ரிலீஸ் அண்ணிக்கே சிவாஜி பாக்கலாம் !

rajinikanth_sivaji_5.jpg

சூப்பர்ஸ்டாரின் சிவாஜி திரைப்படத்தை ரிலீஸ் ஆகும் தினத்தன்றே எல்லாரும் பார்க்கும் ஒரு வாய்ப்பு பிரகாசமாகியிருக்கிறது. படம் பற்றிய பரபரப்பு மழை இப்போது பெருமழையாகிக் கொண்டிருக்கிறது.

இதுவரை வினியோக உரிமை என்பது வெறும் ஏரியா சம்பந்தப்பட்டதல்ல, எந்த திரையரங்கில் எத்தனை காட்சிகள் என அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியது தான். ஒரே காம்ப்ளக்ஸ்-ல் இருக்கும் இரண்டு திரையரங்குகளில் ஒரே பெட்டியை வைத்துக் கொண்டு திரையிடப்படவேண்டுமெனில் அதற்கு தனியே அனுமதி வாங்க வேண்டும்.

இதையும் மீறி ஒரு திரையரங்கில் ஒரு ரீல் முடிந்ததும் அதை எடுத்துக் கொண்டு அடுத்த திரையரங்கில் படம் ஆரம்பித்து, பின் இரண்டாவது ரீல் எடுத்துக் கொண்டு ஓடி .. என ஒரே படத்தை இரண்டு திரையரங்குகளில் ரகசியமாய் ஓடி ஓடி ‘ஓட’ வைப்பதும் உண்டு. அதற்காக ஒரு படம் காலை ஒன்பது மணியெனில் அடுத்த அரங்கில் அதே படம் பத்துமணிக்கு என காட்சி அமைத்திருப்பார்கள்.

சிவாஜிக்கு இப்படியெல்லாம் அலையத் தேவையில்லை. ஏரியா உரிமை விற்பனையோடு சேர்த்து எத்தனை திரையரங்குகளில் வேண்டுமானாலும் திரையிட்டுக் கொள்ளலாம் எனும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதாகப்பட்டது என்னவெனில், நாகர்கோவில் ஏரியாவை ஒருவர் வாங்குகிறார் எனில் அங்குள்ள அனைத்து திரையரங்குகளிலும் கூட அவர் படத்தை திரையிட முடியுமாம் ! திரையரங்கு கிடைத்தால்.

இதன்மூலம் படம் வெளியாகி யாராவது ‘காண்டிட் காமரா’ வைத்து சுட்டு அதை சிடியில் போட்டு விற்கத் துவங்குவதற்கு முன்பே கணிசமான லாபத்தைப் படம் சம்பாதித்துக் கொடுக்கும்.

நிறைய திரையரங்குகளில் படம் வெளியானால் மக்களுக்கு பிளாக் டிக்கெட் விலை கொஞ்சம் குறையும். 🙂 இல்லாமப் போகும் என்றெல்லாம் தோன்றவில்லை.

முதல் நாள் தலைவர் படத்தைப் பார்க்கவில்லை என்று சொல்லி தீக்குளிக்கும் ரசிகன் தப்பிப்பான்.

ஆனா பாவம், பாலாபிஷேகம் பண்ணும் ரசிகர்களுக்குக் கஷ்டம் தான். எத்தனை திரையரங்குகளில் தான் கட்டவுட் வெச்சு பாலாபிஷேகம் செய்வாங்க ? அன்னிக்கு பால் தட்டுப்பாடு வரலாம் எனவே வீட்டு அம்மாக்கள் முந்தின நாளே பால் வாங்கி வெச்சுக்கோங்க.

படத்துல தலைவர் பாட்டு வேற பாடியிருக்காராம் இசை விற்பனை பிச்சுக்கும் என்பது நிதர்சனம். எம்.பி.3 எப்போ கிடைக்குமோ ?

அமெரிக்கா வாழ் ரசிகர்கள் வருத்தப்பட வேண்டாம். உலகக் கோப்பை கிரிக்கெட் இந்த ஆண்டு அமெரிக்க தொலைக்காட்சிகளில் நேரடியாய் ஒளிபரப்பாக இருக்கிறது !

Advertisements

9 comments on “ரிலீஸ் அண்ணிக்கே சிவாஜி பாக்கலாம் !

 1. யோவ்,

  உனக்கு வேறு வேலை வெட்டி இல்லையா? உன்னை வைத்து கண்ட கண்ட நடிகன்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறான்கள். முதலில் நாட்டைப் பற்றி நன்றாக அறிந்து கொள். நம் நாட்டை முன்னேற்ற என்ன என்ன செய்யலாம் என யோசி. அட்லீஸ்ட் உன் குடும்பத்தைப் பற்றியாவது கொஞ்சம் யோசி. சிவாஜி, தசாவதாரம் – படங்கள் ரிலீஸ் ஆகி விட்டால் மட்டும் உலகம் செழித்து விடுமா?

  இந்த நடிகன்கள் நாட்டுக்காக என்ன தியாகம் செய்தார்கள்?
  ரசிகர்களின் தலையில் மிளகாய் அரைத்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
  முதலில் உன் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள். அப்போதுதான் நிஜ மனிதர்களின் வலி தெரியும். நடிகன்கள் போன்ற மாயை மனிதன்களின் உண்மை சொரூபம் புரியும்.

  வேதனையுடன்
  எழுத்தாளர் “ஒளிர்ஞர்”

  Like

 2. hi,, Savier

  you are wasting your and our time by posting these kind of nonsense photos,
  we all beleived to be againest these film stars illusion,please be responsible to some serious issues,

  because Rajini is a clever bussinessman but not a good man .his coniouse also
  will accept this

  Like

 3. //எம்.பி.3 எப்போ கிடைக்குமோ ?//
  உங்களுக்கு கிடைக்கவில்லையா?

  //நிறைய திரையரங்குகளில் படம் வெளியானால் மக்களுக்கு பிளாக் டிக்கெட் விலை கொஞ்சம் குறையும்.//
  குறைந்தது உண்மைதான்!!!

  Like

 4. எழுத்தாளர் “ஒளிர்ஞர்”க்கு,

  அப்படிப் பார்த்தால் வாழ்வில் எல்லாமே மாயைதான், நீங்கள் எழுதிக் கொண்டிருப்பதுகூட! அதற்காக எழுதாமல் இருக்கிறீர்களா என்ன? வாழ்வில் எல்லாமே தேவைதான் என்பதை கொஞ்சம் புரிந்து கொள்ள முயலுங்கள்!!!

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s