Love Leader on Long Leave !!! என்ன கொடுமை சரவணன் இது !!!

சிரிக்கணும்னா ரொம்ப கஷ்டப்பட வேண்டாம்ன்னு நினைக்கிறேன். ஜிலேபி பிச்சுப் போட்டிருக்கிற ஊர்ல இருக்கிற இந்த போர்டைப் பார்த்தாலே போதும் .

llll.jpg

பிரகாசம் அண்ணே… அடுத்த வாட்டி “LONG LIVE OUR BELOVED LEADER” ன்னு சரியா எழுதுங்கண்ணே 🙂

வாசு தமாசு…

manichitrathazhu.jpg

“ஏங்க ஒரே கதையையே திரும்ப திரும்ப மாத்தி மாத்தி எடுக்கறீங்க” என்னும் கேள்விக்கு, பூச்சியம் முதல் ஒன்பது வரை தான் எண்கள். மற்ற எண்கள் எல்லாம் இந்த எண்கள் ஒன்றோடு ஒன்று சேரும்போ வருவது தான் என்று ஒரு காலத்தில் தத்துவ முத்து உதிர்த்தவர் வாசு.

மணிச்சித்திரத் தாழ் என்னும் மலையாள சூப்பர் ஹிட் படத்தை ‘கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்’ கணக்கில் ஆறு வித்தியாசங்கள் செய்து ஆப்தமித்ரா என்று கன்னடம் பேச வைத்து சூப்பர் ஹிட்டாக்கினார். அதன்பின் அதையே சந்திரமுகியாக்கி எழுநூற்று ஐம்பது நாட்கள் ஓட வைத்தார்.

மணிச்சித்ரத்தாழ் படத்தை இயக்கியவர் ஃபாசில், பிரியதர்சன் இணை இயக்குனராய் இருந்தார். மொத்தத்தில் ஏழெட்டு டைரக்டர்கள் இணைந்து பணியாற்றிய படம் மணிச்சித்திரத் தாழ்.

இப்போது அந்தப் படத்தை இந்தியில் பிரியதர்ஷன் இயக்கியதனால் தான் வாசு ஒரு தமாசு செய்திருக்கிறார். அதாவது தன்னுடைய கதையை திருடி பிரியதர்ஷன் இந்திப்படம் எடுக்கிறார் என்று வழக்கு பதிவு பண்ணியிருக்கிறார் வாசு.

ஐயா வாசு ! இது உங்களுக்கே நியாயமா ? ( ஏதோ ரஜினி நடிச்சதனாலயும், அந்த சந்திரமுகிப் பொண்ணு, சூர்யாவோட பொஞ்சாதி கண்ணு விரிச்சு காட்டினதனாலயும் உங்க படம் இவ்ளோ நாள் ஓடுது. இது தமிழ் கூறும் நல்லுலகுக்கே தெரியும் ) பக்கத்து வீட்டுக் காரனோட கோழியைத் திருடி பிரியாணி வெச்சுட்டீங்க. இப்போ அவன் வீட்டில இருக்கிற முட்டையும் உங்களோடதுன்னு வழக்கு போட்டா எப்படி ?

வழக்கு போடறதுக்கு யோசிக்கிறதுக்குப் பதிலா, கதைக்காக கொஞ்சம் யோசிங்களேன்…