தண்ணி தராத கேரளா இனி பிச்சையும் இடாது.

கேரளாவிலுள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் இந்த மாதம் முதல் பிச்சை எடுப்பது சட்டவிரோதமாகிறது. கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரம் பிச்சைக்காரர்களின் புகலிடமாக இருந்தது. கேரள அரசின் தற்போதைய சட்டம் திருவனந்தபுரத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத மாவட்டமாக்கும் பாதையில் முன்னேறுகிறது.

ஏழைகள் வாழ்க்கைக்கு வழியில்லாதவர்கள் என்று வர்ணிக்கப்பட்டாலும் பிச்சைக்காரர்களின் பின்னணி அபாயகரமானது. உண்மையிலேயே வாழ வழியின்றி யாசிப்பவர்களுடன் கூடவே இதை ஒரு தொழிலாகவே நடத்தும் கும்பல்கள் எல்லா இடங்களிலும் பரவி வருகின்றன.

சிறுவர்களை வேறு மாநிலங்களிலிருந்தோ, நாட்டிலிருந்தோ கடத்தி வந்து அவர்களை ஊனமாக்கியோ, அச்சுறுத்தியோ பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபட நவப்பது எல்லா இடங்களிலும் அதிகரித்து வருகிறது. உண்மையான உழைப்பை நாடாமல் யாரையும் ஏய்த்துப் பணம் சம்பாதிக்கும் மனநிலை அதிகரித்து வரும் இன்றைய அபாயகரமான சூழலில் கேரள அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கைக்கு கேரளாவில் மிகுந்த வரவேற்பு கிடைத்திருக்கிறது.

முன்னூறுக்கும் மேற்பட்ட சிறுவர்களை பிச்சையெடுக்கப் பழக்கும் கும்பல்களிடமிருந்து மீட்டு மறுவாழ்வு மையங்களில் சேர்த்திருக்கிறது கேரள அரசு. தன்னுடைய இந்த திட்டத்தை பாலக்காடு, எர்ணாகுளம், கோழிக்கோடு போன்ற இடங்களுக்கும் நீட்டிக்கும் திட்டத்தில் இருக்கிறது கேரளா.

பிச்சைக்காரர்களை ஒழிக்கும் அரசின் திட்டத்தை வரவேற்கும் அதே நேரத்தில் அவர்களுடைய மறுவாழ்வுக்கான ஆயத்தங்களையும் கேரள அரசு செய்ய வேண்டும் என கேரளாவிலுள்ள மனித நல அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன.

6 comments on “தண்ணி தராத கேரளா இனி பிச்சையும் இடாது.

  1. இது சூப்பர்..பிச்சை எடுப்பதை தொழிலாகத்தான் பலர் செய்கிறார்கள்…இந்த சட்டத்தால் எல்லாரையும் புடிச்சு ஜெயில்ல போட்டு மூனுவேளை சப்பாடு போடபோறாங்க போல…

    தமிழகத்தில் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கு என்பது இந்த சட்டத்தின் சிறப்பு ஹி ஹி !!!!

    Like

  2. நல்ல விஷயம் தான். திருவனந்த புரம் ஒரு முன்மாதிரியான மாவட்டமாகத் திகழும் போல் இருக்கிறது!

    ஆனால், இதற்கும் தலைப்பில் உள்ள தண்ணீருக்கும் எந்தத் தொடர்பும் புலப்படவில்லையே நண்பரே!

    Like

  3. //ஆனால், இதற்கும் தலைப்பில் உள்ள தண்ணீருக்கும் எந்தத் தொடர்பும் புலப்படவில்லையே நண்பரே!
    //
    அது கதாநாயகனுக்கான எக்ஸ்ட்ரா பில்ட்-அப்! சரிதானே சிரிப்பு?

    Like

  4. // ஆனால், இதற்கும் தலைப்பில் உள்ள தண்ணீருக்கும் எந்தத் தொடர்பும் புலப்படவில்லையே நண்பரே! //

    கொஞ்ச வயித்தெரிச்சல்.. அவ்வளவு தான் 🙂

    Like

  5. //அது கதாநாயகனுக்கான எக்ஸ்ட்ரா பில்ட்-அப்! சரிதானே சிரிப்பு? //

    அப்படியும் சொல்லலாம் :))

    Like

  6. பிச்சைக்காரர்களை பிடித்து சிறையில் அடைக்காமல் அவர்களுக்கு வயிற்றுக்கு வழி செய்து கொடுக்க வேண்டும்

    Like

Leave a comment