தாமதம் 92 வருடம் !

letter.JPG

முதலாம் உலகப் போரின் போது அனுப்பப்பட்ட ஒரு தபால் அட்டை தொன்னூற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்று சேர்ந்த வினோதமான நிகழ்வு லண்டனில் நடந்திருக்கிறது.

வால்டர் பட்லர் என்பவர் 1915ம் ஆண்டு ஏமி ஹிக்ஸ் என்னும் தன்னுடைய காதலிக்கு, தான் பாதுகாப்புடன் இருப்பதாக தெரிவித்த கடிதம் தான் தொன்னூற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பின் சென்று சேர்ந்திருக்கிறது.

தபால் அலுவலகத்திலிருந்து இப்படி ஒரு கடிதம் பட்டுவாடா செய்யப்படாமல் இருக்கிறது என்னும் தகவலை குறிப்பிட்டிருந்த விலாசத்து தொலை பேசி எண்ணைக் கண்டுபிடித்துச் சொன்னபோது தொலைபேசியவர் வால்டரின் மகள் ஹல்பர்ட். மூன்று பேரப்பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அவருக்கு வயது எண்பத்து ஆறு.

வால்டன் தன் காதலியை மணந்து பிள்ளைகளும் பெற்று, இறந்தும் போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்து சேர்ந்திருக்கும் இந்தத் தபால் அட்டை மிகவும் உணர்ச்சிமயமானது என்று அவருடைய மகள் பரவசத்துடன் கூறினார்.

இனிமே தபால்காரர் கொஞ்சம் தாமதமாய் வந்தால் மன்னித்துவிடுங்கள், லண்டனிலேயே 92 வருடம் தாமதம் செய்திருக்கிறார்கள் !