தசாவதாரம் கதை(வுடறேன்)

dasa_01.gif

பிரபல விஞ்ஞானியான கமல் சில ரகசியங்களைக் கண்டுபிடிப்பதற்காக பிற்காலத்துக்குப் பயணமாகிறார். ஆனால் தவறுதலாக வேறு ஒரு காலத்தில் இறங்கிவிடுகிறார். அந்த காலகட்டமோ மிகவும் பயங்கரமான போர் நடக்கும் சூழல், அங்கிருந்து எப்படியாவது தப்பி நிகழ்காலத்துக்கு வந்தால் போதும் என்று ஒருவழியாக சாகசங்கள் செய்து தப்பி வரும் கமல் நிகழ்காலத்துக்குப் பதிலாக எதிர்காலத்துக்குச் சென்று விடுகிறார்.

எதிர்காலத்தில் தனது மகனைச் சந்திக்கும் கமல் தன்னுடைய மனைவியைப் பார்க்கையில் அதிர்ச்சியடைகிறார். ஏதோ தவறு நடந்திருக்கிறது, தான் காதலித்த பெண்ணை ஏன் திருமணம் செய்யவில்லை என்று ஆராய்கிறார். எல்லா தகவல்களையும் பெற்றுக் கொண்டு அந்த பிழையைச் சரிசெய்ய கடந்த காலத்துக்கு மீண்டும் போகிறார்.

கடந்தகாலத்தில் போய் தன் காதலியைக் கை பிடித்து சுகமாய் வாழ்கிறார். அட… இதுக்கு மேல என்னால ஒண்ணும் கற்பனை பண்ண முடியலப்பா…

அசத்தல் விளம்பரங்கள் : உலக அளவில் !

நியூயார்க் நகரில் புகை வந்துகொண்டிருந்த ஒரு சாக்கடையின் மேல் Folgers காபி படத்தை ஒட்டி வைத்து, தூங்காத நகரம். விழித்துக் கொள். என்னும் வாசகத்தோடு வியக்க வைக்கிறது !

நெதர்லாந்தில் காணப்படும் ஹெய்னிக்கன் பீர் விளம்பரம். பார்த்ததும் குடிக்க வேண்டும் போல் தோன்றவில்லை ?

ஒரு வாலண்டைன் ஸ்பெஷல் விளம்பரம். ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ல்

இது நம்ம மும்பை விளம்பரம். தானியங்கி கதவில் மக்கள் வெளியே வருவது போல படம். அருகில் சென்றதும் அவர்கள் விலகிப் போக, எதிரே ‘மக்கள் விலகுவார்கள், உங்கள் உடலில் துர்நாற்றம் வீசினால்’ என்று அட்டையுடன் வாசனைப் பொருள் விளம்பரம்.

மலேஷியாவில்.. ஒரு ஹை வால்டேஜ் மின் நிலையம் ஒன்றில் டியூரசெல் போஸ்டர்

ஈரமானதரை கவனமாய் நடக்கவும்… பர்கர் விளம்பரம். பர்கரை நினைத்தால் வாயில் எச்சில் ஊறி தரை ஈரமாகிவிட்டதாம் !

ஜப்பானில், டோக்கியோவில் உள்ள விளம்பரம் இது. அழகுபார்க்கும் பதுமை !

ஜெர்மனியிலுள்ள பெர்லின் என்னுமிடத்தில் எடிஎம், வெண்டிங் மிஷின் இவற்றில் இப்படி படம். சரியான வேலையைக் கண்டுபிடியுங்கள் எனும் ஒரு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் விளம்பரம்.

மலேஷியாவில். ஹை டெக் பிளாஸ்மா ஹை.ஐ.டி பல்ப் கள் 300% அதிக வெளிச்சமாய். சுவர் கருகியது போல ஒரு ஸ்டிக்கர்.

வாங்கூவரில் புகை பிடிக்காதீர் விளம்பரம்

தென்னமெரிக்காவில், கண்ணாடி சுத்தம் செய்யும் பொருளுக்கான விளம்பரம்

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் டிரெயின் ஒன்றில்.. ஒரு உடற்பயிற்சி நிலைய விளம்பரம்


ஹாங்காங் யோகா பள்ளி விளம்பரம். அட… !

ஸ்விட்சர்லாந்தில் மினி கூப்பர் காருக்கான விளம்பரம். மக்கள் ரெயில்வே நிலையத்திலிருந்து சப்வே வழியாக மேலே ஏறிவருகிறார்கள் !!!

ரிலீஸ் அண்ணிக்கே சிவாஜி பாக்கலாம் !

rajinikanth_sivaji_5.jpg

சூப்பர்ஸ்டாரின் சிவாஜி திரைப்படத்தை ரிலீஸ் ஆகும் தினத்தன்றே எல்லாரும் பார்க்கும் ஒரு வாய்ப்பு பிரகாசமாகியிருக்கிறது. படம் பற்றிய பரபரப்பு மழை இப்போது பெருமழையாகிக் கொண்டிருக்கிறது.

இதுவரை வினியோக உரிமை என்பது வெறும் ஏரியா சம்பந்தப்பட்டதல்ல, எந்த திரையரங்கில் எத்தனை காட்சிகள் என அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியது தான். ஒரே காம்ப்ளக்ஸ்-ல் இருக்கும் இரண்டு திரையரங்குகளில் ஒரே பெட்டியை வைத்துக் கொண்டு திரையிடப்படவேண்டுமெனில் அதற்கு தனியே அனுமதி வாங்க வேண்டும்.

இதையும் மீறி ஒரு திரையரங்கில் ஒரு ரீல் முடிந்ததும் அதை எடுத்துக் கொண்டு அடுத்த திரையரங்கில் படம் ஆரம்பித்து, பின் இரண்டாவது ரீல் எடுத்துக் கொண்டு ஓடி .. என ஒரே படத்தை இரண்டு திரையரங்குகளில் ரகசியமாய் ஓடி ஓடி ‘ஓட’ வைப்பதும் உண்டு. அதற்காக ஒரு படம் காலை ஒன்பது மணியெனில் அடுத்த அரங்கில் அதே படம் பத்துமணிக்கு என காட்சி அமைத்திருப்பார்கள்.

சிவாஜிக்கு இப்படியெல்லாம் அலையத் தேவையில்லை. ஏரியா உரிமை விற்பனையோடு சேர்த்து எத்தனை திரையரங்குகளில் வேண்டுமானாலும் திரையிட்டுக் கொள்ளலாம் எனும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதாகப்பட்டது என்னவெனில், நாகர்கோவில் ஏரியாவை ஒருவர் வாங்குகிறார் எனில் அங்குள்ள அனைத்து திரையரங்குகளிலும் கூட அவர் படத்தை திரையிட முடியுமாம் ! திரையரங்கு கிடைத்தால்.

இதன்மூலம் படம் வெளியாகி யாராவது ‘காண்டிட் காமரா’ வைத்து சுட்டு அதை சிடியில் போட்டு விற்கத் துவங்குவதற்கு முன்பே கணிசமான லாபத்தைப் படம் சம்பாதித்துக் கொடுக்கும்.

நிறைய திரையரங்குகளில் படம் வெளியானால் மக்களுக்கு பிளாக் டிக்கெட் விலை கொஞ்சம் குறையும். 🙂 இல்லாமப் போகும் என்றெல்லாம் தோன்றவில்லை.

முதல் நாள் தலைவர் படத்தைப் பார்க்கவில்லை என்று சொல்லி தீக்குளிக்கும் ரசிகன் தப்பிப்பான்.

ஆனா பாவம், பாலாபிஷேகம் பண்ணும் ரசிகர்களுக்குக் கஷ்டம் தான். எத்தனை திரையரங்குகளில் தான் கட்டவுட் வெச்சு பாலாபிஷேகம் செய்வாங்க ? அன்னிக்கு பால் தட்டுப்பாடு வரலாம் எனவே வீட்டு அம்மாக்கள் முந்தின நாளே பால் வாங்கி வெச்சுக்கோங்க.

படத்துல தலைவர் பாட்டு வேற பாடியிருக்காராம் இசை விற்பனை பிச்சுக்கும் என்பது நிதர்சனம். எம்.பி.3 எப்போ கிடைக்குமோ ?

அமெரிக்கா வாழ் ரசிகர்கள் வருத்தப்பட வேண்டாம். உலகக் கோப்பை கிரிக்கெட் இந்த ஆண்டு அமெரிக்க தொலைக்காட்சிகளில் நேரடியாய் ஒளிபரப்பாக இருக்கிறது !

மனித ஆயுள் 200 வருடம் !

அடுத்த தலைமுறை மனிதனின் ஆரோக்கியமான ஆயுள் குறைந்த பட்சம் 200 என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதா ? திசு வளர்ச்சி ஆராய்ச்சியில் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் ஒரு மாபெரும் சாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் மாபெரும் மாற்றங்களை அடுத்த தலைமுறையில் கொண்டுவரும் என்று மருத்துவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

அப்படி என்ன தான் செய்துவிட்டார்கள் ?. ஒரு ஒற்றை செல்லை வளர வைத்து ஒரு பல்லை தயாராக்கியிருக்கிறார்கள். திசு வளர்ச்சி ஆராய்ச்சியின் மூலமாக எலி ஒன்றின் பல் செல் ஒன்றை செயற்கையாய் வளர வைத்து ஒரு பல்லை உருவாக்கியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதன் மூலம் எதிர்காலத்தில் மனிதனின் செல்லை வைத்து மனிதனுடைய உறுப்புகளை வளர வைக்க முடியும் என்று இந்த ஆராய்ச்சியின் தலைவரும், டோ க்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்தின் பேராசிரியருமான அகாசி சுஜி ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

சிறுநீரகம், லிவர் போன்ற மனிதனின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு இப்போதெல்லாம் வேறு நபர்களுடைய உறுப்புகள் தான் தானமாய் பெறப்படுகின்றன. வேறு நபர்களின் உறுப்புகளைப் பொருத்துவதால் அது நம்முடைய உடலோடு ஒத்துப் போவதற்கு பல சிக்கல்கள் உள்ளன. தொடர்ந்த மருத்துவ கண்காணிப்பும், செலவும், ஆரோக்கியமற்ற உடலுமே கடைசியில் கிடைக்கிறது.

ஆனால் இந்த ஆராய்ச்சியின் மூலம் செயற்கையாக நோயாளியின் செல்லை வைத்தே உறுப்பை உருவாக்க முடிவதால் அது எளிதில் உடலோடு ஒத்துப் போகும் என்றும் ஆரோக்கியம் குறைவு படாது என்றும் மருத்துவர்கள் கணித்துள்ளனர்.

மருத்துவத் துறையின் மைல் கல்லாக விளங்கும் இந்த ஆராய்ச்சியின் மூலம் இன்னும் சில பத்தாண்டுகளில் மக்களுடைய ஆரோக்கியமான ஆயுள் இருநூறு ஆண்டுகளாக நீட்டிக்கப் படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.