கிளியோபாட்ரா அழகியல்ல !!!

cli.jpg

வரலாற்றின் மிகவும் பிரசித்தி பெற்ற காதல் ஜோடி என்று வர்ணிக்கப்படும் கிளியோபார்டா – அந்தோணி அழகானவர்கள் இல்லை என்னும் அதிர்ச்சித் தகவல் சமீபத்தில் ஆராயப்பட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த வெள்ளி நாணயத்தின் வாயிலாக தெரிய வந்திருக்கிறது.

ரோம வரலாறுகள் கிளியோபாட் ராவின் அழகைப்பற்றி எதுவும் எழுதவில்லை என்பது தான் நிஜம். கிளியோபாட் ரா அறிவானவள், நல்ல குரல்வளம் உடையவள் என்னும் குறிப்புகளை வைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட அழகிய படங்கள் உண்மைக்கு வெகுதொலைவில் இருக்கின்றன.

நீண்ட நாடியும், கூர்மையான மூக்கு , ஒல்லியான உதடு என நாணயத்தில் தெரியவரும் கிளியோபாட் ராவின் உருவம் ஹாலிவுட் கற்பித்த அழகிற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நாணயம் நியூகாஸில் பல்கலைக்கழக ஷெப்டன் அருங்காட்சியகத்தில் இந்த மாதம் 14ம் தியதி முதல் காட்சிக்கு வைக்கப்படுகிறது.