பருவம் அடைதலும், பருமன் அடைதலும் !

fat.jpg

பெண்கள் வயதுக்கு வரும் பருவமும் அவர்களுக்குப் பிறக்கபோகும் குழந்தையின் எடைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக லண்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த ஆராய்ச்சியில் தற்போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக பதினோரு வயதுக்கு முன்பே பருவம் அடைந்துவிடும் பெண்களின் குழந்தைகள் வேகமான வளர்ச்சியும், மிக அதிகமான உடல் பருமனும் அடைந்து விடுவதாக தெரிய வந்துள்ளது. பதினைந்து வயதிற்குப் பிறகு பருவத்துக்கு வரும் பெண்களின் குழந்தைகள் சாதாரண வளர்ச்சியைக் கொண்டிருப்பார்கள் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

முதல் இரண்டு வருடங்கள் குழந்தைகள் எத்தகைய வளர்ச்சியுடன் இருப்பார்கள் என்பதை முழுமையாக இதுவே நிர்ணயிக்கிறது என்பது அவர்களின் தீர்க்கமான முடிவு. இத்தகைய குழந்தைகளும் விரைவிலேயே பருவம் அடைந்து விடுவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சி எந்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் வாய்ப்பு இருக்கிறது என்பதை அறிந்து ஆரோக்கிய உணவு குறித்து கவனமுடன் இருக்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இத்தகைய எடைஅதிகரிப்பைத் தவிர்க்க தாய்ப்பால் கொடுக்கும் பழக்கத்தை கண்டிப்பாகப் பின்பற்றவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Advertisements

5 comments on “பருவம் அடைதலும், பருமன் அடைதலும் !

  1. நண்பரே !! – தங்களின் பதிவுகள் அனைத்தும் சில ஆராய்ச்சிகளின் முடிவுகள் அடிப்படையில் இடப்படுகின்றன. அதன் நம்பகத்தன்மை – இந்தியாவில் அதன் பயன்கள் – இவை எல்லாம் பதிவிடுவதற்கு முன் சிந்திக்கிறீர்களா ? தங்களின் பதிவுகள் திரட்டியால் திரட்டப் படுவதில்லை என நினைக்கிறேன். என்னைத் தவிர வேறு யாரும் படிப்பதாகத் தெரிய வில்லையே! ஏன். தங்களின் மனமகிழ்ச்சிக்காக பலனை எதிர் பாராமல் எழுதுகிறீர்களா ? அல்லது எதிர் கால சந்ததியினருக்கு ஒரு ஆராய்ச்சிப் புத்தகமாக கருத்துகளைத் தொகுக்கிறீர்களா ? உங்களது தனிப்பட்ட உரிமையில் குறுக்கிடுவதாக இருப்பின் மன்னிக்கவும் . ஏதோ தங்கள் பதிவின் நோக்கம் அறிந்து கொள்ள ஆசைப் படுகிறேன். அவ்வளவு தான்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s