வளர்ச்சி பாதி. சாதி மீதி.

இந்தியாவின் வளர்ச்சிக்கு சாதீய மனப்பான்மை மிகப்பெரிய பின்னடைவாக இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட பி.பி.சி இணைய தள ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த ஆய்வில் பெரும்பாலானோர் இந்தியராய் இருப்பதற்குப் பெருமையடைவதாகவும், இந்தியா பொருளாதாரத்தில் மிகவும் முன்னேற்றமடைந்த நாடாய் மாறுவதற்கு விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

நாற்பது சதவீதம் மக்கள் இந்தியாவின் கலாச்சாரம் இளைய தலைமுறையினரிடம் இல்லை என்றும். அவர்கள் பெரும்பாலும் மேல் நாட்டுக் கலாச்சாரங்களின் வசீகரங்களையே விரும்புகிறார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

சுமார் ஐம்பத்தைந்து விழுக்காடுக்கு மேற்பட்டோ ர் இந்தியாவின் சாதீய அணுகுமுறை இந்தியா பொருளாதார வளர்ச்சி அடைவதற்கு தடையாய் இருப்பதாகவும், ஒட்டு மொத்த வளர்ச்சியின் தடைக்கல்லாக இருப்பதாகவும், சாதீய அணுகுமுறை ஒழிந்தால் இந்தியாவின் வளர்ச்சி பிரமிக்கத் தக்க வகையில் இருக்கும் என்றும் கணித்திருக்கிறார்கள்.

ஒழியுமா ? வளர்வோமா ? இல்லை நூற்றாண்டுகள் தாண்டிய கல்வெட்டுகளிலும் சாதிக் கூறுகள் தேடித் தேய்வோமா ?

One comment on “வளர்ச்சி பாதி. சாதி மீதி.

Leave a comment