சென்னையில் மான் வலம் !

வீட்டுக்கு முன்னால் மான்கள் குதித்து விளையாடிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும் ? வேளச்சேரி பகுதி மக்களுக்கு ஆச்சரியமாய் இருக்காது. காரணம் இது தினசரி நிகழ்வு தான்.

img_3125-small.jpg

விலங்குகள் காட்சியகத்துக்குச் சென்று பரிதாபமாக நிற்கும் மான்களைப் பார்ப்பதை விட குதூகலமாய் ஓடி விளையாடித் திரியும் மான் கூட்டத்தை அருகில் சென்று ரசிப்பது அலாதி இன்பமானது. அதுவும் குழந்தைகளுக்கு இது இரட்டைக் கொண்டாட்டம் ! மான்களைப் பொறுத்தவரை இது மனித காட்சியகம் !

img_3126-small.jpg

அழகான ஏரி, துள்ளி விளையாடும் மான்கள், ரம்மியமான மாலைப் பொழுது என்று சங்ககால வர்ணனைகள் போல வேளச்சேரி ஏரியை ஒட்டிய பகுதிகள் இருந்தாலும் சென்னைக்கே உரிய கொசுக்களின் வன்முறைத்தாக்குதலும், சாக்கடையின் சரித்திரப் புகழ் நாற்றமும் அவற்றையெல்லாம் ரசிக்க விடாமல் செய்து விடுகிறது.

img_3132-small.jpg

எனினும், இறுகிப் போன இயந்திரத் தனமான வாழ்க்கையை சற்றே இளக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவற்றின் பட்டியலில் மான்களையும் சேர்த்துக் கொள்ளலாம். கவர்னர் மாளிகை பகுதி ஐஐடி காம்பஸ் இவற்றிலிருந்து இவை வெளியேறி நகர் வலம் வருவதாக காவல்துறையைச் சேர்ந்த உறவினர் கூறினார்.

img_3134-small.jpg

எல்லாம் இருக்கட்டும், வேளச்சேரி பகுதியில் மான்கள் உலவும் விஷயத்தை யாரும் சல்மானிடம் மட்டும் சொல்லாதிருங்கள்.

Advertisements

One comment on “சென்னையில் மான் வலம் !

  1. உணமை. ஐஐடி வளாகத்திலிருந்து ஆளுனர் மாளிகை வரை உள்ள பகுதிகளில் மான் நடமாட்டம் அதிகம். சாலைகளிலும் கூட மாலை நேரங்களீல் பார்க்கலாம். மழலைச் செல்வங்களுக்குக் மான்கள் பார்ப்பது ஒரு பொழுது போக்கு.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s