மனித ஆயுள் 200 வருடம் !

அடுத்த தலைமுறை மனிதனின் ஆரோக்கியமான ஆயுள் குறைந்த பட்சம் 200 என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதா ? திசு வளர்ச்சி ஆராய்ச்சியில் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் ஒரு மாபெரும் சாதனை நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்த கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் மாபெரும் மாற்றங்களை அடுத்த தலைமுறையில் கொண்டுவரும் என்று மருத்துவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

அப்படி என்ன தான் செய்துவிட்டார்கள் ?. ஒரு ஒற்றை செல்லை வளர வைத்து ஒரு பல்லை தயாராக்கியிருக்கிறார்கள். திசு வளர்ச்சி ஆராய்ச்சியின் மூலமாக எலி ஒன்றின் பல் செல் ஒன்றை செயற்கையாய் வளர வைத்து ஒரு பல்லை உருவாக்கியிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதன் மூலம் எதிர்காலத்தில் மனிதனின் செல்லை வைத்து மனிதனுடைய உறுப்புகளை வளர வைக்க முடியும் என்று இந்த ஆராய்ச்சியின் தலைவரும், டோ க்கியோ அறிவியல் பல்கலைக் கழகத்தின் பேராசிரியருமான அகாசி சுஜி ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

சிறுநீரகம், லிவர் போன்ற மனிதனின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு இப்போதெல்லாம் வேறு நபர்களுடைய உறுப்புகள் தான் தானமாய் பெறப்படுகின்றன. வேறு நபர்களின் உறுப்புகளைப் பொருத்துவதால் அது நம்முடைய உடலோடு ஒத்துப் போவதற்கு பல சிக்கல்கள் உள்ளன. தொடர்ந்த மருத்துவ கண்காணிப்பும், செலவும், ஆரோக்கியமற்ற உடலுமே கடைசியில் கிடைக்கிறது.

ஆனால் இந்த ஆராய்ச்சியின் மூலம் செயற்கையாக நோயாளியின் செல்லை வைத்தே உறுப்பை உருவாக்க முடிவதால் அது எளிதில் உடலோடு ஒத்துப் போகும் என்றும் ஆரோக்கியம் குறைவு படாது என்றும் மருத்துவர்கள் கணித்துள்ளனர்.

மருத்துவத் துறையின் மைல் கல்லாக விளங்கும் இந்த ஆராய்ச்சியின் மூலம் இன்னும் சில பத்தாண்டுகளில் மக்களுடைய ஆரோக்கியமான ஆயுள் இருநூறு ஆண்டுகளாக நீட்டிக்கப் படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Advertisements

8 comments on “மனித ஆயுள் 200 வருடம் !

  1. அதுக்கும் ஒரு லிமிட் தானா?
    அதென்ன 200 கணக்கு?
    உடற்குறை இருப்பவர்களுக்கு நிறையவே ஆறுதலான செய்தி.
    சீக்கிரம் வந்தால் நல்லது.

    Like

  2. //சூப்ப்பர் தகவல்…!! நன்றி !!! (பத்து வருஷம் தாங்குமா இந்த கட்டை :)) )//

    மார்க்கண்டேயனுக்கு வயசாகுமா என்ன 🙂

    Like

  3. //அதுக்கும் ஒரு லிமிட் தானா?
    அதென்ன 200 கணக்கு?
    உடற்குறை இருப்பவர்களுக்கு நிறையவே ஆறுதலான செய்தி.
    சீக்கிரம் வந்தால் நல்லது.//

    200 !!!! தேவையா நமக்கு ? இருக்கிற வரைக்கும் ஆரோக்கியமா இருந்தாலே போதும்ன்னு தான் எனக்கு தோணுது !

    Like

  4. //200 !!!! தேவையா நமக்கு ? இருக்கிற வரைக்கும் ஆரோக்கியமா இருந்தாலே போதும்ன்னு தான் எனக்கு தோணுது //

    ரிப்பீட்ட்டேய்

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s