வல்லவன் – ஒரு புதிய பார்வை

கதை கேளுங்க

படம் பார்த்து வெளியே வந்து நானும் கதையை தெரிஞ்சுக்கலாம்னா ஒருத்தனும் பிடிபடல. சிம்பு சார் உங்களுக்காவது கதை தெரியுமா ? சரி எங்களுக்கு தெரிஞ்ச புரிஞ்ச கதையை சொல்றோம். சரியா தப்பான்னு நீங்க தான் சொல்லணும்.

ஒரு இந்திய இளைஞனோட ரொம்ப முக்கியமான இலட்சியத்தை (அப்துக் கலாம் சார் மன்னிக்கணும் நீங்க சொன்னதை சிம்பு தப்பா புரிஞ்சுகிட்டார் ) அதாவது வாழ்க்கையில காதலித்து அதுவும் பொண்ணு வந்து வெளி தோற்றத்தைப் பாக்காம உள் தோற்றத்தை மட்டும் பார்த்து ( உள்ளே இருட்டா இருக்காது ? ) காதலிக்கணும், அதுக்காஹ நம்ம சிம்பு சார் 20 வருசம் வெயிட்டிங். அடுத்த சீன்ல நயன் லுக்கிங்… சிம்பு ஒன்சைட் லவ்விங். நயன காதலிக்கிறதுக்கு சிம்பு ஜப்பானில் கல்யாண ராமன் வேசத்துல நயன் முன்னாடி ஆடி, பாடி, அடி வாங்கி, செருப்பு திருடி ( அட… உங்க தலை மேல சத்தியமா செருப்பு திருடி தாங்கோ ) கடைசில நயன் காதலிக்க சம்மதம் தெரிவிக்கிறார். ரெண்டு பேரும் சந்தோசமா கடிச்சிட்டு சாரி… காதலிச்சிட்டு இருக்கும் போது இடி போல ஒரு விஷயம் தெரிய வருது. சிம்பு தன்னை விட மூணு வருசம் சின்ன பையன்னு. உடனே நயன்தாரா காதல ‘தாரா’ நயன் ஆயிடராங்க. சிம்பு எவ்வளவோ சொல்லியும், தன்னை ஏத்துக்க மாட்டேங்கறாங்க. ( சேத்து வைக்க டி. ஆர் வேற இல்லையா… என்ன பண்ணுவாரு சிம்பு பாவம் ). இந்த வேதனைல இன்னொரு குழப்பம். சிம்பு அவரோட உயிர் தோழியான சந்தியாவை காதலிக்கிறதா ஐயாவோட குரல்லயே வானொலிப் பெட்டில அறிவிக்கிறாங்க. சிம்பு ஷாக்காகி சந்தியாவை பார்த்து மன்னிப்பு கேட்க, சந்தியா நட்புக்கு இலக்கணம் சொல்ல…. கவுண்டமணி சார் ஸ்டைல்ல சொன்னா ரெண்டு பேரும் நெஞ்சை நக்கிடறாங்க. அடுத்த திருப்பம் ( அப்படின்னு சொல்றாங்க ) சிம்புவுக்கு அவர் உயிர் நண்பனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. நயன் சீரியஸ் !!! சிம்பு அவரை தேடு வீட்டுக்கு ஓட அங்கே நயன் நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருக்கிறது. இங்கே சிம்பு ஒரு புதுமையைப் புகுத்தியிருக்கார். இந்த வாட்டி US மாப்பிள்ளை இல்லாம UK மாப்பிள்ளை ஆஜர். அங்கே இருந்து அடிச்சு துரத்தறாங்க. ( ஹலோ.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. கதை இப்போ முடிஞ்சிடும் ) யாரு இப்படியெல்லாம் பண்றாங்கன்னு பார்த்தா ‘தூள்’ சொர்ணா அக்கா வராங்க. அதாங்க நம்ம ரீமா சென் அறிமுகம். ( இதுக்கு அப்புறம் மீதி கதையை படையப்பா பாத்து தெரிஞ்சுக்கலாம். சிம்பு ரசிகர்கள் தனுஷோட மாமா படத்தை பாக்கலேன்னா வாசிங்க மேலே ). ஸ்கூல் படிக்கும் போது சிம்பு ரீமாவை லவ் பண்றாரு. அப்புறம் அவரோட சுய ரூபம் தெரிஞ்சு ( மேக்கப் இல்லாம பார்த்தாரான்னு கேக்காதீங்க. அது பழைய ஜோக் ) கழட்டி விட்டுடறார். அது தான் விடாது கருப்பு மாதிரி நயன் காதலையும் தொந்தரவு பண்ணுதுன்னு தெரிஞ்சுகிட்டு, எப்படி சமாளிச்சு வல்லவன் ஆவறான் இந்த ‘பல்’லவன் ங்கிறது தான் கதை. சாலமன் பாப்பையா பாஷைல சொல்லணும்னா… விளங்கலைய்ய்யா…

வசனம் ( யூ டூ பாலகுமரன் ? ) தனுஷை தேவையில்லாம சீண்டற மாதிரி இருக்கு. பயமுறுத்தற கதாபாத்திரத்தில் ரீமா மேக்கம் இல்லாம சுலபமா செஞ்சுடறாங்க. சந்தியாவை பாவம் சந்தானம் அண்ட் கோ கூட சுத்த விட்டிருக்காங்க.

சபாஷ் சபாஷ்…

யுவன், ஒளிப்பதிவாளர். அவங்களுக்கு குடுத்த காசுக்கும், நாம குடுத்த காசுக்கும் நல்ல வேலை செஞ்சவங்க இவங்க ரெண்டு பேரு தான்.

தலைல குட்றா:

சிம்பு ரஜினி ஸ்டைல்ல பில்டப் பண்றது.. கைய அசைக்கும் போது விஷுக்கு விசுக்கு சவுண்டு வரது… ஸ்கிரீன பாத்து பஞ்ச் டயலாக் பேசறது… பேசிட்டு ஸ்லோ மோஷன்ல நடக்கிறது. ஹீரோக்களே… கொஞ்சம் திருந்துங்கப்பா….

டயரக்டர் டச்

நயன் தாரா ( ஹி…ஹி.. )

சீ…ம்பு

U/A சான்றிதழ் துரத்தித் துரத்தி வாங்கியிருப்பாங்க போல. நயந்தாரா சிம்பு உடலால் ஒண்ணு சேரும் காட்சி … வீட்ல யாரும் இல்ல… சீ திரூ புடவை… தண்ணி தாகம்னு பத்தாவது படிக்கும்போது நீங்க சரோஜா தேவி புக்ல படிச்ச அதே சீன் பில்டப். ( சிம்பு ரொம்ப லேட்டா படிச்சிருக்காரோ )

இதனால் மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்

ஆடியோ கேசட் ரூபாய் 20. டிக்கட் விலை ; 50 , நாங்க 20 போதும்ன்னு சொல்றோம் அப்புறம் உங்க இஷ்டம்.

மாமு விமர்சனக் குழு.

நன்றி. http://maamu.wordpress.com

Advertisements

2 comments on “வல்லவன் – ஒரு புதிய பார்வை

  1. பத்தாவது படிச்ச போது சரோஜாதேவி புத்தகமா – அப்போ இப்ப உங்க வயசு 50 தாண்டி இருக்கணுமே

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s