என்று ஒழியும் இந்த ஜடேஜா ஜம்பம்

ajay.jpg

கிரிக்கெட் தொடர்பான உரையாடல்களைக் கேட்கும்போது பல வேளைகளில் எரிச்சல் தான் ஏற்படுகிறது. இந்தியா தோற்றுப் போனதனால் அல்ல. தோல்வி என்றைக்குமே முற்றுப்புள்ளி அல்ல என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

கிரிக்கெட்டில் இந்தியா தோற்றுப் போனதற்காக நான் புலம்பியதும் கிடையாது. ஏனெனில் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை விட முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய பல விஷயங்கள் உள்ளன என்பதே எனது கருத்து.

ஆனால் ஜடேஜா போன்ற சூதாட்டச் சூறாவளியில் சிக்கி இந்தியாவின் மானத்தை வாங்கியவர்களை பிரபலமான ஆங்கில தொலைக்காட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு உட்கார வைத்து பேசுவதும், அதற்கு அவர் கடவுளிடமிருந்து நேரடியாக வந்திறங்கியவர் போல பேசுவதும் எரிச்சலின் உச்சக் கட்டம்!

பங்களாதேஷிடம் தென்னாப்பிரிக்கா தோற்றுப் போனதால் தென்னாப்பிரிக்காவின் மனநிலை எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு ஜடேஜா, “கேப்டனை மாற்றுங்கள், பயிற்சியாளரை மாற்றுங்கள், புதிய மக்களை மாற்றுங்கள் என்றெல்லாம் கோஷம் இடுமளவுக்கு அவர்கள் பக்குவற்றவர்கள் அல்ல” என்று பேச ஆரம்பித்தார். உடனே சானலை மாற்றி விட்டேன்.

இதே ஜடேஜாவிடம் உல்மர் மரணம் குறித்து சில வாரங்களுக்கு முன் ஒரு கேள்வி கேட்டார்கள். ‘எப்படி சூதாட்டக் காரர்கள் விளையாட்டு வீரர்களை அணுகுகிறார்கள் ?’ என்று. ஒரு வினாடி ஜடேஜாவின் முகத்தில் ஈயாடவில்லை. காரணம் நமக்குத் தெரிந்தது தான். அதற்கு நியாயமாக ஜடேஜா செயல்முறை விளக்கம் ஒன்றையே காண்பித்திருக்க வேண்டும். ஆனால் அப்படியெல்லாம் செய்யாமல் அதற்கும் ஒரு பரிசுத்தவானின் பதிலையே கொடுத்தார். சிரிக்காமல் என்ன செய்ய ?

விளையாட்டோ , பணியோ எல்லாவற்றிற்கும் ஒரு கண்ணியமும், ஒரு நேர்மையும் இருக்கிறது. ஊழல் மந்திரியை உட்கார வைத்து ஊழலற்ற சமூகம் குறித்து விவாதிப்பதும், ஜடேஜா போன்றவர்களை வைத்துக் கொண்டு சூதாட்டம் பற்றி விவாதிப்பதும் ஒன்று தான்.

ஊடகங்கள் இத்தகைய மனிதர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கொண்டு நியாயமாகவும், உண்மையாகவும் இந்திய அணிக்காக விளையாடியவர்களையோ, உண்மையிலேயே விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஆர்வலர்களில் ஒருவரையோ விவாதத்தில் கலந்து கொள்ளச் செய்வது தான் விளையாட்டிற்கும், விளையாட்டு ரசிகர்களுக்கும் தரும் மரியாதையாக இருக்க முடியும்.

Advertisements

9 comments on “என்று ஒழியும் இந்த ஜடேஜா ஜம்பம்

 1. அருமையான பதிவு. இதே போல் இந்த தொலைக்காட்சிகள் தங்கள் தேவைக்கு ஏற்ப செய்திகளுக்கு முக்கியத்வம் கொடுப்பதை பற்றி கூட தாங்கள் ஒரு பதிவு போடலாம்.

  Like

 2. நன்றி அறிவு. தொலைக்காட்சிகள் என்றல்ல பத்திரிகைகளும் அப்படித்தான். மத்திய பட்ஜெட் வெளியானபோது “நாய் பிஸ்கட் விலை குறைகிறது” என்றும், மாநில பட்ஜெட் வெளியானபோது “விபூதி விலை குறைகிறது” என்றும் தங்கள் குழுப் பெருமையையும், சார்பு நிலையையும் சற்றும் சமூக பார்வையற்று தலைப்புச் செய்தியாகப் போடும் தினசரிகளுக்கு இடையே தான் வாழ வேண்டியிருக்கிறது.

  Like

 3. இதைப் படிக்கும் போது

  நேற்று sun TVயில் போட்ட Top 10(8.30PM Sunday)தான் நினைவுக்கு

  வருகிறது

  எல்லாருமே இந்திய அணியை கேவலப் படுத்துகிறார்கள்

  ganguly கருங்காலி யாம்
  sehwag டக்வாக் காம்
  இன்னும் நிறைய வந்த்து….

  பார்க்க மன்மில்லாமல்

  எழுந்து வந்துவிட்டேன்

  தப்பை பெரிது படுத்துவதை விட
  அதை திரும்ப செய்யாமல்
  இருப்பது உத்தமம்

  Ajay Jadeja போன்றவர்களை எல்லாம்
  Teamkul வைத்ததற்கு
  இதுவும் வேண்டும்
  இன்னமும் வேண்டும் தான்

  Like

 4. நானும் ஜடேஜாவைப் பார்த்து கடுப்பானேன். அவரது அலட்டலும் உத்தமன் போன்ற பேச்சும் அருவெறுப்பாகத்தான் இருந்தன.

  Like

 5. //நானும் ஜடேஜாவைப் பார்த்து கடுப்பானேன்//

  நான் மட்டும் தான் கடுப்பானேனோன்னு நினைச்சேன். இந்த பதிவைப் போட்டபிறகு தான் தெரிந்தது நிறைய பேர் கடுப்பாக தான் இருக்கிறார்கள் என்று.

  Like

 6. /*சேவியருக்கு*/

  சரியாச் சொன்னீங்க சேவியர். கிரிக்கெட் கிட்டத்தட்ட அரசியல் மாதிரி ஆகிறது கடுப்பேத்துற விஷயம் தான். ஜடேஜாவெல்லாம் போய் பேட்டி எடுக்கலைன்னு யாரு அழுதா?

  /*ப்ரியாவுக்கு*/

  //தப்பை பெரிது படுத்துவதை விட
  அதை திரும்ப செய்யாமல்
  இருப்பது உத்தமம்//

  விளம்பர படத்துல நடிக்கறதுக்கு கிரிகெட் வாரியம் பயங்கர விதிமுறைகள் விதிச்சிட்டாங்களாம். ஆனால் நம்ம ஆளுங்க அத எல்லாம் நீக்கக் கோரி கேட்டிருக்காங்களாம். அவங்க யாரும் தோற்றதைப் பத்தி கவலைப்படற மாதிரி தெரியல. இதுக்கெல்லாம் முடிவு எப்ப வருமோ?

  Like

 7. //நம்ம ஆளுங்க அத எல்லாம் நீக்கக் கோரி கேட்டிருக்காங்களாம். அவங்க யாரும் தோற்றதைப் பத்தி கவலைப்படற மாதிரி தெரியல. //

  எல்லாருக்குமே பணம் சம்பாதிக்கும் நோக்கம்

  மட்டுமே இருப்பது போல் தோன்றுகிறது

  அவங்களை சொல்லி குற்றமில்லை

  எல்லாம் நம்மளை சொல்லனும்

  cricketக்கு ரொம்பவே முக்கியதுவம் கொடுக்கறது நாம தானே

  Like

 8. ம்ம்ம்ம் – வேறு வழி இல்லை நமக்கு – பதிவு போடுவதும் மறுமொழி இடுவதும் தவிர நம்மால் என்ன செய்ய முடியும்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s