ரொமாண்டிக் ராஸ்கல் வைரமுத்துவும், ராட்சஸன் இளையராஜாவும்

spb.jpg

விஜய் தொலைக்காட்சியில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நான் பார்ப்பதில்லை என்பதற்கு நிகழ்ச்சிகளின் தரத்தைத் தவிர வேறெந்த காரணமும் இல்லை.

மற்ற சானல்களில் நகைச்சுவைப் பஞ்சம் வரும்போது ஜெயா தொலைக்காட்சி செய்திகளை அவ்வப்போது பார்ப்பது உண்டு. அங்கே தான் பலாப்பழம் சரியாக பழுக்கவில்லை என்றால் கூட திமுக கவுன்சிலர் தான் காரணம் என்பார்கள். வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் இல்லையா 🙂

கடந்தவாரம் இரவு பதினோரு மணிக்கு மேல் சும்மா சானலை திருப்பிக் கொண்டிருந்தபோது தட்டுப்பட்டது எஸ்.பி.பி நடுவராக இருந்த ‘பாட்டு பாடுங்கள்’ நிகழ்ச்சி ஒன்று ஜெயா தொலைக்காட்சியில்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்துவதற்கு என்னென்ன திறமைகள் வேண்டும் என்பதை எஸ்பிபியிடமிருந்து மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். மிக மிகத் தெளிவான தமிழ் உச்சரிப்பும், நிகழ்வுகளோடு இணைந்து போகும் மெல்லிய நகைச்சுவையும், சற்றும் கர்வத்தின் கறை படியாத தாழ்மையுமாக அசத்தினார் எஸ்பிபி.

‘தும்மும் பொழுதிலும் இம்மி அளவிலும் பிரியாதீக’ என்ற வரிகளைப் பாடிய பெண்ணிடம் எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார் வைரமுத்து ? அவர் எழுதிய பாடலை ஒரு வார்த்தை, எழுத்து தப்பாகப் பாடினாலும் விட மாட்டார். சரியாகப் பாடும் வரை கூடவே இருப்பார். அவருடைய வார்த்தைகளில் காதல் ரசம் மிளிரும்.. அவன் ஒரு ரொமாண்டிக் ராஸ்கல் என்று செல்லமாய் சொல்ல வியந்து போனேன்.

இளையராஜாவைப் பற்றிக் குறிப்பிடுகையில், அவர் இங்கே இருப்பது நாம் செய்த புண்ணியம்மா.. அவன் ஒரு ராட்சசன் 🙂 என்று சிரித்தார்.

ஒவ்வொரு பாடல் பாடும் போதும் அவருடைய வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களை நினைவு கூர்ந்து பார்வையாளர்களைப் பரவசப் படுத்திய எஸ்பிபி கடைசியில் அந்த நிகழ்வுகளைத் திரும்பிப் பார்க்க ஒரு வாய்ப்புக் கொடுத்த இளம் பாடகர்களுக்கு நன்றி செலுத்தியது வசீகரித்தது.

‘ டமில் ஈஸ் சச் அ நைஸ் லாங்குவேஜ் ‘ என்று தமிழைக் கொல்லும் நவ நாகரீக மங்கையர் இல்லை, உச்சஸ்தாயியில் கத்தும் இளைஞர் பட்டாளம் இல்லை.
நிகழ்ச்சியில் பந்தா என்பதே சிறிதும் இல்லை. பாடல் நடத்த மட்டுமல்ல, நிகழ்ச்சிகளை நடத்துபவர்களுக்கு பாடம் நடத்தவும் தேவை எஸ்.பி.பி.

Advertisements

13 comments on “ரொமாண்டிக் ராஸ்கல் வைரமுத்துவும், ராட்சஸன் இளையராஜாவும்

 1. இதே போல மக்கள் தொலைக்காட்சியும் நல்ல தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. அவர்கள் செய்திகள் கூட வேற்று மொழி கலக்காத தமிழில் உள்ளது. அது குறித்து தங்களை போன்றவர்கள் எழுதினால் நல்லது

  Like

 2. இந்த நிகழ்ச்சியினை பாலா மிக நன்றாகவே நடத்துகிறார். இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் மிக ஆரோக்கியாமானவை.

  Like

 3. I also felt very happy when I watched. But i could not see that often. I think none other can be suitable other than him.

  Like

 4. தொலைகாட்சி நிகழ்ச்சிகளை அதிகம் பார்ப்பதில்லை என்றாலும் பாலாவின் இந்த நிகழ்ச்சியை ஒருமுறை காணும் வாய்ப்பு ஏற்பட்டு இப்பொழுது அது தொடர்கிறது. மிகவும் நல்ல நிகழ்ச்சி. கடந்த வாரத்தில் பாலாவுடன் நடுவராக இருந்த பழம்பெரும் இசை கலைஞர் இந்த வார நிகழ்ச்சி முதல் நாள் மரணமடைந்து விட்டார் என பாலா மிகவும் வருத்தத்துடன் கூறிய போது நெகிழ்ச்சி ஏற்பட்டது. அவரை நிகழ்ச்சிக்கு வரவழைத்து பாலா சரியான முறையில் கெளரவித்து விட்டார் என்றே தோன்றியது.

  Like

 5. //இதே போல மக்கள் தொலைக்காட்சியும் நல்ல தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது //

  உண்மை. காலையில் தினமும் மக்கள் தொலைக்காட்சி தான் பார்க்கிறேன் 🙂

  Like

 6. //இந்த நிகழ்ச்சியினை பாலா மிக நன்றாகவே நடத்துகிறார். இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் மிக ஆரோக்கியாமானவை //

  சரியா சொன்னீங்க

  Like

 7. // also felt very happy when I watched. But i could not see that often. I think none other can be suitable other than him.//

  நானும் ஒரு தடவை தான் பார்த்தேன். மறுபடி பார்க்கும் வாய்ப்பு வாய்க்கவில்லை. உங்கள் கருத்துக்கு மாற்றுக் கருத்து எனக்கில்லை.

  Like

 8. //கடந்த வாரத்தில் பாலாவுடன் நடுவராக இருந்த பழம்பெரும் இசை கலைஞர் இந்த வார நிகழ்ச்சி முதல் நாள் மரணமடைந்து விட்டார் என பாலா மிகவும் வருத்தத்துடன் கூறிய போது நெகிழ்ச்சி ஏற்பட்டது. அவரை நிகழ்ச்சிக்கு வரவழைத்து பாலா சரியான முறையில் கெளரவித்து விட்டார் என்றே தோன்றியது.//

  ஓ.. இந்த விஷயம் எனக்குத் தெரியாது. நீங்கள் சொல்வது உண்மை தான்.

  Like

 9. ஓரளவு நல்ல தமிழில் நிகழ்ச்சிகளைக் காண மக்கள் தொலைக்காட்சியைக் நாடலாம்.

  Like

 10. //ஓரளவு நல்ல தமிழில் நிகழ்ச்சிகளைக் காண மக்கள் தொலைக்காட்சியைக் நாடலாம்.//

  ஆமா… ஆனா மக்கள் தொலைக்காட்சி ‘பெரிய’ நஷ்டத்தில் இயங்குவதாக அங்கே வேலை செய்யும் ஒரு எழுத்தாளர் கூறினார் !

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s