அதிர்ச்சி ! வைட்டமின் மாத்திரைகள் ஆயுளைக் குறைக்கும் !!!

வைட்டமின் மாத்திரைகளை உட்கொள்வது ஆயுளைக் கூட்டுவதற்குப் பதிலாக குறைக்கும் என்னும் அதிர்ச்சியூட்டும் தகவலை கோப்பென்ஹகென் பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. பிபிசியில் வெளியான இந்த தகவல் உலகெங்கும் உள்ள மருத்துவர்களையும், வைட்டமின் மாத்திரைப் பயன்பாட்டாளர்களையும் திடுக்கிட வைத்திருக்கிறது.

வைட்டமின் மாத்திரைகள் உடலிலுள்ள வைட்டமின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக வழங்கப்படுகின்றன. அவையே ஆயுளைக் கூட்டுவதற்குப் பதிலாக குறைக்கும் என்பது மருத்துத் துறைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலுமே இந்த வைட்டமின் மாத்திரைகளை பல கோடி மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளிலேயே சுமார் இருபது சதவீதம் பேர் இந்த வைட்டமின் மாத்திரைகளைப் பயன்படுத்துபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வைட்டமின் எ, இ மற்றும் சி ஆகியவற்றை வைத்து நிகழ்த்தப்பட்ட பல்வேறு சோதனைகளின் முடிவில் இந்த முடிவை அவர்கள் அறிவித்துள்ளனர்.

உணவுப் பழக்கவழக்கத்தைக் முறைப்படுத்தி, சரியான விகிதத்தில் சரியான வைட்டமின் சத்துள்ள உணவுகளை உண்பது மட்டுமே முழு பலன் தரும் என்றும் அவர்கள் ஆலோசனை சொல்கிறார்கள்.

இந்த சோதனைகளின் முடிவில் வைட்டமின் சி அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும், வைட்டமின் எ பதினாறு விழுக்காடு பாதிப்பை அதிகரிக்கிறது என்றும், பி காம்ப்ளக்ஸ் ஏழு விழுக்காடும், வைட்டமின் இ நான்கு விழுக்காடும் பாதிப்பை அதிகப்படுத்துகின்றன என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மருத்துவர் பிராங்கிளின் பிலிப்ஸ் , பிரிட்டிஷ் டயடிக் குழுவைச் சேர்ந்தவர், இது குறித்துக் கூறுகையில் இயற்கையான உணவே எப்போதும் சிறந்தது. மாத்திரைகள் எப்போதும் இயற்கை உணவின் பலன்களைத் தரமுடியாது என்றார்.

இந்த ஆராய்ச்சி தவறானது என்று டாக்டர் ஆன் வால்கர், ஹெல்த் சப்ளிமண்ட்ஸ் தகவல் துறை, எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளார்.

என்னுடைய நண்பர், சித்த வைத்தியராய் இருப்பவரிடம் இது குறித்து பேசினேன். அவர் ‘இயற்கை உணவை எந்த மருந்தும் ஈடு செய்யும் பேச்சுக்கே இடமில்லை.

அதுமட்டுமல்ல, ஒரு தாவரத்துக்கு ஒரு மருத்துவக் குணம் இருக்கிறது என்றால் விஞ்ஞானம் அந்த குறிப்பிட்ட பொருள் என்ன என்பதைக் கண்டறிந்து அதைச் செயற்கையாய் தயாரித்து மாத்திரையாக்குகிறது. ஆனால் உண்மையில் அந்த தாவரத்தின் அந்த குறிப்பிட்ட சத்து நம் உடலுக்குள் செல்ல வேண்டுமென்றால், அதே தாவரத்திலுள்ள மற்ற அனைத்து சத்துகளும் பக்க பலமாக இருக்க வேண்டும். இதை யாரும் கவனத்தில் கொள்வதில்லை என்று ஒரு புதிய தகவலைச் சொன்னார்.

ரஜினி, மோகன்லால் & ஏசுதாஸ் – மெழுகு பொம்மைகள்

தோழி ஒருத்தி மலேஷியாவிலிருந்து இந்த படங்களை அனுப்பியிருந்தார். உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே என்று இங்கே பதிவு செய்கிறேன்.

88-rajniwax.jpg

89-mohanlalwax.jpg

95-yesudaswax.jpg

கல்லறைத் தோட்டத்தில் திருமணம்

மரணம் வரை பிரியமாட்டேன் என்னும் உறுதி மொழியுடன் இணைவது திருமணத்தில் சகஜம். ஆனால் திருமணமே கல்லறைத்தோட்டத்தில் நடப்பது புதுமை !

ஸ்காட் அம்ஸ்லர் , மிராண்டா தம்பதியினர் தங்கள் திருமணத்தை கல்லறைத் தோட்டத்தில் நடத்தியிருக்கிறார்கள். ஏதேனும் வித்தியாசமாய் செய்ய வேண்டும் எண்ணம் மக்களிடையே இருப்பது இயல்பு. அதற்கு ஒரு உதாரணமாய் இருக்கிறது இந்த திருமணம்.

நண்பர்கள் உறவினர்களிடையே இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதாகவும் அதையெல்லாம் முறியடித்து இந்தத் திருமணத்தை நடத்தியிருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள் இல்லினாயிஸில் வசிக்கும் இந்த அமெரிக்கத் தம்பதியினர்.

உயிருடன் இருப்பவர்களையும், இறந்தவர்களையும் நாங்கள் மதிக்கிறோம் மற்றபடி நாங்கள் சாத்தானை வழிபடுபவர்கள் என்று தவறாக நினைத்துவிட வேண்டாம் என்கின்றனர் சிறு புன்னகையுடன்.

பி(எ)ன் குறிப்பு :
பரபரப்புக்காக வானத்துக்கு மேலே, பூமிக்குக் கீழே, கடலுக்கு உள்ளே, விமானத்திலே எங்கே வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கோங்க. ஆனா கடைசி வரைக்கும் சேர்ந்து வாழுங்க 🙂 அடுத்த வாரமே விவாகரத்து அது இதுன்னு அலையாதீங்க.

வாவ் ! பெயிண்டிங்ஸ் – ஜெர்மனியிலிருந்து !

எங்கெங்கேயோ பெயிண்ட் பண்ணி பார்த்திருப்பீங்க. ஆனா டிரக் ல இவ்ளோ அற்புதமான கலை நயத்தோடு பெயிண்ட் பண்ணி பார்த்திருக்கீங்களா ? இல்லேன்னா பாருங்க..

முதல் பரிசு பெற்ற பெயிண்டிங்.

truck7.JPG

இதுக்கு இரண்டாவது பரிசு…

truck6.JPG

மற்றவை…

truck5.JPG

truck41.JPG

truck3.JPG

truck2.JPG

truck1.JPG