கொசுவைக் கொசுவால் ஒழிக்கலாம்

sh.jpg

அமெரிக்க விஞ்ஞானிகள் சோதனைக்கூடத்தில் கொசுக்களைத் தயாரிக்கிறார்கள். இது என்னடா சோதனை என்று அதிர்ச்சியடையாதீர்கள், இந்த கொசுக்கள் மலேரியாவைப் பரப்பாத கொசுக்களாம்.

உலகெங்கும் மலேரியா நோய்க்கு சுமார் இருபத்தைந்து இலட்சம் பேர் வரை ஆண்டு தோறும் பலியாவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த மலேரியா நோயை ஒழிக்க என்ன செய்யலாம் என்று பலவிதமான யோசனைகள் பரிமாறப்பட்டதில், முள்ளை முள்ளால் எடுப்பது போல கொசுவைக் கொசுவால் ஒழிக்கலாமே என்றும் விவாதிக்கப்பட்டது. அதன் விளைவு தான் இந்த ஆராய்ச்சி.

இந்த ஆராய்ச்சியின் பயனாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்புக் கொசுக்கள் நட்புக் கொசுக்கள் என்று அழைக்கப்படுகின்றன. அப்படீன்னா கடிக்காதான்னு கேக்கக் கூடாது. கடிக்கும் ஆனா நோய் ஏதும் வராது. இந்த கொசுக்களுக்கு ஆயுசு கொஞ்சம் கெட்டி. எனவே காலப்போக்கில் இந்தக் கொசுக்கள் மற்ற கொசுக்களை அழித்து தான் மட்டுமே நிற்கும் என்னும் நிலை உருவாகும்.

மலேரியா போன்ற நோய்க்கிருமிகளைச் சுமந்து வரும் கொசுக்கள் விரைவிலேயே மரணமடைவதால், அந்த இன கொசுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழியும் என்பது அவர்களுடைய கணிப்பு. இன்னும் மூன்று தலைமுறைகளுக்குப் பின் மலேரியாக் கொசுக்களே இருக்காது என்பது அவர்களுடைய கணிப்பு. இனிமே கொசு மருந்துக்கு பதிலா கொசுவை கொண்டு வந்து விடுவாங்களோ ?

எப்படியோ, கொசுக்கள் ஒழிந்தால் சரிதான். அப்படியே கடிக்காத கொசுக்களையும் தயாராக்கினாங்கன்னா ரொம்ப நல்லா இருந்திருக்கும்.

பின் குறிப்பு :- கொசுவுக்கும் ஸ்ரேயாவுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அந்துமணி ஸ்டைலில் ‘ஸ்ரேயாவை நேற்று கொசு கடித்தது’ என்றெல்லாம் சொல்ல மாட்டேன். படத்துக்கும் தகவலுக்கும் சம்பந்தம் இல்லை 🙂