IT கம்பெனிகளின் திரை மறைவு வேலைகள்

it.jpg

ஐடி துறையில் இருப்பவர்களில் பலருக்கே தெரிந்திருக்க நியாயமில்லை ஐடி கம்பெனிகளில் நடக்கும் திரைமறைவு வேலைகளில் பல.

சமீபத்தில் வேலை மாறுதல் விஷயமாக நண்பன் ஒருவன் வேறு கம்பெனிகளில் பணிபுரியும் நண்பர்கள் வாயிலாக புதிய வேலைக்கு முயன்றபோது தான் இந்த உண்மை தெரிய வந்தது.

அவன் நல்ல உயர்ந்த பதவியில் இருப்பவன், திறமையானவன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஐடி கம்பெனிகளின் HR பிரிவினர் கன்சல்டன்சிகளின் கைகோர்த்துக் கொண்டு பல கோடிகளைச் சுருட்டும் திட்டத்துடன் இருப்பதால் கன்சல்டன்சிகளின் வழியாக செல்லாவிட்டால் நேர்முகத் தேர்வுக்கே அழைக்கப்படுவதில்லை எனும் சூழல்.

பல அலுவலகங்களில் அவனுடைய அனுபவம், மற்றும் தொழில் நுட்பப் பிரிவில் இடம் காலி இல்லை என்றே திருப்பி அனுப்பப்பட்டான். பிறகு தான் தெரியவந்தது இந்த கன்சல்டன்சிகளின் கைங்கர்யமும், HR மக்களின் உள் நோக்கமும்.

அதன்பின் ஒரு வேலை வாங்கித் தரும் இணையதளத்தில் அவனுடைய ரெஸ்யூம் போட்டான். வந்து குவிந்தன அழைப்புகள். எங்கெல்லாம் வேலை இல்லை என்று சொன்னார்களோ அங்கெல்லாம் அவனுக்கு நேர்முகத் தேர்வுகள் நடந்தன. வேலையும் பல இடங்களில் அவனுக்குக் கிடைத்தது.

இது குறித்து ஒரு HR நண்பரிடம் பேசியபோது அவர் சொன்னாராம், கன்சல்டன்சிகளுக்கும் அவர்களுக்கும் இடையே நடக்கும் ரகசிய பேரங்களும், இதனால் புரளும் கோடிக்கணக்கான பணமும் !

கன்சல்டன்சிகள் தங்களிடம் இருக்கும் திறமையற்ற நபர்களைக் கூட போலியான அனுபவ சான்றிதழ்களுடன் அனுப்பி வேலை பெற்றுக் கொடுத்து, கம்பெனியிடமிருந்து கணிசமான தொகையைப் பெற்று அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை HR மக்களுக்கு கொடுத்து வருகின்றனராம்.

பின்புல விசாரிப்புகளில் கூட இத்தகைய மக்கள் மாட்டுவதில்லை. காரணம் கன்சல்டன்சிகள் அதற்கும் ஏற்பாடு செய்கின்றனவாம் !

நேரடியா ஆண்டவன் கிட்டே போனா அருள் கிடைக்காது, பூசாரி தட்டிலே பணத்தைப் போடு என்னும் கணக்காக வெளியே தெரியாமல் நடக்கும் இந்த திரைமறைவுச் சமாச்சாரங்களை நண்பன் புட்டுப் புட்டு வைத்தபோது அதிர்ச்சியும், ஆச்சரியமும், இயலாமையும் கலந்த மனநிலையில் கேட்டுக் கொண்டிருந்தேன் நான் !

37 comments on “IT கம்பெனிகளின் திரை மறைவு வேலைகள்

  1. enna consultancynu konjam sollunghalen.enga veetlaye oruthar irukkar thakuthi irunthum interview call onnu kooda varathila.namma senthazal paniyila sollanuna konjam kayamaithanam panniyavathu avara konjam munnuku kondu varunmthan kekkeren.

    saravanan

    Like

  2. உண்மை .. உண்மை .. உண்மை … இவர் சொல்வதெல்லாம் உண்மை
    எங்க கம்பெனில கூட இப்படிதான் நடக்குது

    Like

  3. நீங்க சொல்றது உண்மதான். வளர்ற (அல்லது) வளந்த எல்லா துறையிலயுமே இந்த மாதிரி சில்றப் பசங்க “பெத்த” லாபம் பாக்கிறது ரொம்பவே சாதாரணமான ஒன்னாயிடுச்சு.

    இதுக்கே இப்படி வருத்தப்ப்டுறீங்களே, இங்க அமெரிக்காவில கன்சல்டிங் கம்பெனிங்கிற பேர்ல சிலர் நடத்துற கூத்திருக்கே… சொல்ல ஆரம்பிச்சா “ப்ளாஹ்”ஹே கொள்ளாது போங்க!

    Like

  4. This is not a new one. When I was searching job, I also faced a lot of persons like this. I got suffered a lot by them. Not only this but also these consultancy peoples are cheating without getting a Job if we give mony before itself. Some of my friends suffed like this. Some peoples thrown out after joined in the companies like this. So Please aware of this.

    Like

  5. இவ்ளோ நாளா இந்த உண்மை தெரியாம போச்சே

    இதுக்கு என்ன தான் வழி???

    Like

  6. //enna consultancynu konjam sollunghalen.enga veetlaye oruthar irukkar thakuthi irunthum interview call onnu kooda varathila.namma senthazal paniyila sollanuna konjam kayamaithanam panniyavathu avara konjam munnuku kondu varunmthan kekkeren.

    saravanan
    //

    கொஞ்சம் அனுபவம் இருந்தால் ஒரு job portel ( naukri, timesjob etc ) போதும் !

    Like

  7. //உண்மை .. உண்மை .. உண்மை … இவர் சொல்வதெல்லாம் உண்மை
    எங்க கம்பெனில கூட இப்படிதான் நடக்குது//

    வீட்டுக்கு வீடு வாசப்படி !

    Like

  8. //உண்மைதான். இது மட்டுமல்ல. இன்னும் நிறைய தகிடு தத்தங்கள் கூட நடக்கின்றன!!!;(//

    உண்மை தான், HR போல இன்னொரு முக்கியமான இடம் Facilities

    Like

  9. //இங்க அமெரிக்காவில கன்சல்டிங் கம்பெனிங்கிற பேர்ல சிலர் நடத்துற கூத்திருக்கே… சொல்ல ஆரம்பிச்சா “ப்ளாஹ்”ஹே கொள்ளாது போங்க!
    //

    ஓ… சுருக்கமாவாச்சும் சொல்லுங்களேன் …

    Like

  10. //This is not a new one. When I was searching job, I also faced a lot of persons like this. I got suffered a lot by them. Not only this but also these consultancy peoples are cheating without getting a Job if we give mony before itself. Some of my friends suffed like this. Some peoples thrown out after joined in the companies like this. So Please aware of this.//

    பகிர்ந்து கொண்டமைக்கு மனமார்ந்த நன்றிகள் ரமேஷ்.

    Like

  11. அமெரிக்காவில 99% எந்த ஒரு கம்பெனியும் நேரடியா வேலைக்கு ஆள் எடுக்கறது கிடையாது. எல்லா கம்பெனிக்கு ஒரு நேரடி கன்ஸல்டிங் கம்பெனி உண்டு… அவங்க மூலமாத்தான் எல்லாம் நடக்கும். ஆனா இங்க ஏப்பம் விடுறது H.R இல்ல முழுக்க முழுக்க கன்ஸல்டிங் கம்பெனிக்கள் தான்.

    ஒருத்தருக்கு வேல கிடைக்குதுன்னா அவருக்கு வர்ற ஒரு மணி நேர சம்பலத்துல ஒரு சிரு பங்கு அந்த கன்ஸல்டிங் கம்பெனிக்கு போய் சேருது. ஒரு மணி நேரத்துக்கு எவ்வளவு கிடைக்குதுன்னு உங்களுக்கு தெரிஞ்சா நல்லது. இல்லாட்டி நடுவுல இருக்குற கன்ஸ்.. எவ்வளவு எடுக்குறான்னு ஆண்டவனுக்கு தான் தெரியும். இன்னொரு முக்கியமான விஷயம் இங்க இருக்கிற முக்கால் வாசி கன்ஸல்டிங் கம்பெனிக்கள் நம்ம ஆளுங்களோடங்கிறதுதான். இதபத்தி விரிவா ஒரு பதிவு போட முயற்சிக்கறேன்.

    Like

  12. 3 years back I heared the same but i didn’t beleive. I thought only honest people working in IT. Later i heared that from my fresher friend that there is a chance of back door entry in IT field.
    mmmmmm………vara vara IT companies Goverment office maathri aaiduchu…..
    paavam intha vellakaaranga ithellaam theriyaama paisa alli kotraanga.

    Like

  13. அய்.டி நிறுவனங்களில் ஒரு லாரி தண்ணீருக்கு கூட 50 ரூபாய் கையூட்டு (Facilitiesக்கு) கொடுக்கவேண்டும். இந்த தகவல் ஒரு மளிகை கடையில் கிடைத்தது. அந்த அளவுக்கு அய்.டி நிறுவனங்களில் பெயர் நாறுகிறது.

    Like

  14. எனக்கு ஒரு விசயம் புரியலை.. இந்த கன்சல்டிங் நிறுவனங்களுக்கு உங்க நண்பர் ஏதும் பணம் கொடுத்தாரா? நம்மகிட்டேர்ந்து பணம் வாங்கி, நிறுவனங்களிடமிருந்தும் பணம் வாங்கிகிட்டிருக்காங்களா? ஏன் கேட்கிறேன்னா, என்னுடைய தனிப்பட்ட அனுபவம் என்னன்னா, consultants உக்கு நான் ஏதும் பணம் கொடுத்ததில்லை. ஆனா, அவங்க மூலம் தான் என் ரெஸ்யூம் கம்பனிகளுக்குப் போகுது. நம்ம அனுபவம், கல்வி போன்ற விசயங்களை நமக்குத் தெரியாமயே மாத்திக் கொடுப்பது, போன்ற வேலைகள் செய்யாம இருந்தா, இதுல ஏதும் பிரச்சனையே இல்லையோன்னு தோணுது..

    infact, நம்ம பேசத் தயங்கக் கூடிய சம்பளம், முதலான மேல்விவரங்களை இவங்களே நமக்காக பேசி வாங்கிக் கொடுப்பதும் உண்டு.. இதில் என்ன தப்பு இருக்குன்னு புரியலை.. இதுவும் இன்னுமொரு துறை, இன்னுமொரு வருமானம். இந்தியாவில் இருக்கும் ஆள்பலத்துக்கு இப்படி எத்தனை வேலை வந்தாலும் நல்லது தானே?

    Like

  15. பொன்ஸ்,
    நீங்கள் நேரடியாக HR ஐ அணுகி வேலையில் அமர்ந்தால் புதிய நிறுவனத்திற்கு ஒரு செலவும் கிடையாது. ஆனால் கன்சல்டன்சி வழியாக வந்தால் உங்கள் சம்பளத்திற்கேற்ப கன்சல்டன் டிற்கு கமிஷன் கொடுக்கவேண்டும். கம்பெனியில் உள்ள HR மக்கள், தெரிந்தவர்களையும் கன்சல்டன்சி மூலமே வரவழைத்து கன்சல்டன்சி பெறும் கமிஷனில் கமிஷன் பெற்றுக்்றுக் கொள்கிறார்கள். இதனால் கம்பனி பணம் HRக்கும் consultantக்கும் பிரித்துக் கொள்ளப் படுகிறது.
    இது நேர்மையான HR consutants ஆகக் கருதப் படுபவர்கள் செய்வது. இதுதவிர candidates இடம் பணம் வசூலிப்பவர்களும் உண்டு.

    Like

  16. //இன்னொரு முக்கியமான விஷயம் இங்க இருக்கிற முக்கால் வாசி கன்ஸல்டிங் கம்பெனிக்கள் நம்ம ஆளுங்களோடங்கிறதுதான். இதபத்தி விரிவா ஒரு பதிவு போட முயற்சிக்கறேன்.
    //

    நல்லது ரத்தன். கண்டிப்பா போடுங்க. அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்.

    Like

  17. /vara vara IT companies Goverment office maathri aaiduchu…..
    paavam intha vellakaaranga ithellaam theriyaama paisa alli kotraanga. //

    அரசு அலுவலகத்துலயாவது சமத்துவம் உண்டு. எல்லாருமே லஞ்சம் வாங்கலாம் 🙂

    Like

  18. //அய்.டி நிறுவனங்களில் ஒரு லாரி தண்ணீருக்கு கூட 50 ரூபாய் கையூட்டு (Facilitiesக்கு) கொடுக்கவேண்டும். இந்த தகவல் ஒரு மளிகை கடையில் கிடைத்தது. //

    ஓ… அதிர்ச்சித் தகவல்.

    Like

  19. // இதில் என்ன தப்பு இருக்குன்னு புரியலை.. இதுவும் இன்னுமொரு துறை, இன்னுமொரு வருமானம். இந்தியாவில் இருக்கும் ஆள்பலத்துக்கு இப்படி எத்தனை வேலை வந்தாலும் நல்லது தானே?//

    நேரம் இருந்தால் இதைப் படியுங்கள் பொன்ஸ்.

    கன்சல்டன்சிகளின் பிடியில் கணிணி பட்டதாரிகள்

    Like

  20. //இதுதவிர candidates இடம் பணம் வசூலிப்பவர்களும் உண்டு. //

    அதுவும் ஒரு இலட்சம் வரை !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! நம்புங்கள் !

    Like

  21. நினைத்துப் பார்த்தாலே தலை சுற்றுகிறது…. இங்கேயும் ஊழலா என்று !!!

    இது மட்டுமல்ல, டிராவல் டிபார்ட்மண்ட்டில் ப்ளைட் டிக்கெட்ஸ், ஹோட்டல் புக்கிங் (வெளிநாடு) போன்றவற்றிலும் நிறைய விளையாடுகிறார்கள் !!!

    >>

    கேண்டிடேட்ஸிடம் பணம் வாங்குபவர்கள், ஆளைப் பார்த்துத்தான் வாங்குவார்கள், ஏற்கனவே பெரிய வேலையில் (கம்பெனியில்) இருப்பவர்களிடம் இவர்கள் பருப்பு வேகாதல்லவா ??

    Like

  22. //கேண்டிடேட்ஸிடம் பணம் வாங்குபவர்கள், ஆளைப் பார்த்துத்தான் வாங்குவார்கள்//

    அனுபவம் இல்லாதவங்களுக்கு மட்டும் தான் இந்த பிரச்சனைகள் !!

    Like

Leave a comment