இனி அடுத்த சில மாதங்களுக்கு இசையை ஆக்கிரமிக்கப் போவது “எந்திரன்” என்று அடித்துச் சொல்கின்றன வசீகரிக்கும் எந்திரன் பாடல்கள்.
“This movie redefines Tamil commercial cinema. I hope it sows seeds to inspire people to take leadership in giving the world original inventions from th e east. I love being a part of it musically… and I hope the audience feels the same. Ellaa pugazhum Iraivanukkae “ எனும் இசைப்புயலின் வசீகரிக்கும் வரிகளுடன் பாடல் வரிகள் அடங்கிய பேம்லெட் அழகாக இருக்கிறது.
வழக்கம் போலவே வைரமுத்து வசீகரிக்கிறார்.
எஃகை வார்த்து,
சிலிகான் சேர்த்து,
வயரூட்டி உயிரூட்டி,
ஹார்ட் டிஸ்கில் நினைவூட்டி,
அழியாத உடலோடு,
வடியாத உயிரோடு “
என ஆரம்பிக்கும் புதிய மனிதா பாடல் அழகாக இருக்கிறது.
“நான் இன்னொரு நான்முகனே
நீ என்பவன் என் மகனே
ஆண் பெற்றவன் ஆண்மகனே
ஆம் உன் பெயர் எந்திரனே”
எனுமிடத்தில் வைரமுத்துவின் வசீகரம் விஸ்வரூபம் எடுக்கிறது.
காதல் அணுக்கள் பாடலில் வழக்கம் போல அறிவியலைச் சொல்கிறேன் என்று தனது டிரேட் மார்க் பேனாவை எடுத்து “பட்டாம் பூச்சி பட்டாம் பூச்சி, கால்களைக் கொண்டு தான் ருசியறியும், காதல் கொள்ளும் மனிதப் பூச்சி, கண்களைக் கொண்டு தான் ருசியறியும்” என புன்னகைக்க வைக்கிறார்.
அரிமா அரிமா பாடலிலும் வைரமுத்துவின் பல வரிகள் மயக்குகின்றன. குறிப்பாக
“ராசாத்தி உலோகத்தில் ஆசைத்தீ மூளுதடி
நான் அட்லாண்டிக்கை ஊற்றிப் பார்த்தேன்
அக்கினி அணையலையே”
“சிற்றின்ப நரம்பு,
சேமித்த இரும்பில்,
சட்டென்று மோகம் பொங்கிற்றே”
“சின்னம் சிறுசின்
இதயம் தின்னும்,
சிலிகான் சிங்கம் நான்”
“மேகத்தை உடுத்தும்
மின்னல் தான் நானென்று
ஐஸுக்கே ஐஸை வைக்காதே”
என்று பல வரிகள் வைரமுத்துவின் டிரேட் மார்க் வாசனையில் வசீகரிக்கின்றன.
எந்திரனின் இனிய ஆச்சரியம் பா விஜய் எழுதியிருக்கும் கிளிமாஞ்சாரோ பாடல். இசைப்புயலின் அதிரடி இசையில் விஜயின் வரிகள் அம்சமாய்ப் பொருந்துகின்றன. “ ஏவாளுக்குத் தங்கச்சியே என் கூடத் தான் இருக்கா, ஆளுயர ஆலிவ் பழம் அப்படியே எனக்கா ?” எப்போதாவது தான் பா விஜயின் பாடல்கள் எனது ரசனையின் விருப்பப் பட்டியலில் விழும். நீண்ட நாட்களுக்குப் பின் அந்த இடத்தில் வந்திருக்கிறது இந்தப் பாடல்.
எந்திரனின் ஒரே ஏமாற்றம் கார்க்கி ! பெரிதும் எதிர்பார்த்து பொசுக்கென்று போய்விட்ட தீபாவளிப் பட்டாசு போல வரிகள் ஒட்டுமொத்தமான ஏமாற்றத்தின் பக்கத்தில் ! வைரமுத்துவின் அடுத்த இடத்தை கம்பீரமாய் எட்டிப் பிடிக்க நா.முத்துக்குமார் போன்ற வலுவான போட்டியாளர்கள் வரிசையாய் இருக்கையில், கார்க்கி தனக்குக் கிடைத்த அசத்தல் வாய்ப்பை அசால்ட்டாய் விட்டிருக்கிறார் ! இரும்பிலே ஒரு இதயம் பாடல் மட்டும் கொஞ்சம் கொஞ்சம் ரசனை வரிகளைக் கொண்டிருக்கிறது !
சன் டிவி விமர்சனம் போல சொல்ல வேண்டுமென்றால்
எந்திரன், இசையில் மயக்கும் மந்திரன்.



ஜெகதீஸ்வரன் சொன்னது,
ஜூலை 31, 2010 இல் 1:57 மு.பகல்
ஏ.ஆர் ரகுமான் பாடல்கள் என்பதால் கேட்டவுன் படிக்காது கேட்க கேட்க தான் பிடிக்கும்,…
எனக்கு பாடல்களை கேட்டவுடன் தோன்றிய வரிகள்தான் இவை.
http://sagotharan.wordpress.com/
ரிசாத் சொன்னது,
ஜூலை 31, 2010 இல் 10:37 பிற்பகல்
இரும்பில் ஒரு இதயம், பாடல் வரிகள் எனக்கு பிடித்துள்ளது. A.R.Rahman னின் குரல் என்பதாலோ என்னவோ
ஜெகதீஸ்வரன் சொன்னது,
ஆகஸ்ட் 1, 2010 இல் 6:09 மு.பகல்
நண்பர்கள் தின வாழ்த்துகள் தோழரே!
- ஜெகதீஸ்வரன்
shahul hameed சொன்னது,
ஆகஸ்ட் 3, 2010 இல் 4:55 பிற்பகல்
RAHHHHMAN SIR……… ROCKKKKKKKKKKKING
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 9, 2010 இல் 12:55 மு.பகல்
நன்றி ஜெகதீஸ்வரன்.
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 9, 2010 இல் 12:55 மு.பகல்
//இரும்பில் ஒரு இதயம், பாடல் வரிகள் எனக்கு பிடித்துள்ளது. A.R.Rahman னின் குரல் என்பதாலோ என்னவோ//
சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 9, 2010 இல் 1:13 மு.பகல்
//ஏ.ஆர் ரகுமான் பாடல்கள் என்பதால் கேட்டவுன் படிக்காது கேட்க கேட்க தான் பிடிக்கும்,…
எனக்கு பாடல்களை கேட்டவுடன் தோன்றிய வரிகள்தான் இவை.
//
உண்மை தான்
yusuf miyaz சொன்னது,
ஆகஸ்ட் 29, 2010 இல் 6:55 மு.பகல்
i love all songs enaku migavum piditha song irumpile
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 1, 2010 இல் 7:30 பிற்பகல்
//i love all songs enaku migavum piditha song irumpile//
ரசியுங்கள் !
info@hasandursunilahileri.com சொன்னது,
ஜூலை 22, 2011 இல் 8:50 பிற்பகல்
இரும்பில் ஒரு இதயம், பாடல் வரிகள் எனக்கு பிடித்துள்ளது. A.R Rahman னின் குரல் என்பதாலோ என்னவோ