நோயை நோயால் தீர்க்கலாம் !

doc.jpg
புற்று நோயாளிகளுக்கு ஆனந்தம் தரும் செய்தி ஒன்றை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். அதாவது மீசில்ஸ் என்று ஆங்கிலத்தில் அறியப்படும் தட்டம்மை நோயின் கிருமிகள் புற்று நோயைக் குணப்படுத்தும் என்பது தான் அது.

இந்த கிருமிகளுக்குத் தேவையான cd46 எனப்படும் புரோட்டீன் சத்து இந்த புற்று நோயால் பாதிக்கப்பட்ட கிருமிகளில் இருப்பதால், இந்த அம்மைக் கிருமிகள் புற்று நோய் கிருமிகளை தின்று அதாவது அழித்து உயிர்வாழ்கின்றன. இதன் மூலம் புற்று நோயின் வீரியம் குறைகிறதாம்.

போன் மேரோ எனப்படும் கொடிய புற்று நோயை இந்த கிருமிகள் அழிக்கின்றன என்பது உண்மையிலேயே மருத்துவ உலகில் ஒரு எழுச்சியான கண்டுபிடிப்பாக இருக்கிறது.

ஒரே ஒரு நிபந்தனை. இந்த சோதனைக்கு உட்படுத்தப் படுபவர் இந்த அம்மை நோயால் ஒருமுறையேனும் பாதிக்கப் பட்டவராக இருக்க வேண்டும். அல்லது அம்மை நோய்க்கான தடுப்பூசியை சிறு வயதில் போட்டவராக இருக்க வேண்டும்.