சிவாஜி – சாதனைகள் !

sivaji-15.jpg
ரஜினியின் சிவாஜி ஆடியோ உலகில் ஒரு சபாப்தத்தைப் படைத்திருக்கிறது. ஒரே நாளில் அனுப்பிய அனைத்து ஆடியோக்களும் விற்பனையாகித் தீர்ந்து விட ஏ.வி.எம் குஷியாகி இருக்கிறது.

சென்னை ரிச்சி தெருவில் ஆடியோ சிடிக்களை வாங்க காலை ஐந்து மணிக்கே கூட்டம் முண்டியடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஏற்கனவே இணையத்திலும், திருட்டு ஆடியோவிலும் எல்லா பாடல்களும் வெளியானபின்பும் சிவாஜிக்கு இப்படி ஒரு மவுசு இருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் ரஜினி தான்.

ஏ.வி.எம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளியான சில மணி நேரங்களிலேயே இரண்டு இலட்சம் சி.டிக்கள் விற்பனையானதாகத் தெரிவிக்கிறது. ஏற்கனவே ரிங்டோ னின் மூலம் நல்ல லாபம் சம்பாதித்த தயாரிப்பாளர்கள் இப்போது ரிங்டோ னுடன் சிவாஜியின் ‘பஞ்ச்’ டயலாக் களையும் விற்பனை செய்ய இருக்கிறார்கள்.

ஏற்கனவே முதல் வாரத்துக்கான காட்சிக்குரிய டிக்கெட் கூப்பன்கள் எல்லாம் விற்றுத் தீர்ந்திருக்கின்றன.

இப்படி கோடிகளைக் குவிக்கும் இந்தப் படத்தின் மூலம் ரஜினிக்குக் கிடைக்கப்போகும் பணம் இருபத்து ஐந்து கோடியாம். இந்தியாவிலேயே மன்னிக்கவும் ஆசியாவிலேயே அதிகம் சம்பாதிக்கும் நடிகர் என்னும் பெயர் இதன் மூலம் ரஜினிகாந்திற்குக் கிடைத்திருக்கிறது.

சிவாஜி படத்திலேயே சிவாஜிகணேசன் போல தோன்றுகிறாராம் ரஜினி ! எம்.ஜி.ஆர் போல போலவும் ஒரு காட்சிக்கு வருகிறாராம். தெலுங்கு பதிப்பில் என்.டி.ராமராவ், சிரஞ்சீவி கெட்டப்களில் கலக்குகிறாராம் !

இதற்கிடையில் சூதாட்டத்திலும் ரசிகர்கள் ஈடுபடுகிறார்களாம். என்ன சூதாட்டம் என்கிறீர்களா ? ரஜினி படம் மே மாதம் எட்டாம் தியதியா, பதினான்காம் தியதியா, பதினேழாம் தியதியா என்று சூதாட்டமாம்

சர்வம் சிவாஜி மயம் !