சிவாஜி – பாடல் அலசல்

sivaji3.jpg

திருட்டு விசிடி க்கு விமர்சனம் எழுதுவது போலத் தான் சிவாஜி பாடல் குறித்து எழுதுவதும், எனினும் படைப்பு என்று வருகையில் இந்த பாடலின் வரிகளில் மிளிரும் நளினத்தின் நர்த்தனத்தை எழுதலாம் என்று நினைத்தேன்.

மெல்லிய சாரலடிக்கும் மழையில் சுகமாய் நனைவது போலிருக்கிறது சிவாஜி படத்தின் இந்தப் பாடல். கவித்துவத்தையும் காதலையும் மெல்லிய வார்த்தைகளால் குழைத்துப் பின்னப்பட்டிருக்கும் பாடலை எழுதியது வைரமுத்துவாய் இருக்கலாம் என்பதை ‘உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு’ என்னும் வரிகள் சூசகமாய் உணர்த்துகின்றன.

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது – என்பது கூட வைரமுத்துவின் டச் போல தான் தெரிகிறது. ‘ விண்மீனை ஏன் அழைத்தாய் தலைவா வீட்டில் வைத்து வளர்ப்பதற்கா ?’ என்று ஷங்கரின் ஜீன்ஸ் படத்தில் வைரமுத்து எழுதி நிராகரிக்கப்பட்டு பின்னர் ‘கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை’ என்றானது. அந்த பல்லவியின் வாசம் ‘அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ அது என்னுடன் தேனீர் கொண்டதோ’ எனும் வரிகளில் வீசுவதாலும் இது வைரமுத்துவின் பாடலாய் இருக்கலாம் என்று நம்பச் சொல்கிறது.

சகானா என்னும் வார்த்தைக்கே மெல்லிசை என்பது தான் பொருள் என்று நினைவு.

பாடல்:

சகானா சாரால் தூவுதோ
சகாரா பூக்கள் பூத்ததோ

சகாரா பூக்கள் பூத்ததோ
சகானா சாரால் தூவுதோ

என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ – அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேனீர் கொண்டதோ

கனவோ நிஜமோ
காதல் மந்திரமோ

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

சகாரா பூக்கள் பூத்ததோ
சகானா சாரால் தூவுதோ

சரணம்

பெண்
தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை
இதழ்களில் கடந்துவிடு

உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில்
புலன்களைத் திறந்துவிடு

ஆண்
பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை
பூக்களால் நிரப்பட்டுமா

பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே
வானுக்குள் நடக்கட்டுமா

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது
நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

Advertisements

8 comments on “சிவாஜி – பாடல் அலசல்

  1. கண்டிப்பா சஹானா பாடல் சூப்பர் ஹிட். ஒரு மூன்று முறை கேட்டால் முனுமுனுக்க வைத்துவிடும்…

    Like

  2. //கண்டிப்பா சஹானா பாடல் சூப்பர் ஹிட்//

    நீங்க ஒரு ரஜினி ரசிகர்ன்னு நினைக்கிறேன் 🙂

    Like

  3. அப்ப சரி.. அந்த தளத்துல நான் போனதையும் உங்களுக்கு பின்னூட்டம் போட்டு சொல்ல மாட்டேன்

    சென்ஷி

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s