புற்றுநோயும், சர்க்கரை அளவும்

doc1.jpg

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாய் இருக்கும் பெண்களுக்கு புற்று நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாய் இருப்பதாக ஐரோப்ப ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.

சர்க்கரை நோயோ, அதிகமாக இனிப்பு வகைகளை உண்பதோ இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. இப்படி உடலில் சேரும் அதிகப்படியான சர்க்கரையினால் பெண்களுக்கு கருப்பை, தோல் போன்ற பல இடங்களில் புற்று நோய் வரும் என அந்த ஆராய்ச்சி எச்சரித்துள்ளது.

மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு வருவதற்கும் இந்த இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பது ஒரு காரணம் என்று உமேயா பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. அதுவும் 49 வயதுக்குக் குறைவான பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கை அச்சுறுத்துகிறது.

கடந்த பதிமூன்று வருடங்களாக இந்த ஆராய்ச்சி நடைபெற்று வருவதாகவும், பல ஆயிரக்கணக்கான புற்று நோயாளிகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப் பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இனிப்பான எல்லாமே இனிப்பான செய்தியைத் தராது என்பது மீண்டுமொரு முறை நிரூபிக்கப் பட்டிருக்கிறது !

சொல்லி அடிப்பேன் – கதை !

solli.jpg

விவேக் கதாநாயகனாக நடிக்கும் சொல்லி அடிப்பேன் திரைப்படத்தின் கதை ஒரு பிரபலமான மலையாளத் திரைப்படத்தின் கதையாம். அப்படியெனில் அந்தக் கதை இது தான்.

கதாநாயகன் ஒரு கலகல பேர்வழி. அன்பான குடும்பம், அழகான முறைப்பெண் என செல்லும் வாழ்க்கையில் அவனுக்கு இருக்கும் ஒரே சவால் வறுமை. போதுமான வருமானம் இல்லாமல் வருந்தும் கதா நாயகன் ஊர் முழுக்க கடன் வாங்கி வைத்துக் கொண்டு அதைக் கொடுக்க முடியாமல் சமாளித்து, ஒளித்து நடமாடுகிறான்.

ஒரு கட்டத்தில் கடன் தொல்லையினால் இனிமேல் என்ன செய்வதென்றே தெரியாமல் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் கடலில் குதிக்கிறான். ஹீரோ தான் சாக மாட்டாரே, அவர் ஒரு மீனவனின் வலையில் சிக்கி காப்பாற்றப்படுகிறார், வேறு ஒரு இடத்தில் !

ஆனால் இங்கே கதாநாயகனின் உடை கடலில் மிதப்பதால் கதாநாயகன் இறந்துவிட்டதாய் குடும்பம் கலங்கி நிற்க, அவனுடைய முறைப்பெண் விதவைக் கோலத்தில் கதாநாயகனின் வீட்டிலேயே தஞ்சம் ! செண்டிமெண்டல் டச் !

அங்கே, கதாநாயகனைக் காப்பாற்றும் மீனவர் அவனை ஒரு பஞ்சாபியுடைய வீட்டில் வேலைக்குச் சேர்க்கிறார், ஊமை என்று சொல்லி ! இந்தி தெரியாத கதா நாயகனின் சமாளிப்புகளும், ஊமையாய் நடிக்கும் கலகலப்புகளும் அங்கே அரங்கேற, அங்குள்ள ஒரு பஞ்சாபிப் பெண்ணுக்கு கதா நாயகனின் மேல் காதல். அவள் ஒரு ஊமை !

கதாநாயகன் முறைப்பெண்ணின் நினைவினால் ஊமையின் காதலை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறார். ஒரு கட்டத்தின் கதாநாயகன் ஊமை இல்லை என்பதும், அவனுடைய குடும்ப சூழலும் தெரிய வர இந்த ஊமைப் பெண் அவனுக்கு தேவையான பணம் கொடுத்து கண்ணீருடன் வெளியே அனுப்புகிறாள்.

கதாநாயகன் அவனுடைய காதலி வீட்டுக்கு ஒரு நண்பனை அனுப்பி நிலவரம் கேட்கச் சொல்கிறான். நண்பன் முறைப்பெண் வீட்டுக்குச் செல்லும் போது முறைப்பெண்ணின் தந்தை ‘ பெண் அவளுடைய புருஷன் வீட்டில் நிற்கிறாள்’ என்று சொல்ல, நண்பன் அவளுக்குத் திருமணம் ஆகி விட்டது என்று தவறாய் புரிந்து கொள்கிறான்.

இந்த விஷயத்தைக் கேள்விப்படும் கதாநாயகன் சற்று நேரம் வருத்தப்பட்டு ஒரு பாடலைப் பாடி முடித்துவிட்டு ஊமைப் பெண்ணின் காதலை ஏற்கிறான். அவனுக்கு தன் முறைப்பெண் தன்னுடைய வீட்டில் நிற்கும் செய்தியும், தன்னைத் தான் கணவனாக நினைத்து வாழ்கிறாள் என்பதும் தெரியவில்லை !!!

கதாநாயகனுக்கும் ஊமைப் பெண்ணுக்கும் திருமண நாள். கதாநாயகன் உயிருடன் இருக்கும் செய்தி குடும்பத்தினருக்கு அப்போது தெரிய வருகிறது. ( கிளைமேக்ஸ் இல்லையா ? அதான் ). ஆனந்தமாய் ஓடி வரும் முறைப்பெண்ணுக்கு, காதலனின் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பது அதிர்ச்சி !

கதாநாயகன் தன் காதலியர் இருவரையும் ஒரே நேரத்தில் சந்திக்கிறார். பயங்கர மியூசிக்.. :), ஷாக், குழப்பம் , இத்யாதி.. இத்யாதி.

இறந்து போன காதலனுக்காக அவனுடைய வீட்டிலேயே விதவைக் கோலத்தில் வாழத் துணியும் உயிருக்கு உயிரான முறைப்பெண்ணா ?

ஊமை என்பதற்காய் வாழ்க்கை இழந்து நிற்கும், தன்னை உயிராய் நேசிக்கும் ஊமைப்பெண்ணா ? யாரைத் திருமணம் செய்து கொள்வதென்று தெரியாமல் உலக மகா உன்னதமான கதாநாயகன் கலங்கி நிற்க,

இந்த கேள்விகளை, முறைப்பெண்ணே முன் வந்து ஊமைப்பெண்ணுக்கு வாழ்க்கைக் கொடுங்கள் என்று விழிகள் வழிய, கரம் கோர்த்து வைத்துச் சொல்வாள் என்பதைச் சொல்ல நான் தேவையில்லை தானே 🙂

இனி இந்த கதையில் விவேக் கைப் பொருத்திப் பாருங்கள்… அதான் சொல்லி அடிப்பேன் !

ஒரே தமாசு…

கிரிக்கெட்ல இந்தியா தோத்ததுல இருந்து மின்னஞ்சல்களைப் படித்து சிரித்துக் கொண்டு இருக்கவே நேரம் சரியாக இருக்கிறது.
துன்பம் வரும் வேளையிலே சிரிங்க – என்று
சொல்லி வச்சார் வள்ளுவரு சரிங்க :).

இதையும் பாருங்கோ !

12.jpg
11.jpg10.jpg9.jpg8.jpg7.jpg6.jpg5.jpg3.jpg2.jpg1.jpg

இதுவரை படிக்காதவங்களுக்காக 🙂

நவ்ரச நாயகன் திராவிட் ‘ பராசக்தி’ பாணியில் பேசினால்?!!

“உலகக் கோப்பை. பல விசித்திரமான போட்டிகளைச் சந்தித்திருக்கிறது.. விசித்திரமான ஆட்டக்காரர்களைப் பார்த்திருக்கிறது. ஆனால் , இந்தப் போட்டி விசித்திரமும் அல்ல. நான் விசித்திரமான ஆட்டக்காரனும் அல்ல. போட்டிகளிலே கலந்து கொண்டு சர்வசாதாரணமாக தோல்விகளை எந்தக் கேவலமும் இன்றி் தோளிலே சுமந்து வரும் சாதாரண இந்திய கேப்டன் தான் நான்.

பங்களாதேசிடமும் , இலங்கையிடமும் தோற்றேன். உலகக் கோப்பையைத் தவற விட்டேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். பங்களாதேசிடமும் இலங்கையிடம் தோற்றேன் – அவர்களிடம் தோறக் வேண்டுமே என்பதற்காக அல்ல. ஆனால் நேரு வகுத்த பஞ்சசீலக் கொள்கையின் படி அண்டை நாடுகளோடு அன்யோன்யமாகப் பழக வேண்டுமே என்பதற்காக. உலகக் கோப்பையைத் தவற விட்டேன். அது தூக்குவதற்கு சிரமமாக இருக்கிறதென்பதற்காக அல்ல. ‘ தன்னைப் போல பிறரையும் நேசி ‘ என்று இயேசுபெருமான் சொன்னதை மற்றவர்களுக்கும் உணர்த்துவதற்காக.

உனக்கேன் அக்கறை ஊரில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன் நேரடியாக பாதிக்கப்பட்டேன். ஆறு ஃபீலடரை ஆஃப்சைடில் நிறுத்தி விட்டு பந்து போடச சொன்னால் லெக்ஸ்டம்புக்கு வெளியே பந்து போடும் பரதேசிகளால் பாதிக்கப்பட்டேன். செத்த பாம்பு போல பெர்முடா கிடைத்தால் ‘ சாத்து சாத்தென்று’ சாத்திவிட்டு தேவை வரும்போது மட்டும் ‘வெயில் தாங்கலை ‘ன்னு பெவிலியனுக்கு ஓடும் ‘மாஸ்டர் பிளாஸ்டர்களால் ‘ பிளாஸ்டர் போட்டுக் கொள்ளும்படி பாதிக்கப்பட்டேன்.

கேளுங்கள் என் கதையை. என் வீட்டில் கல்லெறியுமுன் தய்வுசெய்து கேளுங்கள் என் கதையை…..”

“நாயகன்” பாணீயில் இந்திய அணியின் நாயகன் பேசினால்..??!!

” அவனை நிறுத்தச் சொல் நான் நிறுத்துறேன்.
கங்குலி அடிச்சபோது பூசணிக்காய் உடம்பை வச்சுக்கிட்டு அரைகிலோ மீட்டர் ஓடிப் போய் பந்தைப் புடிச்சான் பாரு முரளிதரன் அவனை நிறுத்தச் சொல் நான் தோக்குறதை நிறுத்துறேன். ஆஃப்சைடுலதான் அடிப்பான்ன்னு தெரிஞ்சு எலிப்பொறில மசால்வடை வைக்குற மாதிரி ‘ஸ்லிப் ‘ வைச்சு சேவாக்கைத் தூக்குனான் பாரு ஜெயவர்தனே. அவனை நிறுத்தச் சொல நான் நிறுத்துறேன். நாலு அடி நடந்து வந்து பந்து போடும்போதும் ‘நோபால் ‘ போட்டான் பாரு டெண்டுல்கர். அவனை நிறுத்தச் சொல். நான் நிறுத்துறேன். இல்லாத ரன்னுக்காக நாயா ஓடி வந்தான் பாரு யுவராஜ் சிங். அவனை ஓடாம நிக்கச் சொல். நான் நிறுத்துறேன்.எந்தப் பக்கம் அடிச்சாலும் அந்தப் பக்கம் ஃபீல்டரை வச்சிருக்கான் பாரு. அதை நிறுத்தச் சொல். நான் நிறுத்துறேன். எங்க தூக்கி அடிச்சாலும் புடிக்குறானுங்க பாரு. அதை நிறுத்தச் சொல் நானும் நிறுத்துறேன். புறப்படும்போதே “க்மான் இந்தியா”ன்னு அபசகுனமா பாட்டு பாடி உடனே திரும்பி வரச் சொன்னான் பாரு சங்கர் மகாதேவன். அந்த பரதேசியை நிறுத்தச் சொல். எல்லாத்துக்கும் மேலா , எங்களையெல்லாம் மனுசங்களா மதிச்சு ப்ளாக்ல பொலம்புறானுங்க பாரு வெவஸ்தை கெட்டவனுங்க. அவனுங்களை நிறுத்தச் சொல். அப்புறமாவது தோக்குறதை நிறுத்தலாமான்னு யோசிக்கிறேன்.. ”

நீங்கள்தான் தேசத் துரோகிகள் – ராகுல் திராவிட் அறிக்கை

” இப்ப என்ன குடிமுழுகிப் போச்சு? நாங்க தோத்ததுனால இனிமே பசங்க பரிட்சை நேரத்துல டிவி முன்னால உக்காராம படிப்பானுங்க. ராத்திரி முழுக்க கண்முழிச்சு டிவி பார்த்துட்டு காலைல ஆபிசுல தூங்காம இருப்பானுங்க( ?!) ராத்திரி முழிக்கிறதால நாட்டுக்கு மின்சார செலவு மிச்சம். வேளாவேளைக்கு தூங்குறதால உடம்புக்கு நல்லது. நடுராத்திரில டிவிபாக்குறதுக்காக டீ ,காப்பி , நொறுக்குத்தீனி மாதிரி வெட்டிச்செலவு கிடையாது. வேளைகெட்ட வேளையில் தூங்கப்போறதால ஜனத்தொகை பெருக இருந்த வாய்ப்பும் கொறஞ்சு போகுது. இப்படி எவ்வள்வோ நாட்டுக்காக எவ்வள்வோ பெரிய தியாகம் செஞ்சும் என் வீட்டு மேல கல்லடிக்குற நீங்க எல்லாம்தான் தேசத் துரோகிகள்” – என்று ராகுல் திராவிட் உருக்கமாக அறிக்கை விட்டிருக்கிறார்

இந்திய அணியினர் இனிமேல் என்ன செய்யலாம் ?

மின்னஞ்சலில் வந்த இந்த படங்களைப் பார்த்து சிரித்த சிரிப்பில் பெர்முடா தோற்றுப் போன கவலை கூட மறந்து போய்விட்டது ! பாருங்கள்

உத்தப்பா… இளநீ வெட்டி ஊத்தப்பா !

uthappaa.JPG

கிரிக்கெட் ஆடற டிப்ஸ் இனிமே யாரும் தரவேண்டாம். நிஜமான டிப்ஸ் கொஞ்சம் குடுங்க.

sehwag.JPG

நான் இனிமே லிட்டில் மாஸ்டர் இல்லே. லிப்(டன்) டீ மாஸ்டர்

sachin.JPG

நீங்க என் படத்தை வெச்சு பூஜை பண்ணினீங்க… நான் சாமியாராவே ஆயிட்டேன்.

rahul.JPG

ஆஃப் சைட் கட்டிங் கலக்கலா பண்ணுவேன். வாங்க வாங்க

ganguly.JPG

ஆட்ரா ராமா ஆட்ரா… இறங்கி வந்து ஆட்ரா..

doni.JPG

அகர்கர் மீன் மார்க்கெட். அக்மார்க் தரம் நிரந்தரம்.

agarkar.JPG

பூக்கரா… பூக்காரா.. உன் பூக்கள் மொத்தம் எத்தனை சொல்லிவிடு…

zageer.JPG

யுவராஜ் பழக்கடை… கிரிக்கெட் பந்து போன்ற உருண்டையான பழங்கள் இங்கே கிடைக்கும்.

yuva.JPG

நெட்டை நிலவே, இரட்டைத் திமிரே – சிவாஜி கலக்கலும், ஷங்கர் கலக்கமும்

ic1.jpg

‘உங்க கம்ப்யூட்டர்ல என்னதாண்டா பண்ணுவீங்க ?’ மணிரத்னத்தின் அசோசியேட் இயக்குனராய் பணிபுரியும் நண்பர் ஒருவரிடம் நேற்று பேசிக்கொண்டிருக்கையில் திடீரென இப்படி கேட்டார்.

என்ன விஷயம் சொல்லுங்க என்றேன்.

இல்லே. இவ்ளோ பாதுகாப்பா வெச்சிருக்கிற மேட்டரையே எப்படியோ இண்டர்நெட்ல புடிச்சு போட்டுடறாங்களே அதான் கேட்டேன் என்றார். ஷங்கர் இந்த பாடல்கள் இணையத்தில் உலவும் செய்தி அறிந்து கடும் அதிர்ச்சியிலும், கோபத்திலும் இருக்கிறாராம். இருக்காதே பின்னே, பல தினசரி நாளிதழ்கள் இதுதான் வாய்ப்பு என்று பாடல்களை பிரசுரம் செய்து பிரபலமாகியும் விட்டன.

எனவே இது சிவாஜி பட பாடல்கள் தானா என்பதைக் குறித்த சந்தேகம் உள்ளவர்கள் அதை விட்டுவிடுங்கள் இப்போது.

வா..ஜி பாடல் அக்மார்க் எ.ஆர்.ரஹ்மான் முத்திரையுடன் வந்திருக்கிறது.

நெட்டை நிலவே
இரட்டைத் திமிரே..

குமரியின் வளங்கள்
குழந்தையின் சிணுங்கல்
முரண்பாட்டு மூட்டை ந

என கவிஞரின் கற்பனைச் சிதறல்களில் பாடலின் சில்மிஷம் சிலிர்க்க வைக்கிறது. இந்த பாடலை எழுதியது வாலி என்பதை அறிய பெரிய ஆராய்ச்சி ஏதும் தேவையில்லை.

வரிகள் அப்படியே வாலி ரகம்.
சற்றும் விலகாத வாலிபக் கரம் !

—————————————–

பிற்சேற்கை ! :- ஆம்பல் மெளவல் ; வாஜி வாஜி…; புன்னகைத் தேன்குளம் ; செயல் புயல் நானடி ; பொன் வாக்கியமே வாய் வாத்தியமே என்னும் வார்த்தை விளையாட்டுகளைப் பார்த்து வாலி என்று நான் முடிவு கட்டியது தப்பாகிப் போயிருப்பதாக நண்பர் ஒருவர் தொலைபேசிச் சொன்னார். உண்மையில் இந்தப் பாடலை எழுதியது வைரமுத்துவாம்

——————————-

பாடல்

ஆம்பல் ஆம்பல்
ஆம்பல் ஆம்பல்

ஆம்பல் ஆம்பல்
ஆம்பல் ஆம்பல்

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ மெளவல் மெளவல்

உன் பூவிழி போர்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் மலருமடி
உன் கால்கொலுசொலிகள் போதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி

வா..ஜி, வா ஜி, வா ஜி
என் ஜீவன் நீ சிவாஜி
வா..ஜி, வா ஜி, வா ஜி
என் ஜீவன் நீ சிவாஜி

அன்பால் ஆணையிடு
அழுகை சாகவிடு

உன் ஆண் வாசனை
என்மேனியில்
நீ பூசிவிடு

அடி நெட்டை நிலவே
இரட்டைத் திமிரே
நெஞ்சில் முட்டிக் கொல்லு

வா..ஜி, வா ஜி, வா ஜி
என் ஜீவன் நீ சிவாஜி
வா..ஜி, வா ஜி, வா ஜி
என் ஜீவன் நீ சிவாஜி

ஆண்:

ஒரு வெண்ணிலவை
மணக்கும் மன்மதன் நான்

என் தேனிலவே ஒரு நிலவுடன் தான்
அவள் யாருமில்லை இதோ இதோ இவள் தான்

பெண்
புன்னகைப் பேரரசே
தேன் குளத்துப் பூவுக்குள் குளிப்பீரா ?

புன்னகைப் பேரரசே
தேன் குளத்துப் பூவுக்குள் குளிப்பீரா ?
விடியும் வரை மார்புக்குள் இருப்பீரா

விழிகளுக்குள் சிறு துயில் கொள்வீரா

ஆண்:
பெண்களிடம் சொல்வது குறைவு
செய்வது அதிகம்
செயல் புயல் நானடி

வா..ஜி, வா ஜி, வா ஜி
என் ஜீவன் நீ சிவாஜி
வா..ஜி, வா ஜி, வா ஜி
என் ஜீவன் நீ சிவாஜி

ஆண்:
பொன் வாக்கியமே
வாய் வாத்தியமே

உன் வளைவுகளில் உள்ள நெழிவுகளில்
வந்து ஒளிந்துகொண்டேன் சுகம் சுகம் கண்டேன்

பெண்:
ஆனந்த வெறியில் நான் ஆடைகளில்
பூமியை முடிந்து கொண்டேன்

விண்வெளியில் ஜதி சொல்லி ஆடி
வெண்ணிலவை ஜகதியும் ஆக்கிவிட்டேன்

ஆண்;
அடடடா குமரியின் வளங்கள்
குழந்தையின் சிணுங்கல்
முரண்பாட்டு மூட்டை நீ.

பெண்:
வா..ஜி, வா ஜி, வா ஜி
என் ஜீவன் நீ சிவாஜி
வா..ஜி, வா ஜி, வா ஜி
என் ஜீவன் நீ சிவாஜி

பிரமிக்க வைக்கும் பென்சில் சிலைகள்

பென்சிலைக் கொண்டு கலைகளை உருவாக்குவதைப் பார்த்திருப்பீர்கள், பென்சிலே கலையாவதை இங்கே பாருங்கள்.

pencil6.JPG

pencil5.JPG

pencil3.JPG

pencil1.JPG

pencil2.JPG

pencil4.JPG