இதெல்லாம் ஒரு பொழப்பா … த்தூ…

man.jpg

எனது நண்பன் ஒருவன் அலுவல் அழுத்தம் காரணமாக குடும்பத்துடன் இரண்டு வார விடுப்பில் டெல்லி பயணமானான் கடந்த வாரம். வீட்டில் அவனுடைய எண்பத்து இரண்டு வயதான தந்தை மட்டுமே இருந்தார்.

நண்பனுக்கு தந்தை மீது அளவு கடந்த பாசம், நல்ல கைப்பேசி, தங்க சங்கிலி என செலவு செய்து பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்.

டெல்லி சென்ற பின்பும் அவ்வப்போது தந்தையுடன் தொலைபேசிக் கொண்டிருந்தான். ஒரு நாள் திடீரென தந்தையைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. கைப்பேசி அணைக்கப்பட்டுள்ளதாகவே தகவல் வந்து கொண்டிருந்ததால் சற்று பதட்டமாகி தன்னுடைய அண்ணனிடம் தொலை பேசியிருக்கிறார்.

அண்ணன், தந்தையின் வீட்டில் சென்று பார்க்க, வீடு பூட்டப்பட்டிருந்தது. அருகில் எங்கும் விசாரித்துப் பார்த்து, தெரிந்தவர்களிடம் தொலைபேசி, எங்கும் அலைந்து திரிந்து தேடினார்கள். எங்கும் அவர் இல்லை. அதிர்ச்சி !

மறுநாள் காலையில் முதல் வேலையாக காவல் நிலையத்தில் சென்று வழக்குப் பதிவு செய்தார்கள். வழக்கம் போலவே காவல்துறை அலட்சியமாக ‘ முந்தாநேத்து ஒரு ஆக்சிடண்ட் ல ஒரு பாடி கிடந்துது எதுக்கும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று பாருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

பதட்டமடைந்த நண்பரின் அண்ணன் உடனே மருத்துவமனைக்கு விரைந்து சென்று சில பல சிக்கல்களுக்குப் பின் பிணக்கிடங்கைச் சென்று பார்க்க அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ! அவருடைய தந்தை தான் அது !

அதன் பின் நடந்த நிகழ்வுகள் அதிர்ச்சியும், வேதனையும் கலந்தவை. எப்படி விபத்து நடந்தது ? எப்போது ? எங்கே என்றெல்லாம் ஒரு பொறுப்பான பதிலும் வரவில்லை.

கையிலிருந்த கைப்பேசியில் எல்லா தொடர்பு எண்களும் கொடுக்கப்பட்டிருந்தும் எந்த எண்ணுக்கும் யாரும் தொடர்பு கொள்ளவும் இல்லை. விசாரித்தால், கைப்பேசி கிடைக்கவில்லை என்ற பதில் !

கையில், கழுத்தில் கிடந்த தங்கம் எல்லாம் மாயமாகி விட்டிருக்கிறது. அதுவாவது பரவாயில்லை பணம் தின்னிக் கழுகுகள் எடுத்துக் கொள்ளட்டும், ஆனால் கைப்பேசியிலிருந்த எண்களுக்காவது தொடர்பு கொண்டு பேசியிருக்கலாம். பர்சில் இருந்த காகிதங்களிலிருந்தாவது தொடர்பு முகவரி எடுத்திருக்கலாம். ஆனால் எல்லாமே மாயமாகி விட்டிருக்கிறதே !

விபத்து குறித்து விசாரித்தால், படிக்கட்டில் பயணம் செய்து வழுக்கி விழுந்ததாகச் சொல்கிறார்கள். அவர் எப்போதுமே கூட்டமான பேருந்தில் ஏறுவதில்லை. பெரும்பாலும் ஆட்டோவையே பயன்படுத்துகிறார். ஓரமாய் நின்ற அவரை பேருந்து இடித்துத் தள்ளியிருக்க வேண்டும், அதில் அவருக்கு மரணம் நேர்ந்திருக்க வேண்டும் ஆனால் இவையெல்லாம் மூடி மறைக்கப்பட்டிருக்கின்றன

வயதானவர் என்றால் அவருடைய உயிருக்கு மரியாதை இல்லையா ? ஒரு விபத்தில் அடிபட்டு மரணமடைந்த மனிதருடைய வீட்டில் தகவல் சொல்லாமல் கைப்பேசியைத் திருடிக் கொள்வது போன்ற மனிதாபிமானமற்ற கொடூரச் செயல்களினால் மனித குலம் சாதிக்கப் போவது என்ன ?

எரியும் வீட்டில் பிடுங்கும் வரை லாபம் என்னும் கணக்கில் சுனாமிப் பிணங்களில் சங்கிலி சுருட்டும் கொடூரம் நிகழ்ந்த நாட்டில் , விபத்தில் உயிரிழந்தவரின் நகைகளை அபகரிப்பதற்கும் அரசு மருத்துவ மனைகளோ, அல்லது எந்த தனிநபரோ காரணமாய் இருப்பதை அறிகையில் மனம் பதறுகிறது.

என்னிடம் கைப்பேசி இருக்கிறது, பர்ஸ் இருக்கிறது வழியில் விபத்து நடந்தால் வீட்டுக்குத் தகவல் தெரியும் எனும் நம்பிக்கையில் இப்போது மண் விழுந்திருக்கிறது. இருப்பதைப் பிடுங்கிக் கொண்டு ஓடும் மனிதாபிமானத்தின் துளி வெளிச்சம் கூட இல்லாத மனங்களுடன் அலையும் மனிதர்கள் வாழும் தேசத்தில் வாழ்கிறோம் என்னும் எண்ணமே மனதைப் பிசைகிறது.

முல்லைக்குத் தேர்கொடுத்தான் என்று இலக்கியம் பேசிய கதைகள் எல்லாம் நகைச்சுவைக் கதைகள் போல உருமாற்றம் அடைந்திருக்கின்றன. இத்தகைய ஒரு வாழ்க்கைச் சூழலில் வாழ்வதற்காக வேதனைப்படுவதை விட என்ன செய்வதென்று தெரியவில்லை.

மரணங்கள் வலி மிகுந்தவை,
மரணம் சொல்லும் பாடங்களோ கொடூரமானவை.

அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்.

24 comments on “இதெல்லாம் ஒரு பொழப்பா … த்தூ…

  1. இந்த பொழப்புக்கு இவனுங்க எல்லாம் சாகலாம் தே.. பசங்க… கடவுள் இருக்கிறாரா? சந்தேகமே வலுக்கிறது..

    Like

  2. //வயதானவர் என்றால் அவருடைய உயிருக்கு மரியாதை இல்லையா ? ஒரு விபத்தில் அடிபட்டு மரணமடைந்த மனிதருடைய வீட்டில் தகவல் சொல்லாமல் கைப்பேசியைத் திருடிக் கொள்வது போன்ற மனிதாபிமானமற்ற கொடூரச் செயல்களினால் மனித குலம் சாதிக்கப் போவது என்ன ?

    எரியும் வீட்டில் பிடுங்கும் வரை லாபம் என்னும் கணக்கில் சுனாமிப் பிணங்களில் சங்கிலி சுருட்டும் கொடூரம் நிகழ்ந்த நாட்டில் , விபத்தில் உயிரிழந்தவரின் நகைகளை அபகரிப்பதற்கும் அரசு மருத்துவ மனைகளோ, அல்லது எந்த தனிநபரோ காரணமாய் இருப்பதை அறிகையில் மனம் பதறுகிறது.

    என்னிடம் கைப்பேசி இருக்கிறது, பர்ஸ் இருக்கிறது வழியில் விபத்து நடந்தால் வீட்டுக்குத் தகவல் தெரியும் எனும் நம்பிக்கையில் இப்போது மண் விழுந்திருக்கிறது. இருப்பதைப் பிடுங்கிக் கொண்டு ஓடும் மனிதாபிமானத்தின் துளி வெளிச்சம் கூட இல்லாத மனங்களுடன் அலையும் மனிதர்கள் வாழும் தேசத்தில் வாழ்கிறோம் என்னும் எண்ணமே மனதைப் பிசைகிறது.
    //

    வாசித்தவுடன் மனசு கனத்துப் போய் விட்டது. மனிதாபிமானம் செத்துப் போய் விட்டதாகத் தான் தோன்றுகிறது. 😦 விபத்து நடந்தபோது அங்கிருந்தவரில் ஒருவருக்குக் கூடவா நல்லிதயம் இல்லை ????

    அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும் !!!

    Like

  3. /இந்த பொழப்புக்கு இவனுங்க எல்லாம் சாகலாம் … கடவுள் இருக்கிறாரா? சந்தேகமே வலுக்கிறது..//

    கடவுள் செத்துக் கொண்டிருக்கிறார்.. மனித வடிவில்.

    Like

  4. //romba kevalamaana manithargal……..
    It must be happened in so called metropolitan city(Chennai). //

    இதிலென்ன சந்தேகம் ? கிராமத்திலிருந்து நகரத்திற்கு குடிபெயர்ந்த ( என்னைப் போன்ற ) அனைவருக்குமே இது இரட்டிப்பு அதிர்ச்சி தரும் நிகழ்வு 😦

    Like

  5. //வாசித்தவுடன் மனசு கனத்துப் போய் விட்டது. மனிதாபிமானம் செத்துப் போய் விட்டதாகத் தான் தோன்றுகிறது.//

    என்று மலரும் நகரத்தில் ஒரு கிராமத்துக் கலாச்சாரம் ?

    Like

  6. //மரணங்கள் வலி மிகுந்தவை,
    மரணம் சொல்லும் பாடங்களோ கொடூரமானவை.//

    நிசர்சனமான உண்மை

    இப்படியும் சி(ப)ல பேர் இருப்பதால் தான் மனித இனத்தின் மீதே ஒரு வெறுப்பு வருகிறது

    Like

  7. நிதர்சனமான உண்மைகள்.
    நமது மக்களுக்கு சமூக அக்கரையும் சமூக அங்கத்தினர்கள் மீதும் பற்று பாசம் குறைந்து வருடங்கள் பல கடக்கின்றது.
    எல்லோருமே பணப்பித்து பிடித்து அலைய ஆரம்பித்து விட்டார்கள். தங்கள் கூரையில் தீப்பிடித்தால் மட்டுமே இவர்களுக்கெல்லாம் உரைக்கின்றது.

    நம் கூக்குரல்கள் எல்லாம் செவிடன் காதில் ஊதும் சங்குகள்தான்…

    வாழ்த்துக்கள் நண்பரே…

    Like

  8. அந்த முதியவரின் உடமைகளை திருடியவர்களை நடு ரோட்டில் நிற்கவைத்து இடுப்பிற்கு கீழே சுட வேண்டும்…

    Like

  9. //இப்படியும் சி(ப)ல பேர் இருப்பதால் தான் மனித இனத்தின் மீதே ஒரு வெறுப்பு வருகிறது//

    வரக்கூடாதென்று நினைக்கும் வெறுப்புகளும் வந்து விடுகின்றன 😦

    Like

  10. /கொடுமை !
    உங்கள் நண்பர் குடும்பத்துக்கு ஆள்ந்த இரங்கல்கள்//

    நன்றி நண்பரே.. உங்கள் இரங்கலை அவரிடம் தெரிவிக்கிறேன்

    Like

  11. //அந்த முதியவரின் உடமைகளை திருடியவர்களை நடு ரோட்டில் நிற்கவைத்து இடுப்பிற்கு கீழே சுட வேண்டும்…
    //

    நமக்கே இவ்வளவு கோபம் வருகிறதே.. சம்பந்தப்பட்டவர்களுக்கு எவ்வளவு கோபம் இருக்கும் 😦

    Like

  12. // தங்கள் கூரையில் தீப்பிடித்தால் மட்டுமே இவர்களுக்கெல்லாம் உரைக்கின்றது.
    //

    மிகச்சரியாகச் சொன்னீர்கள்

    Like

  13. இப்படியும் சில மனிதர்கள்( ?) இருக்கத்தான் செய்கிறார்கள். சமூகம் எங்கு செல்கிறது ?

    நான் சென்னை வந்து இது போன்ற பல விஷயங்கள் பார்த்து அதிர்ந்து போனேன். கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாத பணந்தின்னிகள்.

    உங்கள் நண்பருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்….

    Like

  14. அடப்பாவிகளா! அவரு வயசப்பாத்து கூடவா உங்களுக்கு அவர் மேல இரக்கம் வரல? அவருக்கு எந்த உதவியும் செய்யலேன்னாலும் பரவாயில்ல, இப்படியாடா ஒரு உபத்தரம் செய்வீங்க! 😦 இப்படி கிடச்ச பணத்தயும், பொருளயும் வச்சு என்ன கோட்டையாடா கட்டப் போறீங்க? நீங்கெல்லாம் வெளங்கவே மாட்டீங்கடா!

    எண்பத்து இரண்டு வயசுல அந்த பெரியவருக்கு இப்படி ஒரு இரக்கமில்லாத மரணம் ஏற்பட்டிருக்க வேண்டாம். நெனச்சுப்பாக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு. உங்களோட நண்பருக்கு என்னோட ஆழ்ந்த இரங்கல்கள்.

    Like

  15. kodumai….
    Antha periyavarin athma santhi adaiyatum….
    Nanbarakum matrum avar kudumbathirkum en azhtha erangalgal..

    Like

  16. இப்படியும் சில மனிதர்கள்( ?) இருக்கத்தான் செய்கிறார்கள். சமூகம் எங்கு செல்கிறது ?

    தெரியலீங்க 😦

    Like

  17. நன்றி நாடோடி.. உங்கள் அனைவரின் இரங்கல்களையும் அவரிடம் தெரிவிக்கிறேன்.

    Like

  18. Nenju Kanakkirathu….
    Manithanai Manithan Thinnuvaan…… Enbathu Ithu thano…….
    Kodumai………..
    Avarin kudumbathainarkku enathu Azhntha Irangalgal…….

    Like

  19. ///இந்த பொழப்புக்கு இவனுங்க எல்லாம் சாகலாம் … கடவுள் இருக்கிறாரா? சந்தேகமே வலுக்கிறது..//

    கடவுள் செத்துக் கொண்டிருக்கிறார்.. மனித வடிவில்.//

    ஏன் அய்யா நாங்கள் பிழை செய்து விட்டு வேறு ஒருவர் மேல் பழியைப்போடவேண்டும்?? இங்கே இறதது ஒரு மனிதனல்ல…. மனிதநேயம்…

    இறந்தவர் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

    Like

Leave a comment