கிளியோபாட்ரா அழகியல்ல !!!

cli.jpg

வரலாற்றின் மிகவும் பிரசித்தி பெற்ற காதல் ஜோடி என்று வர்ணிக்கப்படும் கிளியோபார்டா – அந்தோணி அழகானவர்கள் இல்லை என்னும் அதிர்ச்சித் தகவல் சமீபத்தில் ஆராயப்பட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த வெள்ளி நாணயத்தின் வாயிலாக தெரிய வந்திருக்கிறது.

ரோம வரலாறுகள் கிளியோபாட் ராவின் அழகைப்பற்றி எதுவும் எழுதவில்லை என்பது தான் நிஜம். கிளியோபாட் ரா அறிவானவள், நல்ல குரல்வளம் உடையவள் என்னும் குறிப்புகளை வைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட அழகிய படங்கள் உண்மைக்கு வெகுதொலைவில் இருக்கின்றன.

நீண்ட நாடியும், கூர்மையான மூக்கு , ஒல்லியான உதடு என நாணயத்தில் தெரியவரும் கிளியோபாட் ராவின் உருவம் ஹாலிவுட் கற்பித்த அழகிற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நாணயம் நியூகாஸில் பல்கலைக்கழக ஷெப்டன் அருங்காட்சியகத்தில் இந்த மாதம் 14ம் தியதி முதல் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

Advertisements

11 comments on “கிளியோபாட்ரா அழகியல்ல !!!

  1. காதலராக இருப்போர் எல்லாம் அழகாக இருக்க வேண்டுமெனும் நியதி; நம் தமிழ்ச் சினிமாக்கள் செய்த மூளைச்சலவை!முட்டாள் தனமான கொள்கையும் கூட.
    ஆனால் காதலென்பது பெரும்பாலும் முதல் உடல் கவர்ச்சியில் தான் ஏற்படுகிறது. என்பது உண்மை
    எவ்வளவு நல்லுள்ளம்; ஒழுக்கம் இருந்தும்;உடல் கவர்ர்சியில்லையெனில் அவர்கள் மேல் காதல் தாமதாமாகத் தான் தாக்குது. அது வலுவாக இருப்பது கண்கூடு.

    Like

  2. //காதலராக இருப்போர் எல்லாம் அழகாக இருக்க வேண்டுமெனும் நியதி; நம் தமிழ்ச் சினிமாக்கள் செய்த மூளைச்சலவை//

    தமிழ் சினிமாக்கள் என்று சொல்லாமல், சினிமாக்கள் என்று சொல்வதே தகும். கிளியோபாட்ராவா நடித்த எலிசபெத் டெய்லரை மறந்துடாதீங்க 🙂

    Like

  3. i am aasath:

    What is the purpose of your post ?

    If Cleo/anto could have beaty, what is the use ?

    apart from that,

    1. Originality or Mocking or finishing in Drawing/sculpture/Script hadn’t improved that day. Still it should be improved through the modification of other Social factors. So you can’t identify the originality of Cleo/anto on Coins / Sculpture.

    2. Beauty has varying from times to time, Country to Country, Race to Race, Class to Class, System to System. If you accept this changes, how you have can frame a Universal beaty…

    Like

  4. //What is the purpose of your post ? //

    கேள்விப்பட்டதைப் பதிவு செய்வதன்றி வேறேதும் நானறியேன் பராபரமே

    Like

  5. அவன் கண்ணுக்கு அவள் அழகு
    அவள் கண்ணுக்கு அவன் அழகு.

    ‘ராஜு மெச்சிந்தி ரம்பை’ன்னு ஒரு தெலுங்குப் பழமொழி இருக்கு.

    தமிழாக்கம்: ராஜா விரும்பிய பெண் எப்படி இருந்தாலும் ரம்பைதானாம்

    இது ராஜாவுக்குத்தான் வேற யாருக்கு:-)

    Like

  6. அன்புடையீர்

    அழகு என்பது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தில் இருக்கிறது. காலத்திற்கு ஏற்றபடி அழகின் இலக்கணம் மாறிக் கொண்டிருக்கிறது. திரைப்படத்தில் கூட, அன்று சின்னப்பா, பாகவதர், எம்ஜிஆர், சிவாஜி முதலிய நடிகர்கள் இருந்தனர். இன்றைக்கு விஜய், தனுஷ் முதலிய சிடுமூஞ்சி நடிகன்கள் கூட அழகன்கள்தான்(?) அழகு என்பது காலத்தின் கண்ணோட்டமே.

    அன்புடன்
    எழுத்தாளர் ஒளிர்ஞர்

    Like

  7. அழகு என்பது Realtive Term – not an absolute term. இதை எப்படி தமிழில் சொல்வது. தெரியவில்லை. துளசியின் கருத்துக்கு உடன்படுகிறேன்.

    Like

  8. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கில மொழி அந்த நாணயத்தில் உள்ளது போல் இருக்குமா ?

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s