மூன்று கொலை, மூன்று தூக்கு

bus.jpgமூன்று மாணவியரை உயிரோடு எரித்துக் கொலை செய்த வழக்கில் கொலையாளிகள் மூன்றுபேருக்கு தூக்குத் தண்டனை வழங்கி அதிரடித் தீர்ப்பு வெளியாகி உள்ளது.

கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா எனும் மூன்று மாணவிகளைக் கொலை செய்த வழக்கில் நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் என்ற மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனையும், மற்ற இருபத்து ஐந்து பேருக்கு ஏழாண்டு சிறைத்தண்டனையும் வழங்கி இன்று சேலம் கோர்ட்டில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

வழக்கறிஞர் சீனிவாசனின் மிகத் திறமையான வாதத்தால் கிடைத்திருக்கும் இந்தத் தீர்ப்பு கொலையாளிகள் சார்ந்திருக்கும் கட்சியினருக்கு அதிர்ச்சியையும், கொலை செய்யப்பட்ட மாணவியரின் குடும்பத்தினருக்கு கொஞ்சமேனும் நிம்மதியையும் வழங்கியிருக்கிறது.

பல்வேறு கனவுகளோடு கல்லூரிக்குச் சென்ற மாணவியர் அரசியல் வெறியர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. எனினும் குற்றவாளிகள் ஏதோ கட்சிக்காக பணியாற்றியது போல நடந்து கொண்டதும், அவர்களை விடுவிக்க அவர்கள் சார்ந்திருந்த கட்சி பல்வேறு பிரம்மப் பிரயர்த்தனங்கள் செய்ததும் சமூக அக்கறை கொண்ட அனைவரையுமே அதிர்ச்சியடைய வைத்தது.

தவறு செய்பவர்கள் யாராயிருந்தாலும் தண்டிப்பதே அரசின் முக்கியமான பணியாக இருக்க வேண்டும். அரசு என்பது கட்சிக் கூட்டம் அல்ல அது மக்களை நிர்வாகிக்கும் , பராமரிக்கும் ஒரு அமைப்பு. இந்த அமைப்பைக் களங்கப்படுத்தும் நிகழ்வுகள் பல நடந்து கொண்டிருப்பது வேதனைக்குரிய விஷயம்.

இந்தத் தீர்ப்புக்கு ஆதரவாகவும், மரண தண்டனைக்கு எதிராகவும் குரல்கள் எழப்போவது உறுதி.

எந்தத் தண்டனை கொடுத்தாலும் சட்டத்தில் ஓட்டைகள் போட்டு வெளியேறுவதும், சட்டத்தின் கதவுகளை அதிகாரிகளே திறந்து விடுவதும் என அரசியல் குற்றங்கள் பல நீதிக்கு வெகு தொலைவில் தான் உலவி வருகின்றன. இது போன்ற தீர்ப்புகள் தான் அரசியல் குற்றங்கள் செய்வோரையும் சற்று யோசிக்க வைக்கும்.

மனிதாபிமானம் கொஞ்சமும் இன்றி, ஆசிரியர்களின் கெஞ்சல்களையும், மாணவிகளின் அலறலையும் மீறி உயிரோடு கொளுத்தும் வெறி கொண்டவர்கள் சமூக அமைப்பில் வாழத் தகுதியற்றவர்களே.

Advertisements

3 comments on “மூன்று கொலை, மூன்று தூக்கு

  1. எந்த பெற்றவர்களையும் ஐயோ என்று நெஞ்சம் பதை பதைக்க வைத்த இந்த சம்பவம் இன்று கிடைத்த தீர்ப்பினால் அனைவரையும் ஓரளவு ஆறுதல் பெற வைத்திருக்கிறது. மகள்களை இழந்த பெற்றோர்கள் நீதிவழங்கப் பட்டதினால் சிறிதளவேனும் மன அமைதி பெறுவார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் இழப்பினை தாங்க மன வலிமை பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    Like

  2. ஒரு ஆண்டு கழிந்தும், இன்னும் தண்டனை நிறைவேற்றப் பட வில்லை. இன்னும் சட்டம் மெதுவாகத்தான் வேலை செய்கிறது. ஆனால் இறுதியாக சட்டம் வெல்லும்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s