படங்கள் : நாலு பேரு பாக்கணும்ன்னா இப்படித்தான் …

எல்லாரையும் போல இருக்கணும்னு ஏன் நினைக்கிறே ? நீ கொஞ்சம் வித்தியாசமா இருக்கலாமே” இந்த வார்த்தையை குத்து மதிப்பா எத்தனை தடவை கேட்டிருப்போம். 

ஒண்ணு மட்டும் வித்தியாசமா இருந்தா எப்படி இருக்கும், சுவாரஸ்யமான இந்த படங்கள் சொல்லக் கூடும்.

நள்ளிரவு மின்னல்

One

ஐந்தில் வளையாதது…

 

Two

மி… த.. பர்ஸ்டு….

 

Six

தூக்கத்துல கொட்டாவி விடற வியாதி உண்டா..

Fine

வெள்ளைப் புறா ஒன்று.. 

Three

அதான்… அதே தான் !

Four

 

தமிழிஷில் வாக்களிக்க…

பாலூட்டுதல் நல்லது : அன்னைக்கா ? குழந்தைக்கா ?

 42-20795158

அழகுக்காகவும், இளமைக்காகவும் குழந்தைகளுக்குப் பாலூட்ட மறுக்கும் இன்றைய இளம் அன்னையர்களுக்கு எச்சரிக்கை ஊட்டுகிறது பிட்ஸ்பர்க் பல்கலைக் கழக ஆய்வு முடிவு ஒன்று.

பாலூட்டுவதால் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது, குழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஒரு பாசப் பிணைப்பு உருவாகிறது எனும் தகவல்களுடன், பாலூட்டுவதால் தாய்க்கு பிற்காலத்தில் இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் வலிப்பு போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன என்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு.

ஒரு வருட காலம் தொடர்ந்து குழந்தைக்கு பாலூட்டி வரும் தாய்மார்களுக்கு இந்த பயன்கள் அதிக அளவில் இருக்கும் என்பதும் இந்த ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது.

சுமார் ஒன்றரை இலட்சம் தாய்மார்களை வைத்து மிகவும் விரிவாக நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியில் கிடைத்திருக்கும் தகவல்கள் இளம் அன்னையரை பாலூட்ட உற்சாகப் படுத்தும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.

யூகே வில் சுமார் 35 விழுக்காடு அன்னையர் குழந்தைகளுக்கு ஒரு முறைகூட பாலூட்டியதில்லை என்கிறது திகைக்க வைக்கும் புள்ளி விவரம் ஒன்று.

பாலூட்டும் அன்னையருக்கு உயர் குருதி அழுத்தம் வரும் வாய்ப்பும், அதிக கொழுப்பு சேரும் வாய்ப்பும் பெருமளவு குறைகிறது என்பதும் கவனிக்கத் தக்கது.

 

அன்னையர் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கான தேவைகளையும், அவசியத்தையும் உலக அளவில் வலியுறுத்துவது அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக வளர்வதற்கும், அன்னையர் வாழ்வின் அடுத்த கட்டம் நலமானதாய் அமைவதற்கும் வழிவகை செய்கிறது. அதை இத்தகைய ஆராய்ச்சி முடிவுகள் ஆரம்பித்து வைக்கின்றன என்பதில் மிகையில்லை.

இந்த இடம் எங்கே இருக்கு சொல்லுங்க பாக்கலாம் !!!

 

அழகான தெளிந்த நீர்…
தலையாட்டும் மரங்கள்….
இலக்கிய நூலில் வரது மாதிரி ரம்மியமா இருக்கே இந்த இடம் …
ஊட்டி பக்கமா ? இல்லை கொடைக்கானல் பக்கமா ?

ஊஹூம்… ஊஹூம்

 

பெரிய ஆறு மாதிரியும் இருக்கு,
ஒரு நதி மாதிரியும் இருக்கே….

ஒருவேளை காவிரி….  ???

ம்ஹூம்..

 

ஓ…
இது பெருசா தெரியுதே…
ஏதேனும் அணையா ?
பாபனாசம் ???

ம்ம்ம்ம்ஹூஊம்…

 

மேகமெல்லாம் சூப்பரா தான் இருக்கு
ஆனா,
அதை வெச்சு இடத்தையெல்லாம் கண்டுபிடிக்க முடியுமா என்ன ?

தெரியலையே !!…
.

.

.

 

 

அடப்பாவி…
இதை முதல்லயே காட்டித் தொலைச்சிருக்கலாமே
இது சென்னை, வேளச்சேரி ஏரியும், அதில் கலக்கும் கூவக் குப்பையும் தானே.

ஹி…ஹி… ஆமா… ஆமா !!!

அவ காலழகும்….

இந்தக் கால் அழகிகள் ( 1/4 அழகிகள் அல்ல ) புகைப்படங்கள் மின்னஞ்சலில் கிடைத்தன.

உள்ளூர ரசித்துவிட்டு திட்டி பின்னூட்டம் இடப் போகும் விஜயகோபாலஸ்வாமிஜிகளுக்கும், விக்கீஸ்வர ஸ்வாமிஜிகளுக்கும் இப்போதே கண்டனமும் தெரிவிக்கப்படுகிறது

மிரட்டும் உடல் ஓவியங்கள்

 

மையால் மேனியில் வரையும் பயிற்சி - இது

அழகை அழகால் மறைக்கும் முயற்சி !!!

தொப்பியை மட்டும் பாருங்க…

படங்கள் மட்டும் இங்கே.. தகவல் இங்கே