சினிமாவின் ‘இளிச்சவாயன்’ மாப்பிள்ளைகள்

sh.jpg
எப்போதெல்லாம் இப்படிப்பட்ட ஒரு கிளைமேக்ஸ் காட்சியைப் பார்க்கிறேனோ அப்போதெல்லாம் எனக்கு எரிச்சலும், சிரிப்பும் ஒருசேரக் கிளம்பும். அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை அந்த கிளைமேக்ஸ் காட்சி மாறவேயில்லை.

அப்படியென்ன கிளைமேக்ஸ் காமெடிங்கறீங்களா ? அதான் கல்யாண மேடையிலே மாப்பிள்ளை பக்கத்துல நம்ம ஹீரோயின் நகத்தைக் கடிச்சிட்டு மாலையைப் பிடிச்சிட்டு பதட்டமா உக்காந்திருப்பாங்க. தாலி கட்டற நேரத்துல ஹீரோ வருவாரு பொண்ணு ஓடிப்போய் ஹீரோவைக் கட்டிப் பிடிக்க சுபம் !

உண்மையிலே இது சுபம் தானா ? பாவம் மேடையில ஒரு மாப்பிள்ளை இளிச்சவாயனைப் போல இருக்கிறானே ? அவன் கதி ? அவனோடு குடும்பத்தினரின் நிலமை ? அவர்கள் இந்தத் திருமணத்துக்காக எவ்வளவு கனவுகளைக் கண்டிருப்பார்கள், செலவுகளையும் செய்திருப்பார்கள் ?.

ஹீரோ, ஹீரோயின் இரண்டு பேரும் சேர்ந்து சிரிக்க ‘எ பிலிம் பை பஞ்சாங்கம்’ என்று டைட்டில் நிற்கும் பின்ணணியில் அந்த அப்பாவி மாப்பிள்ளை வேட்டி நுனியைக் கையில் பிடித்துக் கொண்டு ‘குடுத்த காசுக்கு நடிச்சாச்சு’ என்னும் திருப்தியோடு வாழை மரத்தடியில் நிற்பார்.

சரி.. உண்மையிலேயே இயக்குனர்கள் முட்டாள்களா ? இல்லை நாம தான் இந்த மாதிரி படத்தையெல்லாம் பார்த்துட்டு ‘செம ஜாலி மச்சி’ என்று கலக்ஷனை ஏத்தறோமா ? இந்தத் ‘திருவிளையாடல்’கள் இப்போ முடியும்ன்னு தோணலை !

என்னத்தைச் சொல்ல, ஹீரோவா மாறலேண்ணா மாப்பிள்ளைக்கும் கல்யாணத்துல மரியாதை இல்லை.

Advertisements

6 comments on “சினிமாவின் ‘இளிச்சவாயன்’ மாப்பிள்ளைகள்

 1. ஆமாங்க சைடு கேரக்டர் கதையெல்லாம் இவங்க பெரிசா எடுத்துக்கரதே இல்ல. நமக்கு தான் அந்த பையன் வாழ்க்கை இப்படி ஆச்சேன்னு கவலை. ஒருத்தர் கூட யோசிக்கறதே இல்லை.பாருங்க.

  Like

 2. அன்புடையீர்,

  சினிமா மாப்பிள்ளை இளிச்சவாய்கள் இல்லை. தமிழ் படங்களைப் பார்க்கும் நாம்தான் இளிச்சவாயன்கள்.

  அன்புடன் ஒளிர்ஞர்

  Like

 3. அன்புடையீர்,

  வணக்கம். அண்மைக்காலமாக தமிழ் சினிமாவின் சாபக் கேடாக, சில சின்ன நடிகன்கள் வந்திருக்கிறான்கள். எந்த முதிர்ச்சியும் இல்லாமல் காய்ந்த மாடு கம்பங் கொல்லையில் பாய்ந்தது போல டூயட் பாடுறான்கள்.

  இந்த நாய்களின் தொல்லை பொறுக்க முடியாமல், கடந்த 10 ஆண்டுகளாக நான் தமிழ் சினிமாவே பார்ப்பதில்லை. மொத்தத்தில் தமிழ் நாட்டுக்கு இது கஷ்ட காலம்.

  அன்புடன்
  எழுத்தாளர் ஒளிர்ஞர்

  Like

 4. பழனி வைத்தியர்களைக்
  கைது செய்வீர்களா?

  பழனி இப்போது போலி வைத்தியர்களுக்குப் புகழ்பெற்று விட்டது. டிவியைப் பார்க்க முடியவில்லை, பத்திரிகைகளைப் புரட்ட முடியவில்லை. எங்கும் இந்த போலி வைத்தியர்கள் ஆக்ரமித்து, பணம் பண்ணத் தொடங்கி விட்டார்கள்.

  எத்தனையோ போலி சாமியார்களைக் கைது செய்கிறார்கள். இந்த பழனி வைத்தியர்களை ஏன் இன்னும் கைது செய்யாமல் விட்டு வைத்துள்ளார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. என்றைக்கு பழனி வைத்தியர்களின் ஆதிக்கம் குறைகிறதோ, அன்றைக்குத்தான் தமிழக இளைஞர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.

  அன்புடன்
  எழுத்தாளர் ஒளிர்ஞர்

  Like

 5. Oru kathaila varra ellaa kathabaathirangalukkum vilakkam kudukkanumna..
  Mega serial-thaan edukkanum…. cinima edukka mudiyaaathu….

  Ellaaa maappilayaiyum hero-va katta mudiyumaa…….

  but, perumbalana malayala padangalla…… hero-thaan maranju ninnu
  kanneer viduvar…… Mappila hero-ina thallikkittu poykitte iruppaaru…..

  Ithatthan… malayalatthula

  “Mannunchaari Ninnavan, Pennungondu Poyee” appdinnu solvanga…….

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s