உல்மரின் மறைவு, சில சிந்தனைகள்.

bob.jpg

பாகிஸ்தானின் கிரிக்கெட் பயிற்சியாளர் உல்மரின் மறைவு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரு அதிர்ச்சித் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறிய நிகழ்வின் மன அழுத்தமே இதன் காரணம் என்று சொல்லப்பட்டாலும், இன்னும் சரியான விவரம் தெரியவில்லை.

பாகிஸ்தான் நாட்டு மக்களைப் பொறுத்தவரை தோல்வியிலிருந்து இன்னும் அவர்கள் மீளவில்லை. அவர்களுடைய கோபம் கிரிக்கெட் வீரர்கள் மீது இன்னும் கனலாகவே எரிந்து கொண்டிருக்கிறது.

இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டுக்கு மக்கள் வழங்கிவரும் அதிகப்படியான ஆர்வமும், ஆராதனையும் விளையாட்டின் தன்மையை மாற்றிவிட்டு ஒரு தேர்வுக்குரிய பதட்டத்தையே வீரர்களுக்கு நல்கி வருகிறது.

தோல்விகளைச் சந்திக்காத விளையாட்டு இருக்க முடியாது. அப்படி ஒரு விளையாட்டு இருந்தால் அதற்கு எந்தவிதமான வரவேற்பும் இருக்கப் போவதில்லை.

மக்களின் உணர்வுகளை வீணாக உசுப்பி விட்டுக் குளிர்காயும் ஊடகங்கள் தங்கள் வர்த்தகப் பெருக்கத்துக்காக தேவையற்ற ஒரு அழுத்தமான சூழலை உருவாக்கி விடுகின்றன. மக்களின் தேவையற்ற பதட்டத்தைத் தணிப்பதற்குப் பதிலாக அவை இன்னும் ஒரு படி மேலே போய் வெறியேற்றுவது தான் வேதனை.

உல்மரின் மறைவுக்குப் பின் பக்கம் பக்கமாக பாராட்டுச் செய்தி வடிக்கும் பலரும் அவர் உயிருடன் இருந்திருந்தால் கிழித்திருப்பார்கள் என்பது தான் நிஜம்.

உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து பாகிஸ்தான் வெளியேறியிருப்பதற்கு இன்சமாம் பகிரங்க மன்னிப்புக் கேட்டிருக்கிறார், நாட்டு மக்களுக்கு!.

உல்மர் எப்படி இறந்தார் என்பதைப் பற்றி பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ள சூழலில், அவர் எப்படி இறந்தாலும் அவருடைய மறைவுக்கு அவர் மட்டுமே காரணமில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்தல் நலம் பயக்கும்.

Advertisements

One comment on “உல்மரின் மறைவு, சில சிந்தனைகள்.

  1. இந்தியாவின் அதிர்ச்சித் தோல்வியில் அகமதாபாதில் அப்பாவி ரசிகர் ஒருவரும் மாரடைப்பால் காலமாகியுள்ளார் என்பது வருத்தத்தையும், கூடவே இனியும் கிரிக்கெட்டை இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s