பாம்பும் நிலநடுக்கமும் : சீனா சாதனை

 

மனிதனுடைய ஆறறிவு சாதிக்க முடியாததை ஐந்தறிவு சாதிக்கும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைக் முன்கூட்டியே கண்டறிந்து சொல்லும் திறமை பாம்புகளுக்கு இருப்பதாக சீன ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

நிலநடுக்கம் நிகழப் போகிறது என்பதை பாம்புகள் நிலநடுக்கம் நிகழப் போகும் இடத்திற்கு நூற்று இருபது கிலோ மீட்டர் தொலைவிலிருந்தே கண்டுபிடிக்கும் என்றும், அதுவும் நிலநடுக்கம் நிகழப் போவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பே அறிந்து கொள்ளும் என்றும் சொல்லி வியக்க வைக்கிறார்கள் சீனாவின் நானிங் என்னுமிடத்தில் அமைந்துள்ள நிலநடுக்க ஆராய்ச்சிக் குழுவினர்.

பாம்புகள் உலகிலுள்ள உயிரினங்களிலேயே அதிக உணர்வு கொண்ட உயிரினம். நிலநடுக்கம் நிகழப் போவதை அறிந்தால் இவற்றின் செயல்பாடுகள் பெருமளவுக்கு மாறிவிடுகின்றன. கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்தால் எப்படியேனும் வெளியேற வேண்டுமென்று வன்முறையாய் போராடுகின்றன. தங்கள் இடத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல முயல்கின்றன என்கிறார் இந்தக் குழுவின் இயக்குனராக உள்ள ஜியாங் வெய்ஷங். பாம்பு வளைகளில் காமராக்கள் பொருத்தி பாம்புகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்து நிலநடுக்கத்தை அறிந்து கொள்வதில் சீன விஞ்ஞானிகள் வல்லவர்களாகி வருகிறார்கள்.

சீனாவில்  நிலநடுக்கம் நிகழ அதிக வாய்ப்புள்ள பதிமூன்று நகரங்களில் ஒன்று நானிங். இங்கே நூற்று நாற்பத்து மூன்று நிலநடுக்க கண்காணிப்புப் பிரிவுகள் உள்ளன. கண்டு பிடித்துச் சொல்வது மனிதனோ, அவனுடைய கண்டு பிடிப்புகளோ அல்ல. விலங்குகள் ! சீனா நிலநடுக்கம் அதிகம் நிகழும் நாடுகளில் ஒன்று. 1976ல் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சுமார் இரண்டரை இலட்சம் பேர் மாண்டு போனார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

Advertisements

2 comments on “பாம்பும் நிலநடுக்கமும் : சீனா சாதனை

  1. காரணம் இருக்கிறது. மனிதன் இயற்கையை நம்பாமல் செயற்கையாக தனக்கு வேண்டியதை வேண்டிய வகையில் செய்து கொண்டான். முன்பெல்லாம் பிள்ளைகள் வேகமாக கணக்குப் போடுவார்கள். கால்குலேட்டர் பயன்படுத்தத் தொடங்கியதும் அந்த வேகம் மட்டுப்படும். பிறகு கால்குலேட்டர் இல்லாமல் முடியாது. அந்த நிலைதான் நமக்கும் நடந்து கொண்டிருக்கிறது. விலங்குகளுக்கு எந்தக் கருவியும் தேவையில்லை. ஆகையால் இயற்கையை ஒவ்வொரு நொடியும் நுகர்ந்து வாழ்கின்றன. அதனால் எல்லாம் தெரிய வருகிறது. நாமும் அந்த நிலைக்குப் போனால் எப்பொழுது மழை வரும், வெயிலடிக்கும், நிலம் நடுங்கும் என்று சொல்லலாம்.

    Like

  2. ராகவனின் மறுமொழி சரியானது. உடன்படுகிறேன். இயற்கையில் இருந்து விலகிச் செல்கிறோம் – தவறு – நாம் இயற்கையை ஒட்டியே வாழ வேண்டும்

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s