அதிர்ச்சி ! வைட்டமின் மாத்திரைகள் ஆயுளைக் குறைக்கும் !!!

வைட்டமின் மாத்திரைகளை உட்கொள்வது ஆயுளைக் கூட்டுவதற்குப் பதிலாக குறைக்கும் என்னும் அதிர்ச்சியூட்டும் தகவலை கோப்பென்ஹகென் பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. பிபிசியில் வெளியான இந்த தகவல் உலகெங்கும் உள்ள மருத்துவர்களையும், வைட்டமின் மாத்திரைப் பயன்பாட்டாளர்களையும் திடுக்கிட வைத்திருக்கிறது.

வைட்டமின் மாத்திரைகள் உடலிலுள்ள வைட்டமின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக வழங்கப்படுகின்றன. அவையே ஆயுளைக் கூட்டுவதற்குப் பதிலாக குறைக்கும் என்பது மருத்துத் துறைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

இந்தியா உட்பட அனைத்து நாடுகளிலுமே இந்த வைட்டமின் மாத்திரைகளை பல கோடி மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளிலேயே சுமார் இருபது சதவீதம் பேர் இந்த வைட்டமின் மாத்திரைகளைப் பயன்படுத்துபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வைட்டமின் எ, இ மற்றும் சி ஆகியவற்றை வைத்து நிகழ்த்தப்பட்ட பல்வேறு சோதனைகளின் முடிவில் இந்த முடிவை அவர்கள் அறிவித்துள்ளனர்.

உணவுப் பழக்கவழக்கத்தைக் முறைப்படுத்தி, சரியான விகிதத்தில் சரியான வைட்டமின் சத்துள்ள உணவுகளை உண்பது மட்டுமே முழு பலன் தரும் என்றும் அவர்கள் ஆலோசனை சொல்கிறார்கள்.

இந்த சோதனைகளின் முடிவில் வைட்டமின் சி அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும், வைட்டமின் எ பதினாறு விழுக்காடு பாதிப்பை அதிகரிக்கிறது என்றும், பி காம்ப்ளக்ஸ் ஏழு விழுக்காடும், வைட்டமின் இ நான்கு விழுக்காடும் பாதிப்பை அதிகப்படுத்துகின்றன என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மருத்துவர் பிராங்கிளின் பிலிப்ஸ் , பிரிட்டிஷ் டயடிக் குழுவைச் சேர்ந்தவர், இது குறித்துக் கூறுகையில் இயற்கையான உணவே எப்போதும் சிறந்தது. மாத்திரைகள் எப்போதும் இயற்கை உணவின் பலன்களைத் தரமுடியாது என்றார்.

இந்த ஆராய்ச்சி தவறானது என்று டாக்டர் ஆன் வால்கர், ஹெல்த் சப்ளிமண்ட்ஸ் தகவல் துறை, எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளார்.

என்னுடைய நண்பர், சித்த வைத்தியராய் இருப்பவரிடம் இது குறித்து பேசினேன். அவர் ‘இயற்கை உணவை எந்த மருந்தும் ஈடு செய்யும் பேச்சுக்கே இடமில்லை.

அதுமட்டுமல்ல, ஒரு தாவரத்துக்கு ஒரு மருத்துவக் குணம் இருக்கிறது என்றால் விஞ்ஞானம் அந்த குறிப்பிட்ட பொருள் என்ன என்பதைக் கண்டறிந்து அதைச் செயற்கையாய் தயாரித்து மாத்திரையாக்குகிறது. ஆனால் உண்மையில் அந்த தாவரத்தின் அந்த குறிப்பிட்ட சத்து நம் உடலுக்குள் செல்ல வேண்டுமென்றால், அதே தாவரத்திலுள்ள மற்ற அனைத்து சத்துகளும் பக்க பலமாக இருக்க வேண்டும். இதை யாரும் கவனத்தில் கொள்வதில்லை என்று ஒரு புதிய தகவலைச் சொன்னார்.

10 comments on “அதிர்ச்சி ! வைட்டமின் மாத்திரைகள் ஆயுளைக் குறைக்கும் !!!

 1. செய்திக்கு நன்றி சேவியர். கடைசியில் எதை நம்புவுது எதை நம்பாமல் விடுவது என்று குழப்பமாக இருக்கிறது. வேண்டுமென்று சொல்லுகிறார்களா என சந்தேகமாக இருக்கிறது. ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்கிறார்கள். பிறகு பத்து வருடம் கழித்து அதையே குறை சொல்கிறார்கள். இது வரவர ஒரு வழக்கமாக ஆகிவிட்டது. சாதாரண நோய்களுக்கு முடிந்தவரை நாட்டுவைத்தியம் பார்ப்பதே நல்லது என சொல்லலாமா?

  பகிர்ந்தமைக்கு நன்றி சேவியர்.

  Like

 2. //ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்கிறார்கள். பிறகு பத்து வருடம் கழித்து அதையே குறை சொல்கிறார்கள்//

  உண்மை தான் என்ன செய்வது ? இயற்கையோடு வாழ்வது எப்போதுமே சிறந்தது என்பதை நாம் எப்போதோ சொல்லிவிட்டோம் 🙂

  Like

 3. //நமக்கும் அதிர்ச்சிதான் நண்பரே…தெரியபடுத்தியமைக்கு நன்றி…//

  வருகைக்கு நன்றி நண்பரே.

  Like

 4. Xavie, you’re right, people don’t do the impact analysis of the particular vitamin being more, or if taken as supplement what needs to be taken along to balance it or catalyst it for human body. This again proves nature always hold the upper hand in everyday life!

  Like

 5. விட்டமின் வில்லன்கள், உண்மையிலேயே அதிர்ச்சியான செய்திதான். என் நண்பர்கள் பலர் ஜிம்முக்குப் போய்விட்டு, உடம்பை ஏற்றுவதற்காக மல்ட்டி விட்டமின் மாத்திரைகள் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன்.

  அன்புடன்
  எழுத்தாளர் ஒளிர்ஞர்

  Like

 6. வேண்டாம் என்று சொல்லுங்கள் நண்பர்களிடம். ஒழுங்காக நல்ல சத்துள்ள இயற்கை உணவைச் சாப்பிடச் சொல்லுங்கள். கடலில் போய் குளித்துவிட்டு அப்படியே மூன்று மீனையும் சாப்பிட்டு வரச் சொல்லுங்கள்.

  Like

 7. அலோபதி மாத்திரைகள் பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. முடிந்தவரையில் இயற்கையான உணவுக்கு மாறுவதுதான் இந்த சிக்கல்களைத் தவிர்க்க வழி.

  அன்புடன்
  எழுத்தாளர் ஒளிர்ஞர்

  Like

 8. உண்மை !!! 100% ஒத்துக் கொள்கிறேன். ஆனால் ஒன்று, இயற்கையாய்க் கிடைக்கும் உணவும் இப்போது செயற்கை உரங்களாலும், மாசு வினாலும் நாசமாகிக் கிடக்கிறது !

  Like

 9. காலத்தின் கட்டாயம் நாம் எல்லோரும் இயற்கையை விட்டு விலகிச் செல்ல வேண்டிய சூழ்நிகை உருவாகி இருக்கிறது. என்ன செய்வது. அதன் விளைவுகளைச் சந்த்தித்தே ஆக வேண்டும்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s