மன அழுத்தமும், குறை பிரசவமும்

aa.jpg
அதிக மன அழுத்தத்தில் இருக்கும் பெண்கள் குறை மாதக் குழந்தைகளைப் பிரசவிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக லண்டன் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவலை அளித்திருக்கிறார்கள்.

அத்தகைய மன அழுத்தமுடைய தாய்மார்களின் குழந்தைகளுக்கும் அதன் தாக்கம் பரவி சிறுவயதிலேயே பலவிதமான நோய்களுக்கு அவர்களை இட்டுச் செல்லும் என்றும். குழந்தைகளின் மூளை வளர்ச்சியைக் கூட மன அழுத்தம் பாதிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மன அழுத்தமற்ற நல்ல சூழலில் தாய்மை நிலையிலிருப்போர் இருக்க வேண்டியது அவசியம். அவர்களுக்குரிய பாதுகாப்பு உணர்வை குடும்பங்கள் வழங்க வேண்டும். பிடித்தமான பொழுது போக்குகளில் தாய்மை நிலையிலுள்ளோர் முழு விருப்பத்துடன் ஈடுபட்டு மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என்பன போன்ற அறிவுரைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்