3D யில் எந்திரன் : ஸ்பெஷல் தகவல்கள் !

3D அவதாரின் விஸ்வரூப அவதாரத்தைப் பார்த்து டைரக்டர் ஷங்கர் தனது எந்திரன் படத்தையும் 3D வடிவில் வெளியிட தீவிரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறார். அதற்கான ஆரம்ப கட்ட வேலைகளிலும் அவர் இறங்கியிருக்கிறார். சில சாம்பிள் காட்சிகளை 3D வடிவமைத்துப் பார்த்ததில் டீமே மிரண்டு போய்விட்டதாம். ஏற்கனவே படத்தை 2Dயில் எடுத்திருந்தாலும் அதையே 3D வடிவில் மாற்றியமைக்கும் வகையில் இப்போதைய டெக்னாலஜி முன்னேற்றம் உள்ளதாம். அப்படி மாற்றியமைக்கப்பட்ட ஒரு ஹாலிவுட் 3D படத்தை நேரடியாக சென்று பார்த்து வந்திருக்கிறார் ஷங்கர். எனினும் கடைசி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை . படம் எந்திரன் 3D ஆக வரவும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன !

திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகளெல்லாம் எடுத்து முடிக்கப்பட்டிருப்பதால் யூனிட் உற்சாகமாய் இருக்கிறது. எந்திரனின் மொத்தம் ஆறு பாடல்கள். அப்பா வைரமுத்து மூன்று பாடல்களில் முத்தெடுக்க, மகன் கார்க்கி ஒரு பாடல் எழுதியிருக்கிறார். பாடல் எழுதியதுடன் நிற்காமல் எழுத்தாளர் சுஜாதாவின் இழப்பை ஈடுகட்டும் விதமாக எல்லா டெக்னாலஜி விஷயங்களையும் கார்க்கி தான் ஷங்கருக்குச் சொல்லி வருகிறார். கூடவே கதை வசனம் எழுதுவதிலும் அவருடைய பங்களிப்பு கணிசமாய் இருக்கிறது. இன்னொரு பாடல் பாவியிடம் சென்று விட்டது. அதாங்க ஞாபகங்கள்ல நடிச்சாரே அந்த பா.விஜய் தான் J அப்போ ஆறாவது பாட்டு எழுதறது யாரு நாமுவா ?

கொச்சின் ஹனீபாவின் மறைவு ஷங்கரை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. எந்திரனில் அவர் நடித்திருந்த நகைச்சுவைக் காட்சியை மீண்டும் ஒரு முறை பார்த்து கண்ணீருடன் சிரித்தாராம். இந்தக் காட்சிகள் அவருக்கு அஞ்சலியாய் அமையும் என்கிறார் அவர். அதே போல மலையாளக் கரை கலாபவன் மணிக்கு இதில் வித்தியாசமான கிராமத்தான் வேடமாம் ! உலகம் முழுதும் ஒரே நாளில் தமிழ், தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் வெளியிடவேண்டும். அதனால் படம் கொஞ்சம் தாமதமாக வாய்ப்பு இருக்கிறது என்கிறது ஷங்கர் வட்டாரம் !

இந்தப் படத்துக்காக பிரபுதேவா ஸ்பெஷலாக ஒரு பாடல்காட்சியை அமைத்திருக்கிறாராம். அது பிரம்மாண்டமாக வந்திருப்பதாக பட்சிகள் படபடக்கின்றன. அதன் பின் பிரபு தேவா 9தாராவுடன் டேரா போட்டு விட்டதால் அவருடைய தம்பி ராஜு சுந்தரம் இரண்டு பாடல்களுக்கு நடனக் காட்சிகள் அமைத்திருக்கிறாராம்.  

எந்திரனுக்குப் பின் ஷங்கர் சித்தார்த்துடன் சிலிர்ப்பூட்டும் காதல் கதை ஒன்றை படமாக்க இருப்பதாகச் சொல்வதில் உண்மை இல்லையாம். ஒரு பக்கா ஸ்கிரிப்ட் இருக்கிறது, அதில் கமல் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது ஷங்கரின் விருப்பம். அதுக்கு எக்கச் சக்க மேக்கப் போடவேண்டியிருக்குமே என ஷங்கர் சொல்ல, “அப்படின்னா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. என் ஒரிஜினல் முகமே எனக்கு மறந்து போயிடும்போல இருக்கு. கொஞ்சம் கேப் விட்டு பண்ணிக்கலாம்” என்றாராம் கமல்.

எந்திரனில் இதுவரைக்கும் எந்தக் காட்சியிலும் நடிக்கவில்லையாம் ஷங்கர். எப்படியாவது ஒரு காட்சியில் தலையைக் காட்டிவிட வேண்டுமென்று தீவிரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறாராம். பேசாம ஒரு ரோபோவா வர வேண்டியது தானே.

வாக்களிக்க விரும்பினால்…

10 மறுமொழிகள்

  1. உடன்பிறப்பு சொன்னது,

    பெப்ரவரி 23, 2010 இல் 8:09 மு.பகல்

    நல்ல தகவல்கள், நன்றி!

  2. gopal சொன்னது,

    பெப்ரவரி 23, 2010 இல் 10:15 பிற்பகல்

    Thank u
    intresting news.

  3. ரிசாத் சொன்னது,

    மார்ச் 2, 2010 இல் 4:49 மு.பகல்

    கலக்குங்க ஷங்கர்..
    சேவியர் உங்க பதிவு ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு….

  4. சேவியர் சொன்னது,

    மார்ச் 12, 2010 இல் 8:26 பிற்பகல்

    நன்றி சகோதரன் ரிசாத்.

  5. சேவியர் சொன்னது,

    மார்ச் 12, 2010 இல் 8:27 பிற்பகல்

    நன்றி கோபால்…

  6. சேவியர் சொன்னது,

    மார்ச் 12, 2010 இல் 8:28 பிற்பகல்

    வருகைக்கு நன்றி உடன் பிறப்பே !

  7. பாலாஜி (மேம்) சொன்னது,

    மே 19, 2010 இல் 10:26 பிற்பகல்

    பேசாம ஒரு ரோபோவா வர வேண்டியது தானே.

    சங்கருக்கு இது தேவையா?

  8. ஜெகதீஸ்வரன் சொன்னது,

    மே 28, 2010 இல் 4:56 பிற்பகல்

    படங்களைப் பார்த்து பிரம்மித்துப் போனேன். 3டியில் வந்து கலக்கட்டும் எந்திரன்.

    – ஜெகதீஸ்வரன்.

  9. சேவியர் சொன்னது,

    மே 30, 2010 இல் 7:13 பிற்பகல்

    /படங்களைப் பார்த்து பிரம்மித்துப் போனேன். 3டியில் வந்து கலக்கட்டும் எந்திரன்.

    – ஜெகதீஸ்வரன்.
    //

    3D மேட்டர் வேண்டாம்ன்னு தீர்மானம் பண்ணியிருக்காங்க :D

  10. சேவியர் சொன்னது,

    மே 30, 2010 இல் 7:22 பிற்பகல்

    என்ன பாலாஜி… டென்ஷனாயிட்டீங்களா :D


மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 128 other followers