பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ?

cal2.jpg

ஏன் பிப்பிரவரி மாதத்துக்கு மட்டும் இருபத்தெட்டு நாட்கள் வந்தன ? இது ரோமர்கள் அன்று செய்த தவறு என்கின்றார் மெலோனிஸ் மெக்கஃபீ.ரோமர்களின் நாள்காட்டியை ரொமுலஸ் என்னும் மன்னன் வடிவமைத்தபோது அதை பத்து மாதங்கள் கொண்ட வருட நாள்காட்டியாகத் தான் வடிவமைத்திருக்கிறார்.

மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வரும் இந்த நாள்காட்டி லூனார் காலண்டர் விதிப்படி அமைக்கப்பட்டது. ஆனால் லூனார் வருடத்துக்குத் தேவையான நாட்கள் இந்த நாள்காட்டியில் இல்லை.

பருவங்களைக் கணக்கில் கொண்டே இந்த நாள்காட்டி அமைக்கப் பட்டது. டிசம்பருக்கும் மார்ச் மாதத்துக்கும் இடையே எத்தனை நாட்கள் என்பது தெளிவில்லாமலேயே இருந்தது.

ரோமின் இரண்டாவது மன்னனான நூமா பொம்பிலஸ் இந்த நாள்காட்டியை இன்னும் சரிசெய்து வருடத்துக்கு 354 நாட்கள் வரும்படி செய்தார். அவர்தான் ஜனவரி, பிப்ரவரி என்னும் இரண்டு மாதங்களையும் இணைத்தவர்.

அப்போது ஜனவரி, பிப்ரவரி இரண்டு மாதங்களுமே இருபத்து எட்டு நாட்களுடன் தான் இருந்தன. ஆனான் என்ன செய்ய இரட்டை எண் என்பது அந்நாட்களில் அபசகுனமாகக் கருதப்பட்டது. எனவே ஜனவரி மாதத்துக்கு மட்டும் சலுகை செய்து இன்னொரு நாளைக் கூட்டினான். அப்போது வருடத்தின் நாட்கள் 355 என்றும், ஜனவரி 29 நாட்கள் என்றும் ஆனது.

ஆனால் பிப்ரவரி மாதம் மட்டும் 28 நாட்களுடன் வருத்தப் பட்டது. பிப்ரவரி மாதம் ரோமர்கள் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும், தூய்மைச் சடங்குகள் நிறைவேற்றும் மாதமாக இருந்ததால் பிப்ரவரிக்கு இருபத்து எட்டு நாட்கள் என்பதை யாரும் கண்டு கொள்ளவில்லை. அங்குள்ள பழங்குடியினரின் பாஷையில் பிப்ரவரி என்பதன் விளக்கமே ‘சுத்தப் படுத்துதல்’ என்பது தான்.

இந்த 355 நாள் காலண்டரும் சரியாக இருக்கவில்லை. காரணம் அது பருவங்களைச் சரியாக காட்ட முடியவில்லை. பூமி சூரியனைச் சுற்றிவரும் நாளுக்கும் இந்த வருடத்துக்கும் வித்தியாசம் இருந்ததே அதன் காரணம்.

எனவே அவர்கள் பிப்பிரவரி இருபத்து மூன்றாம் நாளுக்குப் பின், இருபத்து ஏழு நாட்கள் கொண்ட புதிய மாதம் ஒன்றை அறிமுகப் படுத்தினார்கள். ஆனால் அது பரவலாக ஒத்துக் கொள்ளப்படவில்லை.

கிமு 45ம் ஆண்டு ஜூலியஸ் சீசர் தான் லூனார் நாள்காட்டியை ஒதுக்கி வைத்துவிட்டு எகிப்தியக் கலாச்சாரத்தின் அடிப்படையில் சூரியனை மையப்படுத்தும் சண் காலண்டரை அறிமுகப்படுத்தினார். அவர் தான் வருடத்துக்கு 10 நாட்களை அதிகரித்து, பிப்ரவரி மாதத்திற்கு சலுகையாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு அதிகப்படியான நாளை அளித்தார்.

இப்போது வருடத்துக்கு 365.25 நாட்கள் என்றானது. இது பூமி சூரியனைச் சுற்றி வரும் 365.2425 என்னும் கால இடைவெளியுடன் வெகுவாகப் பொருந்திவிட்டது. அது தான் இப்போது நாம் பயன்படுத்தி வரும் வருட காலண்டர்

8 comments on “பிப்பிரவரிக்கு மட்டும் ஏன் 28 நாட்கள் ?

 1. //பிப்ரவரி மாதத்திற்கு சலுகையாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு அதிகப்படியான நாளை அளித்தார்.//

  பிப்ரவரிக்கு 29 17,18 ஆம் நூற்டாண்டில்தான் வந்தது.
  அதனாலதான் எதோ ஒரு வருடத்தில் 15 நாட்கள்(செப்டம்பர்) கழிக்கப்பட்டது.
  unixl கூட அந்த வருட காலண்டரில் 15 நாள் இருக்காது

  Like

 2. சேவியர்,

  இப்பதிவின் கடைசிபத்தி தவறான கருத்து.

  லூனார் காலண்டரில், பிப்ரவரிக்கு 29 நாட்களைத் தந்து லீப் வருடத்தை அறிமுகப் படுத்தி, ஜீலியஸ் சீசர் ஜீலியன் காலண்டரை வெளியிட்டது சரிதான். ஆனால் ‘அது தான் இப்போது நாம் பயன்படுத்தி வரும் வருட காலண்டர்’ என்று நீங்கள் சொல்வது தவறு.

  எனக்குத் தெரிந்து ஜீலியன் காலண்டரை Microsoft Excel தவிர வேறெங்கும் உபயோகப்படுத்துவதில்லை.

  பெரும்பாலான நாடுகள் இப்போது பயன்படுத்துவது போப் மூன்றாம் கிரிகோரியாரால் 1582ல் அறிமுகப்படுத்தப்பட்ட கிரிகோரியன் காலண்டர். 1582ம் வருடம் அக்டோபர் மாதக் காலண்டரைப் பாருங்கள், 10 நாட்கள் இருக்காது.

  ஜீலியன் காலண்டரை இப்போது நாம் பின்பற்ற வாய்ப்பே இல்லை என்பதற்கு ஒரு சிம்பிளான உதாரணம். ஜீலியஸ் சீசர் இறந்து சுமார் நாற்பது வருடங்கள் கழித்துதான் இயேசு பிறந்தார். அப்படி இருக்க கிமு – கிபி கன்செப்டே இருக்க முடியாது.

  பொதுவாக கீழ்க்கண்ட சந்தேகங்கள் காலண்டரைப் பற்றி உண்டு.

  1) Septum என்றால் 7, Oct என்றால் 8, Nano என்றால் 9, Deca என்றால் 10. செப்டம்பர் ஏன் 9ம் மாதம்? அக்டோபர் ஏன் 10ம் மாதம்? நவம்பர் ஏன் 11ம் மாதம்? டிசம்பர் ஏன் 12ம் மாதம்?

  2) ஏன் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் 29 கிடையாது? ஏன் நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிப்ரவரிக்கு 29? (1900 லீப் வருடம் இல்லை; 2000 லீப் வருடம்)

  3) ஏன் ஏப்ரல் 1, முட்டாள்கள் தினம்?

  4) கிமு – கிபி எப்படி வந்தது?

  ஒரே பதில் – நாம் கிரிகோரியன் காலண்டரைப் பயன்படுத்துகிறோம்.

  2000ம் ஆண்டு தொடங்கியபோது கடிகாரங்களில் அகில உலக அளவில் ஒரு நொடி குறைக்கப்பட்டதற்கு எந்தக் காலண்டரும் காரணமில்லை.

  என்னதான் இருந்தாலும் கணிப்பொறி மொழிகளில் சேமித்துவைக்க, ஜீலியன் காலண்டர்தான் பயன்படுத்தப் படுகிறது. ஏன் என்றால்……

  எல்லாவற்றையும் நானே சொன்னால் சீக்கிரம் மறந்து போய்விடும். இந்தக் கேள்விக்குப் பதி கண்டுபிடிக்க முயலுங்கள்.

  என் கருத்துகளில் தவறிருந்தால் மன்னியுங்கள்; தெரியப்படுத்துங்கள்.

  -ஞானசேகர்

  Like

 3. கலக்கறீங்க ஞானசேகர் 🙂

  ஆகஸ்ட் மாதத்தில் 31 நாட்கள் வந்ததே, அகஸ்துஸ் சீசருக்கு மரியாதை செய்வதற்காக 29 நாட்களாக இருந்த பிப்ரவரியிலிருந்து ஒரு நாளை வெட்டி ஆகஸ்ட் மாதம் போட்டதனால் தான் என்று கூட ஒரு கதை உண்டு. ஏனென்றால் ஜூலியஸ் சீசரின் மாதமான ஜூலையில் 31 நாட்கள் இருக்கின்றன, அகஸ்து சீசரின் மாதத்துக்கு ஒரு நாள் குறைஞ்சா சரியா இருக்காதாம் 🙂

  நாம ஜூலியன் காலண்டரைப் பயன்படுத்தலேங்கறது உண்மை தான். நான் போட்டிருக்கும் அந்தத் தகவல் தவறு தான், மன்னிக்கவும். ( நம்ம துறையில பல இடத்துல இருக்கு ஜூலியன் காலண்டர் )

  Like

 4. மீண்டும் உங்கள் கேள்விக்கே வருகிறேன். பிப்ரவரிக்கு ஏன் 30க்குக் கம்மி?

  ஜீலை, ஆகஸ்ட் என்ற இரண்டு மாதங்களை 31 நாட்களால் தொடர்ந்து மரியாதை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

  ரோமரிய முதல் பேரரசர் அகஸ்து சீசரையும், ஜீலியன் காலணடரை அறிகுகப்படுத்திய ஜீலியஸ் சீசரையும் (You too Brutus?) கௌரவிக்க வேண்டிய கட்டாயம்.

  ஜீலைக்கு ஏற்கனவே வரிசைப்படி 31 இருப்பதால், அடுத்திருக்கும் ஆகஸ்டிற்கு 30 தான் கிடைத்தது. அதனால் ஏதாவது ஒரு மாதத்தில் இருந்து ஒரு நாள் பெறப்பட வேண்டும். அந்த ஒரு மாதம் ஏன் பிப்ரவரி என்பதுதான் உங்கள் கேள்வி.

  Septum என்றால் 7, Oct என்றால் 8, Nano என்றால் 9, Deca என்றால் 10. செப்டம்பர் ஏன் 9ம் மாதம்? அக்டோபர் ஏன் 10ம் மாதம்? நவம்பர் ஏன் 11ம் மாதம்? டிசம்பர் ஏன் 12ம் மாதம்? என்பது என் கேள்வி.

  இரண்டுக்கும் ஒரே பதில்: லூனார் காலண்டரில் கடைசி மாதம் பிப்ரவரி.

  பொத்தாம் பொதுவாக கடைசி மாதத்தில் இருந்து ஒரு நாளை எடுத்து விட்டார்கள்.

  -ஞானசேகர்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s