Alice in Wonderland : எனது பார்வையில்

 

நாம சில வேளைகளில் கனவு காண்போம். எங்கிருந்தாவது விழுந்து கீழே கீழே போய்க்கொண்டே இருப்போம் அப்புறம் ஒரு கட்டத்தில் இது கனவு என்று நமக்கே தோன்றி விடும். அப்படி ஒரு ஆழமான குழிக்குள் விழும் ஒரு பெண் அங்கே ஒரு அற்புத உலகத்தை சந்திக்கிறாள். நிஜமாக நடக்கும் அந்த விஷயத்தைக் கனவு என்று நினைத்துக் கொள்கிறாள். இது தான் ஆலிஸ் இன் ஒண்டர் லேண்ட் படத்தில் கான்சப்ட்.

 கற்பனை உலகின் கதவைத் திறப்பது எல்லோராலும் சாத்தியமில்லை. என்னைப் பொறுத்தவரை நிஜத்தை எழுதுவது சிம்பிள். மொழி கைவசம் இருந்தால் நிஜத்தின் வாசத்தை அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விடலாம். ஆனால் கனவு உலகத்தை உருவாக்க மனிதனுடைய வலது மூளை ரொம்பப் பலமாக இருக்க வேண்டும். ஹாரி பாட்டர், லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ், அவதார் என கிறங்கடிக்கும் ஏகப்பட்ட கற்பனை உலகங்களின் வரிசையில் இதுவும் ஒன்று. 

பாதாள உலகில் இரண்டு ராணிகள். இருவரும் சகோதரிகள். வெள்ளை ராணி நல்லவள். சிவப்பு ராணி கெட்டவள். ஆலிஸ் கெட்ட ராணியின் டிராகனைக் கொன்று, வெள்ளை ராணியை ஆட்சியில் அமர்த்துகிறாள். என சுருக்கினால் அது எந்த வகையிலும் இந்தப் படத்தை கௌரவிப்பது ஆகாது. படத்தின் ஒவ்வோர் பாத்திரப் படைப்பும் சுவாரஸ்யமாய் விரிகிறது. லாஜிக் ஆசாமிகள் இந்த மந்திரக் குழிக்குள் நழுவி விழாமல் சென்று விட வேண்டியது முக்கியம்.

 இந்தப் படத்தில் ஆலிஸ் இளம் பெண். சுதந்திரமாக இருக்க விரும்புபவள். பிராணிகளோடு அன்பு அதிகம். தனக்குப் பிடிக்காத ஒரு ராயல் மாப்பிளைக்கு மண ஒப்பந்தமாகப் போகும் நேரத்தில் கோட் சூட் முயல் ஒன்று வருகிறது. அதைத் தொடர்ந்து ஓடி குழியில் விழுகிறாள். அங்கிருக்கும் கதவைத் திறந்து வெளியே போய் அவள் அதிசய உலகத்தைப் பார்க்கிறாள். வாவ், தன் கனவில் அடிக்கடி வரும் அதே உலகம். எனவே இதுவும் கனவு என நினைக்கிறாள் அவள்.

 அதிசய உலகில் இருக்கும் விலங்குகளுக்கு, “இவள் தான் முன்பொருமுறை வந்த குட்டிப் பெண் ஆலிஸா ?” என்பதில் சந்தேகம். பிறகு அந்த சந்தேகம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைகிறது. தம்மடிக்கும் கம்பளிப்பூச்சி, புகையாய் பறந்து திரியும் பூனை, கொடிய மிருகம் என விந்தை உலகம் ஆலிஸை வியக்க வைக்கிறது. அங்கே இருக்கிறார் நம்ம ஜானி டெப். அவருக்கு இதில் பைத்தியக்கார தொப்பிக்காரன் எனும் பெயர்.

 சிவப்பு ராணியின் கோட்டையில் மந்திர வாள். மந்திரவாளைக் கொண்டு தான் டிராகனைக் கொல்ல முடியும். டிராகனிக் கொன்றால் தான் வெள்ளை ராணி ஆட்சியைப் பிடிக்க முடியும் என்றெல்லாம் சுவாரஸ்யமும், அம்புலிக் கதைத் திருப்பங்களும். இத்தகைய படங்களுக்கு முடிவு என்ன என்பதெல்லாம் சொல்லத் தேவையில்லை !

 இந்தக் கதையின் மூலம் 1865ம் ஆண்டில் சார்லஸ் டாட்ஸன் எனும் எழுத்தாளரின் கற்பனையில் முளைத்தது என்பது வியப்பளிக்கிறது. அந்தக் கற்பனைக்கு நவீன கலர் அடித்திருக்கிறார்கள். அதன் பிறகு இந்த நூல் பல்வேறு மொழி மாற்றங்கள் இணைப்புகள் என உலகெங்கும் பாப்புலராகி விட்டது. இந்த லேட்டஸ்ட் திரைப்படத்தின் சாராம்சம் ஆலிஸ் அட்வன்சர்ஸ் இன் ஒண்டர்லேண்ட் மற்றும் துரூ த லுக்கிங் கிளாஸ் ஆகிய இரண்டு நாவல்களின் கூட்டாஞ்சோறு. லெவிஸ் கோரல் தான் இந்த நாவல்களை எழுதியவர். கூட்டாஞ்சோறாக்கி பரிமாறியிருக்கும் இயக்குனர் டிம் பட்டன். சந்தேகம் வேண்டாம் பேட்மேன், சார்லி அண்ட் த சாக்லேட் பேக்டரி போன்ற பேசப்பட்ட படங்களை இயக்கிவர் இவர் தான்.

ரசிக்க வேண்டுமென குழந்தை மனசோடு அமர்ந்தால் உங்களால் ரசிக்காமல் இருக்க முடியாது.

  

பிடித்திருந்தால் வாக்களியுங்களேன்….

 

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 128 other followers