நெட்டை நிலவே, இரட்டைத் திமிரே – சிவாஜி கலக்கலும், ஷங்கர் கலக்கமும்

ic1.jpg

‘உங்க கம்ப்யூட்டர்ல என்னதாண்டா பண்ணுவீங்க ?’ மணிரத்னத்தின் அசோசியேட் இயக்குனராய் பணிபுரியும் நண்பர் ஒருவரிடம் நேற்று பேசிக்கொண்டிருக்கையில் திடீரென இப்படி கேட்டார்.

என்ன விஷயம் சொல்லுங்க என்றேன்.

இல்லே. இவ்ளோ பாதுகாப்பா வெச்சிருக்கிற மேட்டரையே எப்படியோ இண்டர்நெட்ல புடிச்சு போட்டுடறாங்களே அதான் கேட்டேன் என்றார். ஷங்கர் இந்த பாடல்கள் இணையத்தில் உலவும் செய்தி அறிந்து கடும் அதிர்ச்சியிலும், கோபத்திலும் இருக்கிறாராம். இருக்காதே பின்னே, பல தினசரி நாளிதழ்கள் இதுதான் வாய்ப்பு என்று பாடல்களை பிரசுரம் செய்து பிரபலமாகியும் விட்டன.

எனவே இது சிவாஜி பட பாடல்கள் தானா என்பதைக் குறித்த சந்தேகம் உள்ளவர்கள் அதை விட்டுவிடுங்கள் இப்போது.

வா..ஜி பாடல் அக்மார்க் எ.ஆர்.ரஹ்மான் முத்திரையுடன் வந்திருக்கிறது.

நெட்டை நிலவே
இரட்டைத் திமிரே..

குமரியின் வளங்கள்
குழந்தையின் சிணுங்கல்
முரண்பாட்டு மூட்டை ந

என கவிஞரின் கற்பனைச் சிதறல்களில் பாடலின் சில்மிஷம் சிலிர்க்க வைக்கிறது. இந்த பாடலை எழுதியது வாலி என்பதை அறிய பெரிய ஆராய்ச்சி ஏதும் தேவையில்லை.

வரிகள் அப்படியே வாலி ரகம்.
சற்றும் விலகாத வாலிபக் கரம் !

—————————————–

பிற்சேற்கை ! :- ஆம்பல் மெளவல் ; வாஜி வாஜி…; புன்னகைத் தேன்குளம் ; செயல் புயல் நானடி ; பொன் வாக்கியமே வாய் வாத்தியமே என்னும் வார்த்தை விளையாட்டுகளைப் பார்த்து வாலி என்று நான் முடிவு கட்டியது தப்பாகிப் போயிருப்பதாக நண்பர் ஒருவர் தொலைபேசிச் சொன்னார். உண்மையில் இந்தப் பாடலை எழுதியது வைரமுத்துவாம்

——————————-

பாடல்

ஆம்பல் ஆம்பல்
ஆம்பல் ஆம்பல்

ஆம்பல் ஆம்பல்
ஆம்பல் ஆம்பல்

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ மெளவல் மெளவல்

உன் பூவிழி போர்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் மலருமடி
உன் கால்கொலுசொலிகள் போதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி

வா..ஜி, வா ஜி, வா ஜி
என் ஜீவன் நீ சிவாஜி
வா..ஜி, வா ஜி, வா ஜி
என் ஜீவன் நீ சிவாஜி

அன்பால் ஆணையிடு
அழுகை சாகவிடு

உன் ஆண் வாசனை
என்மேனியில்
நீ பூசிவிடு

அடி நெட்டை நிலவே
இரட்டைத் திமிரே
நெஞ்சில் முட்டிக் கொல்லு

வா..ஜி, வா ஜி, வா ஜி
என் ஜீவன் நீ சிவாஜி
வா..ஜி, வா ஜி, வா ஜி
என் ஜீவன் நீ சிவாஜி

ஆண்:

ஒரு வெண்ணிலவை
மணக்கும் மன்மதன் நான்

என் தேனிலவே ஒரு நிலவுடன் தான்
அவள் யாருமில்லை இதோ இதோ இவள் தான்

பெண்
புன்னகைப் பேரரசே
தேன் குளத்துப் பூவுக்குள் குளிப்பீரா ?

புன்னகைப் பேரரசே
தேன் குளத்துப் பூவுக்குள் குளிப்பீரா ?
விடியும் வரை மார்புக்குள் இருப்பீரா

விழிகளுக்குள் சிறு துயில் கொள்வீரா

ஆண்:
பெண்களிடம் சொல்வது குறைவு
செய்வது அதிகம்
செயல் புயல் நானடி

வா..ஜி, வா ஜி, வா ஜி
என் ஜீவன் நீ சிவாஜி
வா..ஜி, வா ஜி, வா ஜி
என் ஜீவன் நீ சிவாஜி

ஆண்:
பொன் வாக்கியமே
வாய் வாத்தியமே

உன் வளைவுகளில் உள்ள நெழிவுகளில்
வந்து ஒளிந்துகொண்டேன் சுகம் சுகம் கண்டேன்

பெண்:
ஆனந்த வெறியில் நான் ஆடைகளில்
பூமியை முடிந்து கொண்டேன்

விண்வெளியில் ஜதி சொல்லி ஆடி
வெண்ணிலவை ஜகதியும் ஆக்கிவிட்டேன்

ஆண்;
அடடடா குமரியின் வளங்கள்
குழந்தையின் சிணுங்கல்
முரண்பாட்டு மூட்டை நீ.

பெண்:
வா..ஜி, வா ஜி, வா ஜி
என் ஜீவன் நீ சிவாஜி
வா..ஜி, வா ஜி, வா ஜி
என் ஜீவன் நீ சிவாஜி

7 comments on “நெட்டை நிலவே, இரட்டைத் திமிரே – சிவாஜி கலக்கலும், ஷங்கர் கலக்கமும்

 1. இந்த பாடலை எழுதியது நா.முத்து குமார் அவர்கள். இந்த பாடல் தான் படத்தின் முதல் பாடல். முதல் முறையாக ஹரிஹரன் ரஜினி படத்தின் முதல் பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை புனே அருகிலுள்ள மஹாபலேஷ்வரில் தொடர்ந்து 9 நாட்கள் படமாக்கினர். நயந்தாரா இந்த பாடலில் ரஜினியுடன் ஆடியுள்ளார்.

  Like

 2. மன்னிக்கவும். முதலில் நான் குழம்பி விட்டேன். இந்த பாடலை எழுதியது வைரமுத்து. நான் கூறிய (முத்துகுமார் எழுதி, நயந்தாரா ஆடி, மஹாபலேஷ்வரில் எடுத்த) பாடல், பல்லேலக்கா..பல்லேலக்கா.. . அந்த பாடல் தான் படத்தின் முதல் பாடல். இந்த விஷயம் நான் சிவாஜி படப்பிடிப்பு குழு புனே வந்திருந்த போது அவர்களிடமிருந்து கறந்தது. இந்த படத்தில் சிவாஜி கல்லூரியாக வரும் இடம் புனேயில் உள்ளது. அந்த காட்சிகள் சிறப்பாக வரும் என்று நம்புகிறேன். மிகவும் அழகான இடம்.

  Like

 3. நன்றி குரு. நான் அதற்கு முன்பே முத்துகுமாரிடம் பேசி உண்மையை வாங்கிவிட்டேன் 🙂

  Like

 4. ஆஹா.. எனக்குத் தெரியும் இது வைரமுத்து தான்னு.. நான் எங்கேயும் படிக்கல பாக்கல.. ஆனாலும் வைரமுத்துவின் ரசிகன் ற முறையில என் உள்மனசுக்கு உடனே தோணின விஷயம் இது.

  சேவியர் உங்க பதிவில நான் வாலின்னு படிச்சு ஷாக் ஆனேன்..கூட நீங்க அவரோட வழக்கமான எதுகை மோனை பாணியில இருக்கிற வார்த்தைகளை வேற உதாரணமாக் காட்டிட்டீங்க.. அப்புறம் உங்களோட திருத்தத்தைப் பார்த்து சந்தோஷமா கீழ படிச்சுட்டே வந்தா குட்டையக் குழப்பிட்டாரு குரு!! அதுக்கப்புறம் அவரும் தெளிஞ்சு நம்மளையும் தெளிய வச்சிட்டாரு.. ஹி ஹிஹி..

  என்னுடைய அனுமானங்களைச் சொல்லவா (நான் எப்படி வைரமுத்து தான்னு உறுதியா நெனச்சேன்னு)

  “குமரியின் வளங்கள் குழந்தையின் சிணுங்கல் முரண்பாட்டு மூட்டை நீ”

  “விடியும் வரை மார்புக்குள் இருப்பீரா” (இதைத் தழுவி முன்பே சில பாடல்களை எழுதியுள்ளான்.. “கூரான ஒன் நெஞ்சில் குதிச்சு அங்க குடியிருப்பேன் – முதல்வன் படத்தில்)

  “வளைவுகளில் உள்ள நெளிவுகளில்” (ரிதம் படத்தில் வரும் நதியே நதியே பாடலில் வரும் வரிகளும் இதற்கு ஒப்பானவையே).

  என்னுடைய பொழுதுபோக்குகளில் பாடல்வரிகளைத் தட்டச்சுவதும் ஒன்று சேவியர்..

  நேரம் கிடைப்பின், http://thiraippadap-paadal-varigal.blogspot.com/2007/04/blog-post_10.html இந்தச்சுட்டியில் இதே பாடல் வரியினைக் காணலாம்… ஏனைய பாடல்களின் வரிகளை என்னால் இயன்ற அளவு வலையேற்றி வருகிறேன்.

  Like

 5. மன்னிக்கவும்.. தட்டச்சுப் பிழை ஏற்பட்டு விட்டது..

  “விடியும் வரை மார்புக்குள் இருப்பீரா” (இதைத் தழுவி முன்பே சில பாடல்களை எழுதியுள்ளார்.. “கூரான ஒன் நெஞ்சில் குதிச்சு அங்க குடியிருப்பேன்” – முதல்வன் படத்தில் ‘அழகான ராட்சசியே’ பாடல்)

  Like

 6. சரிதான் ராகவன். “குமரியின் வளங்கள் குழந்தையின் சிணுங்கல் முரண்பாட்டு மூட்டை நீ” இந்த வரியே போதும் வைரமுத்துவை அடையாளம் காண..

  ஆனால் என்ன வாஜி வாஜி வாஜி.. எல்லாம் கொஞ்சம் வாலி ..வாலி…வாலி என்று யோசிக்க வைத்தன அவ்வளவே 🙂

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s