23, 2009 இல் 5:03 பிற்பகல்

    நானும் அந்த கட்டுரயை கீற்றுவில் வாசித்தேன். உண்மையாக இருக்குமோ! என நினைத்தேன். இணையத்தில் வலம் வரும்போது தங்கள் தளத்தில் அதற்கான விடை கிடத்தது.மகிழ்ச்சி. நேரம் கிடைக்கும்போது http://muzhangu.wordpress.com/ அய் பார்க்கவும்.நன்றி.

  5. சேவியர் சொன்னது,

    ஜனவரி 27, 2009 இல் 5:34 பிற்பகல்

    /நானும் அந்த கட்டுரயை கீற்றுவில் வாசித்தேன். உண்மையாக இருக்குமோ! என நினைத்தேன். இணையத்தில் வலம் வரும்போது தங்கள் தளத்தில் அதற்கான விடை கிடத்தது.மகிழ்ச்சி. நேரம் கிடைக்கும்போது http://muzhangu.wordpress.com/ அய் பார்க்கவும்.நன்றி.//

    நன்றி இனியன்… உங்கள் தளத்தை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி…

  6. குமார் சொன்னது,

    பெப்ரவரி 9, 2009 இல் 10:12 பிற்பகல்

    hi

  7. kumar சொன்னது,

    பெப்ரவரி 12, 2009 இல் 3:48 பிற்பகல்

    சேவியர் கூறுவது நம்பும்படி இல்லை. புகழேந்தி புகழுக்கு அலைவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். தன்னைப் பற்றி செய்தி, பேட்டி போடுமாறு தொல்லை பண்ணும் ஆசாமி என்று எனது பத்திரிக்கையாள நண்பர்கள் பலர் என்னிடம் கூறியிருக்கிறார்கள். அதேபோல் கொண்டாடும்படியான ஓவியங்கள் எதையும் அவர் வரைந்துவிடவில்லை. ‘புகழேந்தி வரையனும்னா நூறு பேர் சாகணும்’ என்று அவரைப் பற்றி கிண்டலாக சிலர் கூறுவதுண்டு. பூகம்பம், கலவரம், மரணம் நிகழ்ந்தால், பத்திரிக்கைகளில் ‘மரணமே உனக்கு மரணம் வராதா?’ என்ற ரீதியில் கவிதைகள் வருமே, அதுபோலத்தான் இவரது ஓவியங்களும்.

    தன்னைப் பற்றி புகழ்ந்து எழுதித் தருமாறு பிரபலங்களை நச்சரித்து, கட்டுரைகளைக் கேட்டு வாங்கி, அவற்றைத் தொகுத்து தனக்குத் தானே மலர் தயாரித்தவர்தான் புகழேந்தி. இதெல்லாம் யாருக்குத் தெரியாத விஷயங்களா என்ன? எந்த ஆர்ட் கேலரியிலாவது இவரது ஓவியங்கள் வைக்கப்படிருக்கிறதா? எந்த விமர்சகராவது இவரது ஓவியங்களைப் பாராட்டி எழுதியிருக்கிறாரா? ஈழம் பற்றி பேசுகிறார் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் காசி ஆனந்தன் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் இவரைப் பாராட்டியிருக்க வேண்டும். ஆனால் அதையும், காசு சம்பாதிப்பதற்காகத்தான் இவர் பயன்படுத்தியிருக்கிறார்.

    கீற்று இணையதளத்தை தொடர்ந்து வாசிப்பவர்களில் நானும் ஒருவன். எந்த சமரசமும் இன்றி வெளிப்படையாக அவர்கள் இயங்கி வருவதாகத்தான் எனக்குப் படுகிறது. அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். ஒருவேளை உங்கள் நண்பர் புகழேந்தியை அம்பலப்படுத்தியதால் உங்களுக்கு கசக்கிறதோ என்னவோ?

    அண்மையில் கீற்று நந்தன், புகழேந்தி பிரச்சினை தொடர்பாக வாசகர் ஒருவருக்கு அளித்த பதில் உங்களுக்கும் பொருத்தமாக இருக்குமென எனக்குப் படுகிறது.

    **************************

    எனக்கு ‘அறிவிலி’ பட்டம் கொடுத்திருக்கும் ‘அறிவாளி’ நண்பர் கவிபாஸ்கருக்கும், வாசகர்களுக்கும்,

    வணக்கம்.

    கிராமத்தில், காலாவதியாகிப்போன ‘காலி பெருங்காய டப்பா’க்களுக்கு கூடவே சில கைத்தடிகள் இருப்பார்கள். பெருங்காய டப்பாவின் புகழ் பாடுவது அவர்களது வேலையாக இருக்கும். ‘அண்ணனைப் பத்தி தெரியும்லே… அந்தக் காலத்துலே அவர் நடந்து வந்தாலே…’ என்று ஆரம்பிப்பார்கள். யார் எது கேட்டாலும், அண்ணன் பேசமாட்டார். எல்லாம் கைத்தடிகள் பார்த்துக்கொள்வார்கள். அத்தகைய கைத்தடிகளில் ஒருவராக நண்பர் கவிபாஸ்கர் இருப்பது நமக்கு வருத்தமே. இருப்பினும் அவரையும் மதித்து பதில் சொல்லலாம் என நினைக்கிறேன்.

    ஓவியத்திற்கு எவ்வளவு செலவானது என்பதை ஓவியர் மட்டும்தான் சொல்ல வேண்டுமாம்.. ஏதோ ஓவியம் வரைவதற்குத் தேவையான பொருட்களை எல்லாம், புகழேந்தி தானே அவித்து, புடைத்து, காய்ச்சி வடித்து தயாரிப்பது போல் கூறுகிறார். உண்மை என்னவென்றால் ஓவியம் வரைவதற்குத் தேவையான பொருட்களை யார் வேண்டுமானாலும் கடையில் வாங்கிக்கொள்ளலாம். அப்படிப்பட்ட கடை ஒன்றில், 10 x 5 அளவிலான ஓவியத்திற்கான (Oil painting) பொருட்களின் விலையை விசாரித்தேன். அதன் விவரம்:

    Oil color set (12 color set): ரூ.590 (Extra tube will cost Rs.48)
    Canvas : Rs.180
    Emulsion 1 Ltr: Rs.180
    Brush set (6 size): Rs.240
    Frame 40 feet (1 feet – Rs.5): Rs.200
    Carpenter Charge: Rs.200

    மொத்தம் ரூ.1590 ரூபாய் ஆகிறது. சந்தேகம் இருந்தால், சென்னை பாரிமுனை பேருந்து நிலையம் எதிரே உள்ள கிரி ஸ்டேஷனரி எம்போரியம், ஸ்ரீராமுலு செட்டி & சன்ஸ் கடைகளில் விசாரித்துக் கொள்ளலாம். அதுவும் அடிக்கடி வாங்கும் ஓவியர்களுக்கு 10லிருந்து 20 சதவீத தள்ளுபடியும் உண்டு என்று அவரது கல்லூரி மாணவர்களே கூறுகிறார்கள். மேலும் புதிதாக ஓவியம் வரைபவர்கள்தான் இவை அனைத்தையும் வாங்குவார்கள். அனுபவம் வாய்ந்த ஓவியர்களிடம் பிரஷ், பெயிண்ட் உள்ளிட்டவை இருக்கத்தான் செய்யும். 12 கலர் வாங்கினாலும் அவை அனைத்தையும் ஒரு ஓவியத்தில் பயன்படுத்த முடியாது. இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் புகழேந்தி வரைந்த ஓவியத்திற்கு 1000 ரூபாயிலிருந்து 1200 ரூபாய்க்கு மேல் ஆகியிருக்காது.

    ‘அதெல்லாம் இல்லை. புகழேந்தி அமெரிக்காவிலிருந்து ஓவியப் பொருட்களை இறக்குமதி செய்தார், ஒவியம் வரைய mood வேண்டும் என்பதற்காக கொடைக்கானல் போனார், மரத்தாலான frameக்குப் பதிலாக தங்கத்தாலான frame பயன்படுத்தினார்’ என்றெல்லாம் இனி சொல்வீர்களேயானால், மன்னிக்கவும் நண்பரே, என்னுடைய நேரத்தையும் வாசகர்களின் நேரத்தையும் வீணடிக்காதீர்கள்.

    அடுத்து, ஓவியத்தை அவரே வைத்துக்கொண்டது பற்றியது. ஞாயிற்றுக்கிழமை காலை புகழேந்தி ஓவியத்தைக் கொண்டு வந்தார். மாலையில் எடுத்துச் சென்றுவிட்டார். அப்போது I.T. இளைஞர்கள் சிலர் ‘அதை எடுக்கக்கூடாது’ என்று சொல்லியிருக்கின்றனர். மறுநாள் திங்கட்கிழமை நான் புகழேந்தியிடம் பேசியபோது, ‘ஓவியத்தை உங்களால் பாதுகாக்க முடியாது. நான் கண்காட்சிகளில் வைக்கப்போகிறேன்’ என்று சொன்னார். அடுத்து, ‘ஓவியம் எனக்கு, ஓவியத்தோட புகைப்படங்கள் அடங்கிய CD உங்களுக்கு’ என்ற டீல் நடந்ததாக ஒரு புதுக்கதை வந்தது. இப்போது ‘ஒரு வாரம் கழித்து தருவதாக இருந்தார்’ என்று வேறு கதை சொல்கிறீர்கள் (மாட்டிக்கொண்ட திருடன் ‘ஒரு வாரம் வீட்டிலே வச்சிருந்திட்டு தரலாம்னு இருந்தேன்’ என்று சொல்வது போலிருக்கிறது). சம்பந்தப்பட்டவர்கள் சொல்லாமல், நீங்களாகவே இதை சொல்லியிருக்க முடியாது. இன்னும் எத்தனை கதைகள் வருகிறது என்று பார்ப்போம்.

    சரக்கில்லாத இயக்குனர்கள் பரபரப்பான சமூகப்பிரச்சினை ஒன்றை வைத்து படமெடுப்பதாகச் சொல்லி அதை விற்க முயற்சிப்பார்கள். அதனுடன் ஒப்பிடத்தக்கதே புகழேந்தியின் சமூக அக்கறை. இல்லையென்றால், 1000 ரூபாய் பொருளை 10000 ரூபாய் என்று சொல்லியிருக்க மாட்டார்.

    ஓவியங்களை பொதுவுடைமையாக்கினார் என்று சொல்கிறீர்கள்.(பின்பு ஏன் இந்த ஓவியத்தை எடுத்துக் கொண்டு போனார்?) இவர் மட்டுமல்ல, போராட்டங்களுக்கு ஓவியம் வரைகின்ற எந்த ஓவியரும் அவற்றிற்கு உரிமை கொண்டாடுவதில்லை. உங்களுக்கு சந்தேகம் இருப்பின், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தோழர்களிடம் விசாரித்துக் கொள்ளலாம்.

    ‘தன்னைப் பற்றிய ஆவணப்படத்தை எடுப்பதற்கு கேமராமேனுடன் பிரபலங்களைத் தேடிப் போவது, தன்னைப் பற்றி தானே மலர் தயாரித்து வெளியிடுவது, எங்கேயாவது வெளிநாடு போய்விட்டு வந்தால், அதைப் பேட்டி எடுத்துப் போடும்படி பத்திரிக்கையாள நண்பர்களை நச்சரிப்பது, எந்த பொதுக்கூட்டத்திலும் யாரும் கூப்பிடாமலே மேடையில் ஏறி உட்கார்ந்து கொள்வது’ – இவையெல்லாம் புகழுக்காக அலையும் விஷயங்கள் அல்ல என்று நண்பர் கருதினாரேயானால் அவருக்காக நாமும் அதை நம்புவோம்…!

    புகழேந்தி வெளியிட்ட புத்தகங்களில் பெரும்பாலும் இருப்பது சுயபுராணமும், சுயவிளம்பரமும் தானே அன்றி வேறென்ன? இவர் புத்தகங்கள் வெளியிட்டபோது, மறைந்த ஓவியர் ஆதிமூலம் சொன்னது ‘ஓவியனை, ஓவியங்களைப் பற்றி மற்றவர்கள்தான் எழுதவேண்டும். அவனே எழுதிக் கொள்ளக்கூடாது. எழுத்து அவன் வேலை அல்ல’. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே!

    சிலர் தனக்கு கூஜா தூக்குவதற்கென்று கூடவே ஆட்களை வைத்திருப்பார்கள். ஆனால் ஓவியர் புகழேந்தி தனக்குத் தானே கூஜா தூக்கிக்கொள்பவர். கவிபாஸ்கர் கூஜாவிற்கு கூஜா தூக்குகிறார். அதுமட்டுமல்லாது, யாரோ தூண்டியதின் பேரில் இதை எழுதியதாகவும் கூறுகிறார். அதற்கான எந்த அவசியமும் எனக்கு இல்லை. எனது கட்டுரை கீற்று இணையத்தில் வந்தபின்புதான், ஓவியர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் அனுப்பப்பட்டது. அதுவரை இப்படி ஒரு கட்டுரை வந்தது என்பது அவர்களில் பலருக்கும் தெரியாது. நேர்மையான ஊடகவியலாளனாக, என் கண்முன் நடக்கும் தவறை வெளியுலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அக்கட்டுரை எழுதப்பட்டது. எந்த சார்பும் இல்லாமல், உண்மையின் பக்கம் நின்று கீற்று இணையத்தை நாங்கள் நடத்தி வருவது வாசகர்கள் அனைவருக்கும் தெரியும்.

    நான் எழுதியது சரிதான் என்பதை அதற்குப்பின் வந்த தொலைபேசி அழைப்புகள் உணர்த்தின. அவரைப் பாராட்டி எழுதிய பிரபலங்கள் பலர் என்னைத் தொடர்பு கொண்டு, ‘என்ன பண்றது? கூடவே சுற்றுபவர் கேட்கும்போது, ஏதாவது பாராட்டித்தானே தீர வேண்டியிருக்கிறது. நீங்க சொன்னது சரிதான்’ என்று கூறினார்கள்.

    அவர் பக்கம் உண்மையிருந்தால், எனது கட்டுரையில் நான் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு உடனே பதில் கூறியிப்பார். அவ்வாறு கூற முடியாததால்தான் கைத்தடிகளைப் பேசவைத்தும், சக ஓவியர்கள் மீதும் பழிபோட்டும் தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார்.

    போராட்டம் நடத்திய IT நண்பர்களில் ஒருவரான சதீஷ் பாண்டியன் எனது கட்டுரைக்கு எழுதிய பின்னூட்டத்தில் கூறியதுபோல், ‘எங்களுக்கு ஓவியத்தை பற்றி ஒன்றும் தெரியாது’ என்பதுதான் உண்மை. இதைப் பயன்படுத்திக் கொண்டு, பணம் சம்பாதிக்க முயன்றார் புகழேந்தி. மாட்டிக் கொண்டதும், கைத்தடிகள் மூலம் புதுப்புது கதைகள் சொல்கிறார். அவரைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது.

    - கீற்று நந்தன்

  8. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 13, 2009 இல் 2:52 பிற்பகல்

    நந்தன்,

    நிகழ்வில் தொடர்புடையவர்களின் பின்னூட்டத்தை நீங்கள் வெளியிட மறுத்தபோதும், எனது பின்னூட்டத்தை நிராகரித்த போதும் உங்கள் உண்மை முகம் தெரியவந்தது.

    விமர்சனம் என்பது உங்கள் தரப்பு நியாயங்களை மட்டும் அடுக்குவதல்ல ! விமர்சனங்கள் தனிமனிதனின் வளர்ச்சியில் படும் வயிற்றெரிச்சலாய் இருப்பதும் அருவருக்க வைக்கிறது.

    கவிஞர் காசி ஆனந்தன் ஒரே வரியில் உங்கள் விமர்சனத்துக்குப் பதில் சொன்னார்.

    அது கூற்று அல்ல, தூற்று !

  9. சேவியர் சொன்னது,

    பெப்ரவரி 13, 2009 இல் 2:54 பிற்பகல்

    கவிஞர் காசி ஆனந்தன் ஒரே வரியில் உங்கள் விமர்சனத்துக்குப் பதில் சொன்னார்.

    “அது கீற்று அல்ல, தூற்று !”
    ————————–


மறுமொழியொன்றை வழங்குக